Friday, September 25, 2020

ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

 ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளை வேறு உபயோகத்துக்குப் பயன் படுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட சென்னை மாவட்ட செயலாளர் டி.கே.சண்முகம் உயர் நீதிமன் றத்தில் தாக்கல் செய்த மனுவில், “திருவள்ளூர் மாவட்டம், அம்பத் தூர் தாலுகா, மேனாம்பேடு கிராமம் மற்றும் கொரட்டூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஒழுங்கு படுத்தி, வரன்முறை செய்து பட்டா தர உத்தரவிட வேண்டும். நீர் இல்லாமல், குடிநீருக்கோ, பாச னத்துக்கோ நீண்டகாலம் பயன் படுத்தப்படாமல் இருக்கும் நீர் ஆதாரங்களில் ஆக்கிரமிப்பு இருந் தால் அங்கு பட்டா கொடுப்பதற்கு வகை செய்யும் அரசாணை 30-12-2006-ல் பிறக்கப்பட்டது. அதன்படி,

கொரட்டூர் ஏரி நீண்டகாலமாக பயன்படுத்தப்படாமல் இருப்ப தால், அங்கு ஆக்கிரமித்திருப்பவர் களுக்கு பட்டா தர வேண்டும்” என்று கோரியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், நீர் நிலைகள் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை செல் லும் என்று உத்தரவிட்டது.

மற்றொரு வழக்கில், நீண்ட காலம் பயன்படுத்தப்படாமல் இருக் கிறது என்று காரணம் காட்டி, அங்கு ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

இரண்டு டிவிஷன் பெஞ்ச்களின் தீர்ப்பு முரண்பட்டதாக இருந்ததால், இந்த வழக்கு இரண்டு பேருக்கு மேற்பட்ட நீதிபதிகள் (முழு அமர்வு) விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்திய நாராயணன், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முழு அமர்வு விசாரித்து, “நீர் ஆதாரங்கள் சட்டத்தின் நோக்கமே நீர் நிலைகளைப் பாது காப்பதுதான். பிரதான வழக்கை மீண்டும் டிவிஷன் பெஞ்ச் விசாரிக்க வேண்டும்’’ என்று உத்தர விட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கை விசாரித்து தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகி யோர் கொண்ட முதல் அமர்வு விசாரித்து பிறப்பித்த தீர்ப்பு வருமாறு:

ஏரி, குளம் போன்ற நீர்நிலை கள் பொதுமக்களின் சொத்து. அதே நேரத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு மட்டுமே இருப்ப தாக கொள்ளக்கூடாது. பொதுமக்க ளுக்கும் அதில் பங்கு உள்ளது. மக்கள் அதிக சொத்து வாங்க வேண்டும் என்ற ஆசைப்படுவ தால் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப் படுகின்றன. நீர் நிலைகள் மனி தன் மற்றும் கால்நடைகளின் ஆதார மாக இருக்கிறது.

2007-ல் நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க தமிழக அரசு சட்டம் இயற்றியது. அரசே இந்த சட்டத்தை மறந்து, இயற்கை ஆதாரங்களை அழிக்க முற்படும்போது அதை மக்கள் எதிர்க்கின்றனர். நீர் நிலை களை ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற மும் தீர்ப்பளித்துள்ளது. அதுபோல உயர் நீதிமன்றமும் பல உத்தர வுகள் பிறப்பித்துள்ளது. ஆனால், அந்த உத்தரவுகள் பின்பற்றப் படவில்லை.

அதனால், 2005-ம் ஆண்டு மழை வெள்ளத்தால் உயிர் மற்றும் பொருள் இழப்பு ஏற்பட்டது. இப்போது ஏற்பட்ட வெள்ளத்திலும் உயிர் மற்றும் பொருள் இழப்பு ஏற் பட்டிருக்கிறது. இதற்கு தவறான நிர்வாகமும், அதிகாரிகள் பின் பற்றும் நடைமுறைகளே காரணம். நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப் படுவதால், அங்கு தேங்க வேண் டிய மழைநீர் வெளியேறி மோச மான விளைவுகள் ஏற்படுகின்றன. மழை வெள்ளத்தில் வீடுகள் மூழ்குகின்றன. நீர்நிலைகளுக்கு உள்ளே வீடுகள் கட்டுவதற்கு அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். இதுபோல நீர்நிலைகளை அழிக்க அனுமதிக்க முடியாது. நீர் நிலைகளை வேறு உபயோகத் துக்கு பயன்படுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை.

இந்த வழக்கில், ஏரிக்குள் நீண்டகாலமாக இருப்பதாக கூறு வதற்கு ஆதாரம் எதுவும் சமர்ப்பிக்க படவில்லை. அப்படியே இருந் தாலும் அந்த இடத்தில் அவர்க ளுக்கு உரிமை இல்லை.ஏனென் றால் அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப் படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்

No comments:

Post a Comment