Friday, December 8, 2017

லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம்

மக்கள் நீதிமன்றம்

லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் சமாதானநிலை மற்றும் சமரசம் மூலம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க இந்தியஅரசால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம் ஆகும். இந்திய நீதிமன்றங்கள், தங்களிடம் நிலுவையில் உள்ள வழக்குகளை, மனுதாரர்களின் விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது தன்னிச்சையாகவோ சமரச முறையில் தீர்வு காண மக்கள் நீதி மன்றங்களுக்கு அனுப்பலாம்.[1] இது உரிமையியல் விசாரணை முறைச் சட்டப்பிரிவு 89-ன் கீழ் வருகின்றது.[2]

செயல்படும் முறைதொகு

சட்டப்பணிகள் ஆணைக் குழு பிரிவு 19-தின் படி, மக்கள் நீதிமன்றம், 3 பேர் கொண்ட அமர்வாக இருக்கும். அதில் ஒருவர் பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி, மற்றொருவர் சமூக நலப் பணியாளர் அல்லது பொது நல ஊழியர், மூன்றாம் நபர் வழக்கறிஞர்.[3]

வரலாறுதொகு

இது ஒரு மாற்றுமுறையில் சச்சரவுகளுக்கு தீர்வு காணும் ஒரு வழிமுறையாகும். "லோக்" என்பது மக்களையும் "அதாலத்" என்பது நீதிமன்றத்தையும் குறிக்கும். மக்கள் நீதிமன்றம் என்ற எண்ணத்தினை முன்மொழிந்ததில் இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான பி.என்.பகவதிஅவர்களுக்கு முதன்மையான பங்குண்டு. மக்கள் நீதிமன்றம் முதன் முதலில் குஜராத் மாநிலத்தில் ஜூனகார் என்ற இடத்தில் மார்ச் 14, 1982 அன்று லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதி மன்றம் நடந்தது. [4]

சிறப்புக்கள்தொகு

இந்த மக்கள் நீதிமன்றம் மூலம் கோர்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் மட்டுமல்லாமல் கோர்ட்டுக்கு வர இருக்கும் தாவாக்களுக்கும் தீர்வு கண்டுவிடலாம். இங்கு தீர்வுகாணப்பட்டால் அதற்குமேல் மேல்முறையீட்டிற்குப் போக முடியாது.

தீர்க்கப்படும் வழக்கு வகைகள்தொகு

காசோலை தொடர்பான வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், குடும்பப் பிரச்னைகள் தொடர்பான வழக்குகள், தொழில் தகராறுகள், தொழிலாளர் பிரச்னை தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகளில் சமாதானம் ஏற்படுத்திக் கொள்ளத் தன்மையுள்ள வழக்குகள், நில ஆர்ஜிதம் மற்றும் இழப்பீடு தொடர்பான வழக்குகள், வங்கிக் கடன் பிரச்னைகள், வாடகை விவகாரங்கள், விற்பனை வரி, வருமான வரி மற்றும் மறைமுக வரி தொடர்பான பிரச்னைகள்.

2013 இல்தொகு

இந்தியாவில் நவம்பர் 23, 2013 அன்று வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காண உதவும் மெகா லோக் அதாலத் நாடு முழுவதும் நடைபெற்றது[5]. வட்டார அளவிலான கீழமை நீதிமன்றம் தொடங்கி, உச்ச நீதிமன்றம் வரை நாடு முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் இந்த அதாலத் நடத்தப்பட்டது. ஒரே நாளில் இந்தியா முழுவதிலும் 35 லட்சம் வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டன.[6]

2014 இல்தொகு

டிசம்பர் 6, 2014-ல் சேலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய நிகழ்வில், சுமார் ஐம்பதாயிரம் வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 42,695 வழக்குகளுக்கு மக்கள் நீதி மன்றம் மூலம் சமரச தீர்வு காணப்பட்டன. இந்த வழக்குகளில் ஏற்பட்ட தீர்வுகள் மூலம் இழப்பீட்டுத் தொகையாக ரூ.31 கோடியே 10 லட்சம் வழங்கப்பட்டது

Sunday, December 3, 2017

பெண் சம்பாதித்தாலும் ஜீவனாம்சம் தரணும்' டில்லி கோர்ட்


'பெண் சம்பாதித்தாலும் ஜீவனாம்சம் தரணும்'
டில்லி கோர்ட்
15-04-2017
 'சம்பாதிக்கும் திறன் இருப்பதால், விவாகரத்து வழக்கில் பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர மறுக்க முடியாது' என, டில்லி கோர்ட் கூறியுள்ளது.

டில்லியைச் சேர்ந்த பெண், மாஜிஸ்திரேட் கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், டில்லி செஷன்ஸ் கோர்ட் அளித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: இந்த வழக்கை தொடர்ந்துள்ள பெண், பட்டதாரி. அவர் நினைத்தால், தன்னுடைய தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேலைக்கு சென்று சம்பாதிக்க முடியும் என, கணவன் கூறியுள்ளதை ஏற்க முடியாது. ஒரு பெண், வேலைக்கு சென்று சம்பாதிக்கும் திறன் பெற்றிருந்தாலும், அதை காரணம் காட்டி, ஜீவனாம்சம், இழப்பீடு தர முடியாது என கூற முடியாது. இவ்வாறு கோர்ட் கூறி உள்ளது.

TOP 20 Leading Judgment on Maintainance IN FAVOUR OF HUSBANDS

Leading Judgment on Maintainance :

*1. Reduced interim maintenance. (SC), Hbl J. R. M. Lodha, order on 20-07-2010, Appeal No. 5660 of 2010, Arising SLP (C) No. 6736 of 2007, Neeta Rakesh Jain Vs Rakesh Jeetmal Jain. Citation No. AIR 2010 SC 3540; (2010) 12 SCC 242; 2010 (7) JT I 76 (SC).*
🌀
*2. Wife is not entitled to maintenance who deserted her husband. (Supreme Court), Bench Hbl JJ. S. Ahmed & D. Wadhwa, order on 02-03-200, AIR 2000 SC 952, 2000(2) ALD Cri 15, 2000Cr. LJ 1498, Rohtash Singh Vs Smt. Ramendrei & Ors. Citation No. (2000) 3 SCC 180; JT 2000 (2) SC 553.*
🌹
*3. Maintenance not granted as it is proved that wife wants to reside separately. No maintenance to deserting wife. (HC Chhattisgarh), Hbl J., L. C. Bhadoo, order on 15 -02-2004, Crl. Revision No. 544/2003, Shiv Kumar Yadav Vs Santoshi Yadav.*
🌀
*4. Husband can get PF details of wife. (CIC, Delhi), Decision No. 1816/ IC (A) 2008, F No. CIC/MA/A/2007/00583, Prof M.M. Ansari, order on 10 Jan 2008.*
🌹
*5. Wife guilty of contempt of court, maintenance denied with cost. (HC Delhi), Hbl J. S. N. Dhingra, order on 25-01-2010, Cont. Case (C) 482 of 2008, Gurbinder Singh Vs Manjit Kaur.*
🌹
*6. Children have to maintain their parents. (High Court Gujrat), Hbl J. Akhil Kureshi, order on 09-02-2011, CR RA/759 of 2009, 4/4, Hasmukhbhai Narayan Bhai Viramiya Vs State & Ors.*
🌀
*7. Conditions when maintenance to be paid. (High Court Delhi), Mr. Pradeep Nandrajog J., order reserved on 02-04-2007, order on 14-04-2007, CM (M) No. 367 of 2007, Alok Kumar Jain Vs Purnima Jain. Citation No. 2007 (96) DRJ 115.*
🍁
*8. All states amends in Sec 125 CrPC is invalid. (SC), Bench Hbl M. Katju, Gyan Sudha Mishra JJ., order on 11 Jan 2011, Crl Appeal No. 107 of 2011, SLP (Crl) No. 6568 of 2009, Manoj Yadav Vs Pushpa Yadav. Citation No. 2011 : 1 L.W. (Crl.) 520.*
🍁
*9. Wife should clear that she is unable to maintain her. No maintenance to enable wife who deserted her husband. (High Court Karnataka), Bench Hbl J. M. Patil, order on 13-02-1980, Haunsabai Vs Balkrishna Krishna Badigar. Citation Nos. 1981 Cri LJ 110; ILR 1980 KAR 612; 1980 (2) Kar LJ 158.*
🌹
*5 STEPS TO WIN THE INTERIM MAINTENANCE*
🌀
*10. Maintenance on actual earning. (High Court Delhi), Hbl J. Shiv Narayan Dhingra, order reserved 25-07-2008, order on 18-09-2008, CM (M) No. 1790 of 2006 and CM No. 1435 of 2006, Ritu Raj Kant Vs Anita. Citation No. 154 (2008) DLT 505.*
🌀
*11. Maintenance denied for working wife. (High Court Madras), Hbl A. S. Venkatachalamoorthy J., order on 21-06-2002, Kumaresan Vs Aswathi. Citation No. (2002) 2 MLJ 760.*

*12. No maintenance for capable and working wife. (High Court Maharastra), Hbl J. C. Chitre J., order on 24-03-2000, Smt. Mamta Jaiswal Vs Rajesh Jaiswal. Citation No. 2000 (4) MPHT 457; II (2000) DMC 170.*
🌀
*13. No maintenance to earning wife, only to children. (High Court Karnataka), Hbl K. Manjunath J., order on 22-08-2005, AIR 2005 Kant 417, ILR 2005 KAR 4981, Dr. E. Shanthi Vs Dr. H K. Vasudev.*
🌹
*14. No Maintenance to working wife in 125 CrPC. (High Court Madras), Hbl P. Sathasivam J., order on 21-01-2003, Manokaran @ Ramamoorthy Vs M. Devaki. Citation Nos. AIR 2003 Mad 212; I (2003) DMC 799; (2003) I MLJ 752 (Mad), CMP No. 16264 of 2002.*
🌹
*15. No Maintenance to wife, but only to child. (HC Mumbai), Hbl J. B. L. Marlapalle, order on 18-7-2009, Appeal No. 20 of 2005 and 144 of 2005, Smt. Manju Kamal Mehra Vs Kamal Puskar Mehra. Citation Nos. 2010 AIR (Bom) 34; 2009 (5) AIIMR 798; Legal/ 360.in 114983; LS/Bom/2009/1374.*
🌹
*16. No maintenance U/s 125 CrPC when wife deserts hubby without cause and also she is earning. No Maintenance to capable wife, but only to child and no maintenance to wife living in adultery. (HC Uttaranchal), Hbl J. Alok Singh, order on 18-11-2009, Crl. Rev. No. 201 of 2006, Smt. Archana Gupta & ors Vs Rajeev Gupta.*
🌀
*17. Wife should clear that she is unable to maintain herself. (HC Allahabad), Hbl J. B. Katju, order on 25-03-1976, Manmohan Singh Vs Smt. Mahindra Kaur. Citation No. 1976 Cri LJ 1664.*
🌹
*18. No Maintenance if wife is working. (HC Uttaranchal), Hbl J. Dharamveer, order on 25-10-2010, Crl Rev. No. 88 of 2002, Vikas Jain Vs Deepali @ Ayushi. Citation No. LAWS (UTN) 2010-1-36.*
🌹
*19. Wife living separate troubled in family no maintenance. (HC Madras), Hbl J. P. R. Shiva Kumar, order on 22-02-2008, Crl. R. C. No. 1491 of 2005, Marimuthu Vs Janaki. Citation No. AIR 2003 Mad 212; I(2003) DMC 799; (2003) I MLJ 752

*20. All states amends in Sec 125 Crpc is invalid .(SC),Bench Hbl M.Katju, Gyan Sudha Mishra JJ., Order on 11 jan 2011 ,Crl Appeal No .107 of 2011,SLP (Crl) No 6568 of 2009 Manoj Yadav Vs Pushpa Yadav Citation No 2011: 1 L.W. (Crl.) 520   

25 LANDMARK DIVORCE JUDGMENTS ON MENTAL CRUELTIES BY WIFE


Marriages in India are considered as the unification of a girl and a boy for approval of social status in the society. Nowadays marriages are easily broken either due to the fault of the husband or the wife. Also, there were situations where the wife makes a false complaint against her husband. In most of such cases, the husband had no remedy because the laws of India are in favor of women.

Most of false cases are filed for Misuse of Dowry Laws, Domestic Violence Act and ‘Sec: 498-A’ of IPC by wife against husband and in-laws of husband through lodging false complaints, Desertion of wife who deliberately intending for separation , extra marital affairs,  Wife opting for second marriage without applying for the divorce ,Threatening to leave husband’s home and threat to commit suicide by the wife. Cruel behaviour of wife, Abusing and accusing husband, Wife refusing to have sex with husband without any sufficient , filing  FIR against husband and in-laws which has later proved as false report, Conduct and misbehaviour of the wife against husband, mental disorder or unsoundness of wife, Impotency of wife, illicit relationship of wife with some other person and Wife suffering from the filarial etc.

Here is list of top 25 cases where mental cruelty did by wife

1.SUPREME COURT OF INDIA: Dated  5 January 2007

 “Demand for Domestic Expenses is not dowry”

2. DELHI HIGH COURT

“False 498A Being The Basis For A Divorce and False complaint family arrest ground for Divorce  “

3. MADHYA PRADESH HIGH COURT: Dated  18 January 1996

“Divorce on filling False 498a and defame”. 

4. ALLAHABAD HIGH COURT: Dated  4 February 2003

“False complaints by Wife eligible for Divorce”.

5. KERALA HIGH COURT: Dated  30 January 1997

“Filling Many Cases Lead to Divorce”


6. MADRAS HIGH COURT: Dated  15 December, 2006 

“DNA test for paternity and Divorce”. 

7.MADHYA PRADESH HIGH COURT: Dated  13 April 2006

“Divorce on False case, cruelty and desertion”  

8. MUMBAI HIGH COURT: Dated 4 April 2007

“Ex-parte divorce to the husband when acquitted in 498a”.

9. MADHYA PRADESH HIGH COURT: Dated  13 April 2006

“Divorce on False case, cruelty, and desertion”.

10. DELHI HIGH COURT: Dated  13 December 2010

“Marriage between a Hindu and non-Hindu under HMA not valid”.  

11.PUNJAB HARYANA HIGH COURT:   Dated  4 February 2010

“ 6 Months waiver in divorce”.


12. HIMACHAL PRADESH HIGH COURT: Dated  18 November 1996

“ Burden is upon the woman to establish the paternity”.  

13.MADHYA PRADESH HIGH COURT: Dated 28 February 2003

“Cruelty and Desertion grounds for Divorce”. 

14.MADRAS HIGH COURT: Dated  26 July 2006

“Divorce on Denial of Sex”.

15. MADRAS HIGH COURT: Dated 21 July 2005

“Divorce on Cruelty, Desertion and Non consummated Marriage”.  

16. SUPREME COURT OF INDIA: Dated  09-07-1991

 “Conditions for the validity of Foreign Divorce Decree (NRI)”.  

17. ANDHRA HIGH COURT: Dated  24 July 2006

“Divorce on impotency and Cruelty”.

18. MUMBAI HIGH COURT: Dated  2008

“Repeated Suicide threats amounts cruelty divorce ground”.

19. SUPREME COURT OF INDIA: Dated  2 May 1969

“ Divorce on No consummated Marriage”.

20.MUMBAI HIGH COURT

“Wife guilty of desertion & cruelty”. 

21.MUMBAI HIGH COURT

“Dissolution of the marriage on the ground of desertion and cruelty”.  

22.DELHI HIGH COURT:   Dated 7 January 2010

“ 1 Year Separation before filling Section 13B and Waiver”.  

23.SUPREME COURT OF INDIA

“Irretrievable Breakdown Grounds for Divorce”.  

24. MUMBAI HIGH COURT

Wild allegations against spouse is cruelty  

25. SUPREME COURT OF INDIA:  Dated  7 November 2008 


“ Pregnancy Aborted Divorce Granted “. 

Saturday, December 2, 2017

காசோலை கொடுத்தவர் தேதியிட்டு வழங்குகிறார்.

காசோலை  கொடுத்தவர் தேதியிட்டு  வழங்குகிறார்.

காசோலை வழங்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள் அதை  காசோலை பெற்றவர்  வங்கி  கணக்கில்   போட்டு பணத்தை வசூலிக்க வேண்டும்.

( முன்பு, காசோலை பெறபட்ட தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு செல்லும் )

 காசோலை பெற்றவர்  அதனை வங்கியில் போடுகிறார்.வங்கியில் காசோலை  கொடுத்தவர்  அக்கவுண்டில் பணம் இல்லை என்று அந்த காசோலை திருப்பித் தரப்பட்டு, வங்கியில் இருந்து அதற்கான மெமோ  காசோலை  பெற்றவரிடம்   வழங்கப்படுகிறது.

‪#‎சட்ட‬ ‪#‎அறிவிப்பு‬ ‪#‎வழங்க‬ ‪#‎வேண்டும்‬ :
****************************************************.
காசோலை வழங்கியவர்  கணக்கில் பணம் இல்லை என்று காசோலை திரும்பி வந்து, வங்கி அதற்கான மெமோ வழங்கும் வழங்கும் பட்சத்தில், அந்த மெமொ பெற்ற தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் காசோலை வழங்கியவருக்கு  ஒரு சட்டப்படியான அறிவிப்பை காசோலையை பெற்றவர்  வழங்க வேண்டும்.

இந்த அறிவிப்பு வழங்குவது மிக கட்டாயமானதாகும்.

‪#‎என்ன‬ ‪#‎செய்ய‬ #வேண்டும் : 1
************************************
 காசோலையை கொடுத்தவருக்கு  முறைப்படி சட்ட அறிவிப்பை காசோலையை பெற்றவர்   அனுப்புகிறார்.
.
அறிவிப்பு வழங்கிய பின்னர் காசோலை    கொடுத்தவர்  அறிவிப்பை  பெற்றுக்கொண்ட தேதியில் இருந்து 15 நாட்களுக்குள்  பணத்தை திருப்பி அளிக்க வேண்டும்.

15 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால்  காசோலை  கொடுத்தவர் பணம்   தரவில்லை.
காசோலை வழங்கியவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பான 15 நாட்கள் முடிந்ததும், அதன்பின்னர் 30 நாட்களுக்குள் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குமார் மீது காசோலை மோசடி வழக்கை காசோலை பெற்றவர்  தாக்கல் செய்யலாம்.

இந்த கால அளவில் ஏதாவது தவறு ஏற்பட்டால், காசோலை மோசடி வழக்கு தொடரமுடியாது.

#என்ன ‪#‎செய்யக்‬ ‪#‎கூடாது‬ :
************************************
காசோலையை 16.05.2015 அன்று வங்கியில் பணம் வசூலிக்க  காசோலை பெற்றவர் தாக்கல் செய்கின்றார். காசோலை  கொடுத்தவர்  கணக்கில் பணம் இல்லை என்று வங்கியாளர் காசோலையை  பெற்றவரிடம்  தெரியப்படுத்துகின்றார்.

காசோலை கொடுத்தவரை, காசோலை  பெற்றவர்   தொடர்பு கொண்டால், சற்று பொறுத்து கொள்ளுங்கள் இன்னும் ஒரு மாதத்தில் பணத்தை கொடுத்து விடுவேன் என்கின்றார்.
அவர் பேச்சை கேட்டு காசோலை  பெற்றவர்     சட்டப்படியான நோட்டிஸ் 30 நாட்களுக்குள் அனுப்பாமல் இருக்கிறார்.
ஒரு மாதம் கழிகின்றது.
பணம் தரவில்லை.
பணத்தை சங்கரன் கேட்டால், காசோலை கொடுத்தவர் பணம் கொடுக்க மறுக்கின்றார்.
30 நாட்களுக்குள் சட்டப்படியான அறிவிப்பு அனுப்பவில்லை என்பதால்.
இப்போது திரும்பி வந்த காசோலையை வைத்து வழக்கிடமுடியாது.

#என்ன #செய்ய #வேண்டும் : 2
****************************************
காசோலையை தாக்கல் செய்வதற்கான கால அளவு  குறிப்பிட்ட தேதியில் இருந்து மூன்று மாதம்   வரை இருப்பதால், திரும்பவும் ஒரு முறை அந்த காசோலையை பெற்றவர்   வங்கியில் தாக்கல் செய்யவேண்டும்.
அது திரும்பி வந்த பிறகு, உடனடியாக  காசோலையை கொடுத்தவருக்கு  சட்ட அறிவிப்பு அனுப்ப வேண்டும்.
அனுப்புகின்ற அந்த சட்ட அறிவிப்பில் முதலாவதாக பணம் வசூலிக்க காசோலை வங்கியில் போட்ட விபரத்தையும், காசோலை திரும்பி வந்த விபரத்தையும், காசோலையை கொடுத்தவர்   பணத்தை ஒரு மாதத்துக்குள் தருவதாகக் கூறியதால் சட்டப்படியான அறிவிப்பு வழங்காமல் இருந்ததையும் தெளிவாக அதில் குறிப்பிடவேண்டும்.

பணத்தை வசூலிக்க குறிப்பிட்ட தேதியில் இருந்து மூன்று மாதம்   எத்தனை முறை வேண்டுமானாலும் வங்கியில் அந்தக் காசோலையை தாக்கல் செய்யலாம்.
காசோலை திரும்பி வந்ததும் சட்ட அறிவிப்பு வழங்கலாம்.
ஆனால், கடைசி 15 நாட்கள் இருக்கும் போது தாக்கல் செய்து, காசோலை திரும்பி வந்தால், காசோலையை வழங்கியவர் சொல்லும் கதைகளை (பணத்தை இன்னும் ஒரு மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்) கேட்காமல் சட்ட அறிவிப்பு வழங்குவது நல்லது.
அல்லது காசோலை வழங்கியவர் மீது நம்பிக்கை இருக்கும் பட்சத்தில், புதிதாக ஒரு காசோலையை அவரிடம் பெற்ற பிறகே, அவர் நமக்கு பணத்தை கொடுக்க வாய்ப்பளிக்கலாம்.
#காசோலை ‪#‎அளித்தவர்‬ ‪#‎இறந்துவிட்டால்‬?
*************************************************************
வாடிக்கையாளருக்கும் வங்கிக்கும் உள்ள உறவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்பட்டதாகும்.
வாடிக்கையாளர் இறந்துவிட்டால், அதன் பின்னர் வங்கியானது வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து பணத்தை கழிக்க முடியாது.
வாடிக்கையாளர் இறந்துவிட்டார் என்று வங்கி காசோலையை திருப்பி அனுப்பினாலும் அதன் அடிப்படையில் காசோலை மோசடி வழக்கிடமுடியாது ஏனெனில் சட்டப்படியான அறிவிப்பை காசோலை வழங்கியவருக்கு மட்டுமே அனுப்பவேண்டும்.
மேலும் இறந்தவர் மீது குற்றவியல் வழக்கு தொடரமுடியாது.
ஆனால், காசோலை கொடுத்தவரின் வாரிசுதாரர்கள் மீது சிவில் வழக்கு போடலாம். இறந்தவர் ஏதாவது சொத்தை விட்டு சென்றால் அந்த சொத்தின் மீது நீதிமன்றத்தின் வாயிலாக உரிமை கோரலாம்.
இறந்தவருக்கு எந்தவித சொத்தும் இல்லையென்றால் இறந்தவர் கடனை அடைக்க அவரின் வாரிசுதாரர்கள் கடமைபட்டவர்கள் அல்ல.
வாரிசுதாரர்களின் கடமையானது இறந்தவரின் சொத்தில் அடையும் உரிமை அளவே ஆகும்.

எவை ஈவ் டீசிங்?

ஈவ் டீசிங் இந்திய தண்டனை சட்ட பிரிவு 509,294 படி குற்றம். எவை ஈவ் டீசிங்?
1. வாய் மொழியில் ஈவ் டீஸ் செய்வது          
2. உடல் ரீதியாக ஈவ் டீஸ் செய்வது.                
 3. மன ரீதியாக harass செய்வது                    
  4. செக்ஸ் harass                                                  
5. சில பொருட்கள் மூலம் harass செய்வது என்று உச்ச நீதிமன்றம் சொல்லி உள்ளது.
தனி சட்டம் இல்லாவிட்டால் மேற்கண்ட பிரிவில் வழக்கு பதியலாம்.
( DGP of Police Vs Samuthiran AIR 2013(SC)14 :- 2013(1)SCC 598).

LEGAL NOTICE அறிவிப்பு என்றால் என்ன...?

 LEGAL NOTICE

 அறிவிப்பு என்றால் என்ன...? எப்படி அனுப்புவது....


# ஒரு செயலை செய்யக் கோரி அல்லது ஒரு செயலை செய்யாமல் இருக்கக் கோரி அல்லது செய்யப்படவிருக்கும் சில செயல்களால் ஏற்படப்போகும் விளைவுகளை குறித்து அறிவுறுத்தி, ஒரு நபர் மற்றொரு நபருக்கு எழுத்து மூலமாக கொடுக்கும் எச்சரிக்கை அல்லது தகவல் தான் "அறிவிப்பு" எனப்படுகிறது.

நாம் தாக்கல் செய்யப்போகும் வழக்கு எந்த வகையான வழக்காக இருந்தாலும், அதற்கு முன்பு மறு தரப்பினருக்கு வழக்கு மூலம் (Cause of Action) குறித்த அறிவிப்பு ஒன்றை கொடுப்பது நல்லது. ஏனென்றால் அறிவிப்பு கிடைக்க பெற்றவுடன் மறு தரப்பினர் சமாதானத்திற்கு வர வாய்ப்பு அதிகமாக உள்ளது. பணிந்து போகவும் வாய்ப்புகள் உள்ளது. சுருக்கமாக கூற வேண்டும் என்றால் மறு தரப்பினர் தனது நிலையை உணர்ந்து, அதை மாற்றிக் கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை அளிப்பதே அறிவிப்பின் நோக்கமாகும்.

அறிவிப்பு ஒன்றை சம்பந்தப்பட்ட தரப்பினர் அல்லது அவரது முகவர் (Agent) அல்லது அவரது வழக்கறிஞர் கொடுக்கலாம்.

# அறிவிப்பு இரண்டு விதம் உள்ளது.

1. சட்டப்படி கொடுக்க வேண்டிய அறிவிப்பு (Statutory Notice (or) Mandatory Notice)

2. கடப்பாட்டிற்குரிய அறிவிப்பு
(Obligatory Notice)

இதில் சட்டப்படியிலான அறிவிப்பை கொடுக்க தவறினால், சம்மந்தப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதற்கு அது காரணமாக அமையலாம். ஆனால் கடப்பாட்டிற்குரிய அறிவிப்பை கொடுக்காமலும் வழக்கு தொடரலாம். இதில் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்ற அபாயம் இல்லை. அதாவது கடப்பாட்டிற்குரிய அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்பது தரப்பினரின் விருப்பத்தை பொறுத்தது. இந்த அறிவிப்பை தரப்பினர் கொடுக்கலாம் அல்லது கொடுக்காமலும் இருக்கலாம்.

# சட்டப்படியான அறிவிப்பிற்கு எடுத்துக்காட்டாக கீழ்க்கண்டவற்றை கூறலாம்.

1. அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடரும் முன் உ. ந. மு. ச பிரிவு 80 ன் கீழ் கொடுக்க வேண்டிய அறிவிப்பு

2. சொத்துரிமை மாற்றுச் சட்டத்தின் 106 வது பிரிவின்படி கொடுக்க வேண்டிய அறிவிப்பு

3. இரயில்வே சட்டத்தின் பிரிவு 106 ன் கீழ் கொடுக்க வேண்டிய அறிவிப்பு

ஆகியன சட்டப்படி கட்டாயம் கொடுக்க வேண்டிய அறிவிப்புகள் ஆகும். இந்த அறிவிப்பு கொடுக்கப்படவில்லை என்றால் வழக்கே இல்லை என்று சட்டம் கூறுகிறது.

# கடப்பாட்டிற்குரிய அறிவிப்புக்கு எடுத்துக்காட்டாக கீழ்க்கண்டவற்றை கூறலாம்.

1. கடனுறுதிச் சீட்டின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட கடன் தொகையை திரும்ப பெறுவதற்காக கொடுக்கப்படும் அறிவிப்பு

2. சரக்குகளின் விலைக்காக கொடுக்கப்படும் அறிவிப்பு

அறிவிப்பின் உள்ளடக்கம் எப்படி இருக்க வேண்டும்? Contents of Notice :

இப்படித்தான் அறிவிப்பு இருக்க வேண்டும் என்று கடுமையான விதிகளோ, படிவமோ ஏதுமில்லை. பொதுவாக நாம் தாக்கல் செய்ய இருக்கும் வழக்கின் பொருண்மைகள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் ஒரு அறிவிப்பை தயாரிக்கலாம். எனினும் குறைந்தபட்சம் பின்வரும் விவரங்கள் ஒரு அறிவிப்பில் இருக்க வேண்டும்.

1. அறிவிப்பு தேதி

2. அறிவிப்பை யார் கொடுக்கிறாரோ அவரது பெயர் மற்றும் முகவரி

3. அறிவிப்பு யாருக்கு கொடுக்கப்படுகிறதோ அவரது பெயர் மற்றும் முகவரி

4. பிரச்சினை குறித்த விபரம் (சுருக்கமாக)

5. அறிவிப்பிற்கான வழக்கு மூலம்

6. கோரப்படும் பரிகாரம்

7. பரிகாரத்தை நிறைவேற்ற தவறினால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விபரம்

8. எவ்வளவு நாட்களுக்குள் பரிகாரத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற விபரம்

9. அறிவிப்பு ஒரு வழக்கறிஞர் மூலமாக கொடுக்கப்பட்டால் அவரது கையொப்பம்

10. அறிவிப்பின் தலைப்பில் தேதி குறிப்பிடப்படாவிட்டால், கடைசியில் இடமும், தேதி விவரத்தையும் குறிப்பிட வேண்டும்.

# அறிவிப்பு அனுப்பும் முறை (Service of Notice) :

யாருக்கு அறிவிப்பு கொடுக்க வேண்டுமோ, அவர் வசம் அதனை நேர்முகமாக கொடுக்கலாம். இல்லையென்றால் பதிவுத் தபாலில் அஞ்சல் ஒப்புகை அட்டையுடன் அனுப்பி வைக்க வேண்டும்.
         ------------###------------

Friday, December 1, 2017

சைபர் குற்றங்கள் - ஒரு பார்வை !

சைபர் குற்றங்கள் - ஒரு பார்வை !

தொழில்நுட்பம் வளரவளர பிரச்னைகளும் கூடவே சேர்ந்து வளருகிறது. முன்பெல்லாம் காவல் நிலையங்​களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். இப்போது, சைபர் க்ரைம் பிரிவு களில்தான் கூட்டம் நெட்டித்தள்ளுகிறது. செல்போனில் மிரட்டல், ஆபாச  எஸ்.எம்.எஸ்., நைஜீரியர்களின் மோசடியில் சிக்கி ஏமாறுகிறவர்கள் என்று இங்கே படை யெடுப்பவர்கள் ஏராளம். இதில் சிக்கிக்கொள் பவர்களும் ஏராளம். விடுபட முடியாமல் தவிர்ப்பவர்களும் ஏராளம். !

இந்தியாவில் இணையதளம் தொடர்பான குற்றங்களால் நடப்பாண்டில் 24,630 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் என தெரியவந்துள்ளது. சைமன்டெக் நிறுவனம் இது தொடர்பாக ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது. 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2013 ஆண்டு ஜூலை வரை ஆய்வு நடைபெற்றது. 1000 இந்தியர்கள் உள்ளிட்ட 24 நாடுகளைச் சேர்ந்த 13000 இளைஞர்கள் இதில் பங்கேற்றனர்.மொபைல்போன் மூலமான திருட்டு 58 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இ.மெயில் ஐடி, பாஸ்வேர்ட் போன்றவைகளை ஹேக் செய்வதும் கண்டறியப்பட்டுள்ளது.நாடும் நகரமும் டிஜிட்டல் வயப்படுவதைத் தொடர்ந்து அனுபவிக்கும் அவஸ்தைகளைப் பற்றித்தான் இந்த சிறப்புக் கட்டுரை

இணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொரு பக்கம் ஹேக்கிங், ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. சைபர் க்ரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றியும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் சிறிதளவு இங்கு பார்ப்போம்.

இணைய குற்றங்கள் (Cyber Crimes):

1. ஸ்பாம்(Spam) எனப்படும் தேவையில்லாத  மெயில்கள். இவற்றை பற்றி ஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள் என்ற பதிவில் பார்த்தோம்.

2. கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் இணையத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும்பொழுது, கடவுச்சொல் உள்பட கணக்கு விவரங்களை திருடுவது.

3. பாலியல் ரீதியான தொல்லைகள் . சாட்டிங்கில் ஆரம்பித்து டேட்டிங்கில் முடிகிறது இன்றைக்கு சில இணைய நட்புகள். அதுமட்டுமின்றி காதலன் என்ற பெயரில் வக்கிர வெறிபிடித்த கயவர்கள் பெண்களை ஆபாசமாக படம்பிடித்து அதனை இணையத்தில் வெளியிடுகிறார்கள். மேலும் அதனைக் கொண்டே பெண்களை மிரட்டி வருகிறார்கள்.

4. போதை பொருள் விற்பனை. தடைசெய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்வதற்கும் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

5. இணையதளங்களை ஹேக் செய்வது. ஹேக்கர்களிடமிருந்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ-வும் தப்பவில்லை, மின்னணு சாதனங்களில் ஜாம்பவனாக திகழும் சோனி(Sony)யும் தப்பவில்லை. சமீப காலமாக பல தளங்கள் ஹேக் செய்யப்படுகின்றது.

6. இருபது வயதுக்குட்பட்டவர்களுக்கு அல்லது இருபது வயதுக்குட்பட்டவர்களின் ஆபாச புகைப்படங்கள், படங்கள் இன்னும் சிலவற்றை இணையத்தில் பதிவது.  [ஒன்றுமட்டும் புரியவில்லை. அது போன்ற ஆபாச தளங்களுக்கு சென்றால் கேள்வி கேட்கும். நீங்கள் இருபது  வயதுக்குட்பட்டவரா? இல்லையா? என்று. சிறுவர்களும் "ஆம்" என்பதை க்ளிக் செய்தால் எளிதாக அந்த தளங்களை பார்க்கலாம். இது எப்படி இருக்கிறது என்றால், சிகரெட் பாக்கெட்டில் மண்டை ஓடு படத்தை போடுவது போல தான். ஆபாச தளங்களை முழுமையாக தடை செய்வதே இதற்கு சரியான தீர்வாகும்.]

7. இவற்றைவிட கொடியது, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள். மனித உருவில் பல மிருகங்களும் நம்முடன் வாழத்தான் செய்கின்றன. இவர்கள் சிறுவர், சிறுமிகள் உரையாடும் அரட்டை அறைகளுக்கு(Chatting) சென்று தங்களை குழந்தைகளாகவே அறிமுகம் செய்கின்றனர். பிறகு அவர்களின் புகைப்படங்கள், வீட்டு முகவரி, பள்ளி முகவரி என தகவல்களை பகிர்கின்றனர். இது போன்ற கேடு கெட்டவர்கள் ஒரு அமைப்பாகவே செயல்படுகின்றனர். தங்களுக்குள் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களையும், தகவல்களையும் பகிர்ந்துக் கொள்கின்றனர்.

பாதுகாப்பு வழிகள்:

1. எந்த நிலையிலும் முகம் தெரியாத நபர்களிடம் உங்கள் தொலைபேசி எண், வீட்டு முகவரி, பள்ளி முகவரி  போன்றவற்றை பகிர வேண்டாம்.

2. ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களில் அறிமுகம் அல்லாதவர்களை நண்பர்களாக சேர்க்க வேண்டாம்.

3. குழந்தைகள் தனி அறையில் இணையத்தில் உலவுவதை அனுமதிக்காதீர்கள். குழந்தைகள் பயன்படுத்தும் கணினிகளை பொதுவான இடத்தில் வைப்பது நலம்.

4. இணையம் பற்றியும் பாதுகாப்பு வழிகள் பற்றியும் உங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். கணினி பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? என்பதை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் இணையத்தில் சிறிது நேரம் செலவிடுங்கள். அதிகமான குழந்தைகள் வழிமாறி செல்வதற்கு சரியான அரவணைப்பு இல்லாதே காரணம் என நான் கருதுகிறேன்.

5. உங்கள் குழந்தைகள் பார்வையிடும் வலைத்தளங்களை கண்காணியுங்கள். நீங்கள் செல்லும் போது குழந்தைகள்அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வலைத்தளத்தை மூடினால், உடனே கவனிக்கவும்.

6. அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை நேரில் சந்திக்க அழைத்தால் மறுத்துவிடுங்கள்.

7. நீங்கள் மற்றவர்களுடன் அரட்டை அடிப்பதை அவர்கள் பதிவு செய்யக் கூடும் என்பதை மறவாதீர்கள்.

8. அறிமுகம் இல்லாதவர்களுடன் முகம் பார்த்து அரட்டை அடிக்கும் வீடியோ சாட்டிங்கை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் பதிவு செய்யப்பட்டு, உங்களுக்கு தெரியாமலே இணையத்தில் பரப்பப்படலாம்.

9. இணையத்தில் உங்களை பற்றிய முழு விவரங்களையும் பகிர வேண்டாம். முக்கியமாக ஃபேஸ்புக்கில்.

10. குழந்தைகள், பெண்கள்  புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை தவிர்க்கவும். தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் மூலம் அந்த புகைப்படங்களை ஆபாசமாக மாற்றலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

11. உங்கள் password-ஐ பெற்றோர்களை தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.

12. பணபரிமாற்றங்கள் செய்யும் பொழுது அந்த பக்கத்தின் முகவரியை பாருங்கள். http::// என இருந்தால் உங்கள் கார்ட் விவரங்களை கொடுக்காதீர்கள்.https:// என்று இருந்தால் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்யுங்கள். https::// என்பது பாதுகாப்பான வழியாகும்.

13. காதலன் என்றாலும் உங்களை படம்பிடிப்பதை அனுமதிக்காதீர்கள்.

பிரச்சனை பெரிதாக ஆனால் ஃசைபர் க்ரைமில் புகார் செய்யலாம். புகார் செய்யும் முன் வக்கீல்களிடம் ஆலோசனை பெறவும்.

சைபர் க்ரைமில் ஏற்றுக்கொள்ளப்படும் புகார்கள்:
undefined

1. இண்டர்நெட் கடவுச்சொல் திருட்டு

2. அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள்

3. இணைய பின்தொடர்தல் (Cyber Stalking) [பாலியல் ரீதியிலான தொல்லைகள், வேறொருவர் உங்களை போல இணையத்தில் உலவுவது, மிரட்டல்கள் ஆகியவைகளும் அடங்கும்].

4. குழந்தைகள் வன்கொடுமை / ஆபாச தளங்கள்

5. கடன் அட்டை எண் திருட்டு

6. வலைத்தள ஹேக்கிங்

சைபர் க்ரைம் குற்றங்களுக்காண தண்டனை..

1.ஹேக்கிங் [ HACKING ]
2.ஆபாசமாக மெஸ்சேஜ் அனுப்புதல். [ PORM SMS ]
3.கம்ப்யூட்டர் இன்டர்நெட் வழியாக திருடப்பட்டதை வாங்குவது.
4.அடுத்தவர்களின் டிஜிட்டல் சைன் , பாஸ்வேர்டுகளை திருடுவது.
5.போலி ID உருவாக்கி தன்னை வேருவர் போல் காட்டிக்கொள்வது.
6.ஆண், பெண் உடல் பாகங்களை சட்ட விரோதமான முறையில் வெளியுடுவது.
7.சைபர் டெரரிசம் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்களில் ஈடுபடுதல்.
8.ஆபாச போட்டோ வெளியிடுதல்.
9.ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுதல்.
10.குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வெளியிடுதல்.

சைபர் க்ரைம் தொடர்பான குற்றங்களுக்காக போலீஸ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தால் ஐ.டி சட்டம் 2008 ன் படி மூன்று ஆண்டு முதல் ஆயுள் வரை தண்டனை வழங்கப்படும்.

ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

இவர்களில் ஆபாச மெசேஜ் அனுப்புவது, ஆபாச போட்டோ போடுவது, ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுவது, போலி ID உருவாக்கி தன்னை வேருவர் போல் காட்டிக்கொள்வது, ஆண், பெண் உடல் பாகங்களை சட்ட விரோதமான முறையில் வெளியுடுவது, சைபர் டெரரிசம் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்களில் ஈடுபடுதல், ஆபாச போட்டோ வெளியிடுதல், ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுதல், குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வெளியிடுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டால் அவர்கள் ஜாமீனில் வரமுடியாதபடி கைது செய்யப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் புகார்  கொடுக்க:

 undefined

சென்னை தவிர பிற மாவட்டங்கள்:
 Tmt.Sonal V.Misra, IPS,
SCB, Cyber Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32

மின்னஞ்சல் முகவரி: spcybercbcid.tnpol(at)nic.in

சென்னை:
Tr.S.Aravind,
DSP, CBCID, Cyber Crime Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32

தொலை பேசி எண்: 044-22502512
மின்னஞ்சல் முகவரி: cbcyber (at) nic.in

புகார்களை sms அனுப்ப : 95000 99100.

சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்ய
phone: 044-23452350

Cyber Crime Cell
Chennai
******
Sri Sudhakar
Assistant Comissioner of Police
Cyber Crime Cell
Commissioner office Campus
Egmore, Chennai- 600008

(044) 55498211
cbcyber@tn.nic.in
EMail: cidap@cidap.gov.in
EMail: info@cidap.gov.in

Tr.S.Aravind,
DSP, CBCID, Cyber Crime Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32

தொலை பேசி எண்: 044-22502512

Chennai for Rest of Tamil Nadu,
Cyber Crime Cell
CB, CID
Off: 044 25393359

Delhi
****
Supdt. of Police,
Cyber Crime Investigation Cell Central Bureau of Investigation,
5th Floor, Block No.3, CGO Complex,
Lodhi Road,

New Delhi - 3, Phone: 4362203, 4392424

 கவனிக்க: இந்தியாவில் 10ல் 7 இளைஞர்கள் சைபர் கிரைம் மூலம் பல பிரச்சினைகளுக்கு உள்ளாகி தங்களின் வாழ்க்கையை தொலைக்கின்றனர். இந்தியாவில் ஆண்டுதோறும் 4.2 கோடி மில்லியன் பேர் சைபர் குற்றங்களினால் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றினை இன்டர்நெட் செக்யூரிட்டி த்ரெட் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி அதிகரிப்பிற்கு ஏற்ப அது தொடர்பான குற்றங்களும் அதிகரிக்கிறது. நாடு முழுவதும் 52 சதவிகிதம் பேர், ஏமாற்றப்படுதல், ஹேக்கிங், திருட்டு, வைரஸ் தாக்குதல் உள்ளிட்ட சைபர் குற்றங்களினால் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.தைரியமா புகார் கொடுங்க இதுபோல் பிரச்சினை வரும்போது, பெண்கள் தவறான முடிவுக்கு போகக்கூடாது. துணிச்சலாக போலீசுக்கு புகார் கொடுக்க வரவேண்டும். இந்த பதிவை எழுதுவதற்கு என்னை தூண்டியதே 3,6,7 ஆகிய குற்றங்கள் தான். அவைகள் என்னை அதிகம் கவலைப்பட வைத்தது. நாளைய தலைமுறையினர் வழிமாறி செல்லக்கூடாது என்பதே எனது ஆசை.

ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.