Friday, September 25, 2020

ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

 ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளை வேறு உபயோகத்துக்குப் பயன் படுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட சென்னை மாவட்ட செயலாளர் டி.கே.சண்முகம் உயர் நீதிமன் றத்தில் தாக்கல் செய்த மனுவில், “திருவள்ளூர் மாவட்டம், அம்பத் தூர் தாலுகா, மேனாம்பேடு கிராமம் மற்றும் கொரட்டூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஒழுங்கு படுத்தி, வரன்முறை செய்து பட்டா தர உத்தரவிட வேண்டும். நீர் இல்லாமல், குடிநீருக்கோ, பாச னத்துக்கோ நீண்டகாலம் பயன் படுத்தப்படாமல் இருக்கும் நீர் ஆதாரங்களில் ஆக்கிரமிப்பு இருந் தால் அங்கு பட்டா கொடுப்பதற்கு வகை செய்யும் அரசாணை 30-12-2006-ல் பிறக்கப்பட்டது. அதன்படி,

கொரட்டூர் ஏரி நீண்டகாலமாக பயன்படுத்தப்படாமல் இருப்ப தால், அங்கு ஆக்கிரமித்திருப்பவர் களுக்கு பட்டா தர வேண்டும்” என்று கோரியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், நீர் நிலைகள் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை செல் லும் என்று உத்தரவிட்டது.

மற்றொரு வழக்கில், நீண்ட காலம் பயன்படுத்தப்படாமல் இருக் கிறது என்று காரணம் காட்டி, அங்கு ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

இரண்டு டிவிஷன் பெஞ்ச்களின் தீர்ப்பு முரண்பட்டதாக இருந்ததால், இந்த வழக்கு இரண்டு பேருக்கு மேற்பட்ட நீதிபதிகள் (முழு அமர்வு) விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்திய நாராயணன், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முழு அமர்வு விசாரித்து, “நீர் ஆதாரங்கள் சட்டத்தின் நோக்கமே நீர் நிலைகளைப் பாது காப்பதுதான். பிரதான வழக்கை மீண்டும் டிவிஷன் பெஞ்ச் விசாரிக்க வேண்டும்’’ என்று உத்தர விட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கை விசாரித்து தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகி யோர் கொண்ட முதல் அமர்வு விசாரித்து பிறப்பித்த தீர்ப்பு வருமாறு:

ஏரி, குளம் போன்ற நீர்நிலை கள் பொதுமக்களின் சொத்து. அதே நேரத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு மட்டுமே இருப்ப தாக கொள்ளக்கூடாது. பொதுமக்க ளுக்கும் அதில் பங்கு உள்ளது. மக்கள் அதிக சொத்து வாங்க வேண்டும் என்ற ஆசைப்படுவ தால் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப் படுகின்றன. நீர் நிலைகள் மனி தன் மற்றும் கால்நடைகளின் ஆதார மாக இருக்கிறது.

2007-ல் நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க தமிழக அரசு சட்டம் இயற்றியது. அரசே இந்த சட்டத்தை மறந்து, இயற்கை ஆதாரங்களை அழிக்க முற்படும்போது அதை மக்கள் எதிர்க்கின்றனர். நீர் நிலை களை ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற மும் தீர்ப்பளித்துள்ளது. அதுபோல உயர் நீதிமன்றமும் பல உத்தர வுகள் பிறப்பித்துள்ளது. ஆனால், அந்த உத்தரவுகள் பின்பற்றப் படவில்லை.

அதனால், 2005-ம் ஆண்டு மழை வெள்ளத்தால் உயிர் மற்றும் பொருள் இழப்பு ஏற்பட்டது. இப்போது ஏற்பட்ட வெள்ளத்திலும் உயிர் மற்றும் பொருள் இழப்பு ஏற் பட்டிருக்கிறது. இதற்கு தவறான நிர்வாகமும், அதிகாரிகள் பின் பற்றும் நடைமுறைகளே காரணம். நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப் படுவதால், அங்கு தேங்க வேண் டிய மழைநீர் வெளியேறி மோச மான விளைவுகள் ஏற்படுகின்றன. மழை வெள்ளத்தில் வீடுகள் மூழ்குகின்றன. நீர்நிலைகளுக்கு உள்ளே வீடுகள் கட்டுவதற்கு அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். இதுபோல நீர்நிலைகளை அழிக்க அனுமதிக்க முடியாது. நீர் நிலைகளை வேறு உபயோகத் துக்கு பயன்படுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை.

இந்த வழக்கில், ஏரிக்குள் நீண்டகாலமாக இருப்பதாக கூறு வதற்கு ஆதாரம் எதுவும் சமர்ப்பிக்க படவில்லை. அப்படியே இருந் தாலும் அந்த இடத்தில் அவர்க ளுக்கு உரிமை இல்லை.ஏனென் றால் அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப் படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்

Thursday, September 24, 2020

பெண்கள் பாதுகாப்புச் சட்டம்

                                                                வன்முறை

இவ்வுலகிலே சீரும், சிறப்பும் வாய்ந்தவர்கள் யாரென்று கேட்டால், அனைவருமே நம்மைப் பெற்றெடுத்த தாய்மார்களைத்தான் கூறுவோம். தாய்மை என்பது பெண்களுக்கே உரிய தனிச்சிறப்பு. மனித குலத்தின் ஆரம்பக் காலக்கட்டத்தில் சமூகத்தை வழிநடத்தியவர்கள் பெண்கள்தான். அந்த பெண்வழி சமூகத்தில்தான் இன்றைய பெண்கடவுள்கள் தோன்றின.

கருவறை முதல் கல்லறை வரை ஒவ்வொரு மனிதரின் வெற்றிக்குப் பின்புலத்திலும்  பெண்ணின் பங்கு உண்டு என்பது உலகறிந்த உண்மை. சமூகத்திலே பல்வேறு வகையான வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கு வித்திடுபவர்கள் பெண்கள் என்பதற்கு எவ்வித ஐயமுமில்லை. இவ்வாறு வளர்ச்சிப் பாதையில் சமுதாயத்தை இட்டுச் செல்லும் பெண்கள் பாதுகாப்போடு நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

ஆனால், நடைமுறையில் நாம் காண்பதோ நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. சீரும், சிறப்போடும் நடத்தப்பட வேண்டிய பெண்கள் பல்வேறு வகையான வன்முறைகளுக்கு இலக்காவது கொடுமையானது. ஆணாதிக்க சமூக கட்டமைப்புகளில் சிக்கி, ஆண்களின் ஆதிக்க சூழ்ச்சிகளால் அடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள். இவ்வுலகிலே ஏற்படும் எவ்வித பிரச்சினையாக இருந்தாலும் அதில் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் பெண் களும், குழந்தைகளுமே. பெண்களின் நிலையை சற்று ஆராய்ந்து பார்த்தால் எந்த அளவுக்கு அவர்கள் சமுதாயத்திலே பல வகையான வன்முறைகளால் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள் என்பது தெளிவாக தெரியும். 15 முதல் 45 வயதான பெண்களுள் மூன்றில் ஒரு பங்கினர் ஏதாவது ஒரு வகையான வன்முறைக்கு ஆளாகுகின்றனர். ஒட்டு மொத்த பெண்களில் 35% பேர் உடல் ரீதியான மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றனர். திருமணமான பெண்களில் 46% பேர் பல்வேறு வகையான வன்முறைகளால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வைத் தொடருகின்றனர்.

                                                             ஆணாதிக்கம்

பெண்கள் கல்வி கற்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள் என்று வெளிப்படையாகத் தெரிந்தாலும், அந்த துறைகளில் உள்ள பெண்கள் பாதுகாப்போடு பணி செய்ய முடிகிறதா என்றால்  அது ஒரு பெரிய கேள்விக்குறிதான். பெரும் பாலான துறைகள் ஆண்களால் நடத்தப் படுவதாலும் பெரும்பான்மையான உயர் அதிகாரிகள் ஆண்களாக இருப்பதாலும் பெண்கள் எவ்வளவுதான் கல்வி கற்றிருந்தவர்களாக இருந்தாலும் அந்த துறைகளில் ஆணாதிக்கத்தின் கீழ் அடிமைகளாகவே உள்ளனர்.

நகர்புறங்களில் பல கம்பெனிகளிலும், தொழிற்சாலைகளிலும், தொலைக்காட்சி நிறுவனங்களிலும், ஊடகங்களிலும் பணி புரியும் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலில் பல வகையான பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் கிராமப் புறங்களில் வாழும் பெண்கள் பாதுகாப்பின்றி அதிகளவில் வாழ்க்கையை தொடருகின்றனர்.

                                                     பெண்கள் பாதுகாப்புச் சட்டம்

இவ்வாறு பாதுகாப்பின்றி வாழ்க் கையைத் தொடரும் பெண்களின் வாழ்வில் பாதுகாப்பு கிடைக்குமா? என்று எத்தனையோ பெண்களும், பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஆர்வாளர்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர்.  அவர்களின் பல ஆண்டுகள் கனவை நிறைவேற்ற பெண்கள் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைபடுத்தப்படுகிறது. இந்திய அரசியல்  அமைப்புச்சட்டப் பிரிவுகள் 14 மற்றும் 15 இரண்டும், எல்லா வகையான வேறுபாடுகளையும் களைந்து, சமத்துவத்தோடும் சகோதரத்துவத்தோடும் வாழ்வதற்கான உரிமையை வலியுறுத்திக் கூறுகிறது. பிரிவு 21-ல் பெண்கள் எவ்வாறு மாண்போடும், சமமான வகையில் பொது இடங்களிலும் பணியிடங்களிலும் மதித்து நடத்தப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது. ஆனால் நடைமுறையில் நாம் காண்பதோ பெண்களின் பாதுகாப்பற்ற நிலை. இந்நிலை இந்தியாவில் மிகவும் உயர்ந்துள்ளதை ஐக்கிய நாடுகள் சபை வன்மையாக கண்டித்து பெண்கள் பாதுகாப்பினை வலியுறுத்தியது.

1993-ல் வியான்னாவில் நடந்த ""உலக மனித உரிமை மாநாட்டில்'' பெண்களின் உரிமைகளை மீறுதல் மிகக் கொடிய மனித உரிமை மீறல் என்பதைச் சுட்டிக்காட்டப்பட்டது. 1993-லிருந்து இந்திய அரசானது பல நிலைகளில் பெண்கள் பாதுகாப்பிற்கு முயற்சிகளை எடுத்த வண்ணமாக இருக்கின்றது. இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு 2010-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதுதான் ""பணி இடங்களில் பாலியல் வன்முறைக்கு எதிரான பெண்கள் பாதுகாப்புச் சட்டம் 2010''. இந்திய         அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் பெண்களுக்கான முழுமையான பாதுகாப்பினை வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லை. இச்சட்டத்தின் முக்கிய நோக்கமே, பணி இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தருவதே ஆகும். அரசின் இந்த அரிய சட்ட முயற்சி பெண்கள் முன்னேற்றத்திற்கு மிகுந்த பயனளிக்கும்.

இச்சட்டம் எல்லா இடங்களிலும் பணி செய்யும் பெண்களுக்கு பொருத்தமானதாக உள்ளது. அரசுத்துறையாகவோ, தனியார் துறையாகவோ, வேறு எந்த நிறுவனங்களாக இருந்தாலோ அங்கு பெண்கள் பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்பட்டால் இச்சட்டம் மூலம் நீதி பெறலாம். மேலும், பாலியல் வன்முறைக் குத் தூண்டிய அதிகாரிகளையோ, ஏனைய ஆண்களையோ, சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்து தண்டிக்கலாம். வேலை செய்யும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பட்டால், பெண்கள் பல பணிகளில் பங்கெடுத்து நாட்டின் ஒட்டு மொத்த சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை செய்யலாம். இந்த பாதுகாப்புச் சட்டம் "பாலியல் வன்முறை' என்றால் என்ன என்ற தெளிவான விளக்கத்தையும் வழங்குகிறது. "பெண்கள் பணி செய்ய உகந்த சூழலை ஏற்படுத்தி தராத நிலையே பாலியல் வன்முறை, என்பதை வலியுறுத்தி, அத்தகைய செயல்களை அறவே தடைசெய்ய முயற்சிக்கிறது. பலதுறைகளில் பணி செய்யும் பெண்களுக்கு மட்டுமல்ல இச்சட்டம். ஒரு நிறுவனத்திற்கு வந்துபோகும் பெண்களாக இருந்தாலும், படிக்கின்ற பெண்கள், பள்ளி, கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணி செய்வோர், மருத்துவமனைகளில் நோயுற்றிருப்போர் முழுமை யான பாதுகாப்பினை வழங்க முற்படுகிறது. இச் சட்டத்தின் கீழ் ஒவ்வோர் அமைப்பிலும் உள்ளார்ந்த புகார் குழுக்களை ஏற்படுத்தி அதன் மூலம் புகார் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இச்சட்டத்திற்கு கீழ்ப்படியாத அதிகாரிகள் சிறைத் தண்டனையும், 50,000/- க்கும் அதிகமான அபராதத்தையும் சந்திக்க நேரிடும். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்த 90 நாட்களில் விசாரணையை முடித்து நடவடிக்கையை எடுக்க இச்சட்டம் வலியுறுத்துகிறது.  இச்சட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வருவது மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொறுப்பு. பெண்களின் பாதுகாப்பு கருதி, அவர்களின் பணி இடங்களில் தேவையற்ற வன்முறைச் செயல்களை ஒழிக்கும் முயற்சியில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இச்சட்டம் மிகவும் வரவேற்கப்பட வேண்டியது.

பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை மீறல்கள் அனைத்தும் மனித உரிமை மீறல்களே. அத்தகைய மனித உரிமை மீறலை செய்யும் நபர் யாராக இருந்தாலும் எந்த பதவியிலிருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கு மிகவும் உதவி செய்திடும் வகையில் இச்சட்டம் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. சரியான வகைகளில் தாமதமின்றி இச்சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால், கண்டிப்பாக தொடர்ந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் செயல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம். நாட்டின் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமெனில் வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளில் பிணைவிடா குற்றம் – பிணைவிடு குற்றம் எவை?

பகுதி 5 உடந்தையாய் இருத்தல் பற்றி (107 – 120)

பிணை விடா குற்றம் 115, 118, 119 (குற்றம் முடிவுறாதிருத்தல் பிணைவிடு குற்றமாகும்) குற்றச் செயலைப் பொருத்து உடந்தையாய் இருப்பவர் பிணைவிடு – விடாக்குற்றம் என முடிவு செய்யப்படும் பிரிவுகள் 109 -114, 117, 119,120

பிடியாணை வேண்டும் குற்றமா – வேண்டாகுற்றமா என குற்றச் செயல் எதுவோ அதைப் பொருத்து அமையும்.

பகுதி 5 அ. குற்றமுறுசதி (120 அ, 120 ஆ)

பிணைவிடு – விடா குற்றமா, பிடியாணை வேண்டும் – வேண்டா குற்றமா என குற்றச் செயலைப் பொருத்தே அமையும்.

பகுதி 6 அரசுக்கு எதிரான குற்றங்கள் (121 – 130)

பிணைவிடு குற்றம் – 129 பிணைவிடா குற்றம் 121 -128, 130 இதில் அனைத்துப் பிரிவுகளும் பிடியாணை வேண்டாக் குற்றமாகும்.

பகுதி 7 தரைப் படை – கடற்படை – வான் படை சம்பந்தமான குற்றங்கள் (131 – 140)

பிணைவிடுகுற்றம் : 135 – 138, 140 பிணைவிடா குற்றம் 131 – 134 பிடியாணை வேண்டும் குற்றம் 137 (மற்ற பிரிவுகள் பிடியாணை வேண்டா குற்றங்கள்)

பகுதி 8 பொது அமைதிக்கு விரோதமான குற்றங்கள் (141 – 160)

பிணைவிடு குற்றம் – 143-145, 147, 148, 151-158, 160

விடாகுற்றம் : 153 அ, 153 அஅ, 153ஆ (பிரிவு 149, 150 குற்றச் செயலை பொருத்து அமையும்)

பிடியாணை வேண்டும் குற்றம் 154 – 156 (மற்ற பிரிவுகள் பிடியாணை வேண்டாக் குற்றமாகும்)

பகுதி 9 பொது ஊழியரால் செய்யப்படும் அல்லது அவர் சம்பந்தமான குற்றங்கள் பற்றி (161 – 171)

பிணைவிடு குற்றம் 166 – 169, 171 பிணைவிடா குற்றம் 161 – 165அ, 170 பிடியாணை வேண்டாக் குற்றம் 166, 168 (மற்ற பிரிவுகள் பிடியாணை வேண்டா குற்றம்)

பகுதி – அ தேர்தல்கள் தொடர்பான குற்றங்கள் பற்றி (171அ – 171ஐ)

பிணைவிடுகுற்றம் : அனைத்துப் பிரிவுகளும் (171உ – 171ஐ)

பிடியாணை வேண்டா குற்றம் 171 ஊ, மற்றவை பிடியாணை வேண்டும் குற்றமாகும்)

பகுதி 10 பொது ஊழியர்களின் சட்ட பூர்வமான அதிகாரத்தை அவமதித்தல் பற்றி (171 – 190)

பிணைவிடு குற்றம் 172 – 190

பிணை விடாகுற்றம் : 174 அ

பிடியாணை வேண்டும் குற்றம் 172 – 187, 189, 190 வேண்டாக்குற்றம் 174அ, 188

பகுதி 11 பொய் சாட்சியமும் பொது நீதிக்கு எதிரான குற்றங்களும் (191 – 229)

பிணைவிடு 193, 195, 197-221, 223,224, 225அ, ஆ, 228

பிணைவிடா : 194, 195அ, 222, 225, 227

பிடியாணை வேண்டும் குற்றம் : 193-221, 224, 217, 219, 220,223,225அ, 228 (மற்றவை பிடியாணை வேண்டாகுற்றம்)

பகுதி 12 நாணயம் மற்றும் அரசு முத்திரைகள் தொடர்பான குற்றங்கள் : (230-263அ)

பிணைவிடு : 259-263அ, பிணைவிடா குற்றம் : 231-258

பிடியாணை வேண்டாகுற்றம் அனைத்துப் பிரிவுகளும்

பகுதி 13 எடைகள் அளவைகள் தொடர்பான குற்றங்கள் (264-267)

பிணைவிடுகுற்றம் : 264-266, பிணைவிடா குற்றம் 267

பிடியாணை வேண்டும் 264-266, வேண்டா குற்றம் 267

பகுதி 14 பொது மக்களின் சுகாதாரம், பாதுக்காப்பு, வசதி. பண்பு நலன் மற்றும் ஒழுக்கம் இவற்றபப் பாதிக்கின்ற குற்றங்கள் (268-294 9(அ)


பிணைவிடு : அனைத்துப் பிரிவுகளும்

பிடியாணை வேண்டும் குற்றம் : 271-276, 278, 287, 288, 290, 292அ-294அ (மற்ற பிரிவுகள் பிடியாணை வேண்டாகுற்றம்)

பகுதி 15 – மதம் தொடர்பான குற்றங்கள் (295-298)

பிணைவிடு : 296, பிணைவிடா குற்றம் : 295, 295அ, 297, 298

பிடியாணை வேண்டும் குற்றம் : 298 (மற்ற பிரிவுகள் பிடியாணை வேண்டாக்குற்றம்)

பகுதி 16 மனித உடலை பாதிக்கும் குற்றங்கள் பற்றி ( 299-377)

உயிரை பாதிக்கும் குற்றங்கள் – 299-311

பிணைவிடு : 304அ, 309, பிணைவிடா குற்றம் : 302-304, 304ஆ, 305-308, 311

அனைத்துப் பிரிவுகளும் பிடியாணை வேண்டாக் குற்றம்

கருச்சிதைவித்தல், பிறக்காத குழந்தைகளுக்குக் கேடு செய்தல், கைக்குழந்தைகளை பாதுகாப்பு இன்றி விடுதல், பிறப்பை மறைத்தல் (312 – 318)

பிணைவிடு : 312, 317, பிணைவிடா குற்றம் : 313-316, 318

பிடியாணை வேண்டும் குற்றம் – 312 (மற்றவை பிடி கட்டளை வேண்டாக்குற்றம்)

காயம் ஏற்படுத்தல் பற்றி (319-338)

பிணைவிடு : 318, 323, 325, 330, 334-338

பிணைவிடா : 324, 326-329, 331-333

பிடியாணை வேண்டும் குற்றம் : 323, 334 (மற்ற பிரிவுகள் பிடியாணை வேண்டா குற்றம்)

சட்ட விரோதமாக தடுத்துவைப்பதும் அடைத்து வைத்தலும் (339-348)

பிணைவிடு : 314 – 348 (அனைத்துப் பிரிவுகளும்)

அனைத்து பிரிவுகளும் பிடிகட்டளை வேண்டாக்குற்றம்

குற்றமுறு வன்முறையும் தாக்குதலும் (349-358)

பிணைவிடு அனைத்துப் பிரிவுகளும்

பிடிகட்டளை வேண்டும் குற்றம் 352, 355, 358 (மற்றவை வேண்டாக்குற்றம்)

பிள்ளை பிடித்தல், ஆட்கடத்தல், அடிமை நிலை மற்றும் கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல் (359-374)

பிணைவிடு : 363, 370, 374

பிணைவிடா : 363ஹ - 369, 371-373

பிடிக்கட்டளை வேண்டும் குற்றம் 370 (மற்ற பிரிவுகள் பிடிக்கட்டளை வேண்டாக்குற்றம்)

வன்புணர்ச்சி பற்றி (375-376) இயற்கைக்கு மாறான குற்றங்கள் 377

பிணைவிடுக்குற்றம் 376அ – 376ஈ பிணைவிடாக்குற்றம் 367, 377

சொத்து தொடர்பான குற்றங்கள் – திருட்டு பற்றி (378 – 389) பிணைவிடுக்குற்றம் – 385, 388, 389 பிணைவிடா குற்றம் 379 – 384, 386, 387

அனைத்துப் பிரிவுகளும் பிடிகட்டளை வேண்டாக்குற்றம்.

கொள்கையும் கூட்டுக் கொள்ளையும் பற்றி (390-402)

அனைத்துப் பிரிவுகளும் பிணைவிடா குற்றம் – பிடிகட்டளை வேண்டாக்குற்றம்

குற்றமுறு சொத்துக் கையாடல் (403, 404) குற்றமுறு நம்பிக்கை மோசடி (405-409)

பிணைவிடுக்குற்றம் : 403-405, பிணைவிடா குற்றம் – 406-409

பிடிகட்டளை வேண்டும் குற்றம : 403-405, வேண்டாகுற்றம் 406-409.

திருட்டு சொத்தை பெற்றுக் கொள்ளுதல் (410-414) ஏமாற்றுதல் 415-420)

பிணைவிடுக்குற்றம் – 417-419, பிணைவிடாக்குற்றம் 411-414, 420

பிடிக்கட்டளை வேண்டும் குற்றம் 417, 418 (மற்றவை பிடிகட்டளை வேண்டாகுற்றம்)

மோசடியான சொத்து விற்பனை – சொத்துக்கு தீங்கு (412-440)

பிணைவிடுக்குற்றம் – 421 – 435, 440 பிணைவிடாக்குற்றம் 436-439

பிடிக்கட்டளை வேண்டும் குற்றம் 421 – 427, 434

குற்றமுறு அத்துமீறல் (441-462)

பிணைவிடுக்குற்றம் – 447-448, 451, 462

 பிணைவிடாக்குற்றம் 449, 450, 452-461 (451 இன்படி திருட்டாக இருத்தல்)

அனைத்துப் பிரிவுகளும் பிடிக்கட்டளை வேண்டாக்குற்றம்.

சொத்து ஆவணங்கள், அடையாளக் குறிகள் தொடர்பான குற்றங்கள் (463-477அ)

பிணைவிடுக்குற்றம் – 465, 469-477அ

பிணைவிடாக்குற்றம் 466-468, 476, 477

சொத்தையும் மற்ற அடையாளக்குறிகள் பற்றி (478-489) நாணயம் வங்கித்தாள் பற்றிய குற்றம் 489 அ-உ)

பிணைவிடுக்குற்றம் – 482-489, 489 இ,உ

 பிணைவிடாக்குற்றம் 489 அ, ஆ, ஈ

பிடிக்கட்டளை வேண்டும் குற்றம் 482-489, 489உ

குற்றமுறு ஊதிய ஒப்பந்த மீறுதல் (491) மணவாழ்க்கை தொடர்பான குற்றங்கள் (493-498) பெண்ணைக் கணவர் குடும்பத்தார் கொடுமைப்படுத்தல் 498அ

பிணைவிடுகுற்றம் 491-494-498

பிணைவிடாகுற்றம் 491-498, கு.பி.அ. வேண்டாகுற்றம் 498அ

அவதூறு (499-502) குற்றமுறு மிரட்டல், அவமதித்தல், தொந்தரவு செய்தல் பற்றி (503-510) குற்றங்கள் செய்ய முயற்சி (511)

பிணைவிடுகுற்றம் 500-504, 506-510

பிணைவிடாக்குற்றம் : 505 (511 குற்றத்தைப் பொறுத்து மாறுபடும்)

பிடிகட்டளை வேண்டும் குற்றம் 509-505, 511 ஆகியவை குற்றங்களைப் பொறுத்து)

இந்திய தண்டனைச் சட்டத்தைத் தவிர மற்ற சட்டங்களைப் பொருத்தவரை நடைமுறை : 3 ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை (அ) தண்டனைத் தொகை, வழங்கக் கூடிய குற்றம் எனில் அது பிணைவிடு குற்றமாகவும் பிடிக்கட்டளை வேண்டும் குற்றமாகவும் கொள்ளப்படும்

 

ஜாமீன் கையெழுத்து போட்டுக் கொடுப்பவர்கள்?

ஜாமீன் கொடுத்தவரின் கடமைகளும் உரிமைகளும்:
---------------------------------------------------------------------------
கடனுக்கு உத்தரவாதம் கொடுப்பது என்பது என்றுமே பிரச்சினை தான். கடன் வாங்கியவர் நிம்மதியாக இருந்து கொள்வார். ஆனால் உத்தரவாதம் கொடுப்பவர் நிம்மதி இல்லாமல் தவிப்பார். இந்த மாதிரி சம்பவங்களை நீங்கள் அனைவரும் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். அவ்வாறு ஜாமீன் கையெழுத்து போட்டு நஷ்டப்படுபவர்கள் தாங்கள் யாருக்காக உத்தரவாதம் கொடுக்கிறார்களோ அவர்களை பற்றி சரியாக தெரிந்து கொள்ளாமல், ஜாமீன் (ஷூரிட்டி) போட்டுக் கொடுப்பதிலிருந்து ஏற்படும் பிரச்சினை தான் இதற்கெல்லாம் காரணம்.

ஜாமீன் கையெழுத்து போட்டுக் கொடுப்பவர்கள் சட்டப்படி தங்கள் உரிமை மற்றும் கடமைகள் என்ன என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து தப்ப முடியும்.

இது எந்த சட்டத்தில் வருகிறது

இந்திய ஒப்பந்தச் சட்டம் (Indian Contract Act), 1872 ன் 8 ஆம் பகுதி தான் இண்டெம்னிடி அண்ட் கியாரண்டி (Indemnity and Gyranty) எனப்படும் இழப்பு, எதிர்காப்பு மற்றும் உத்தரவாதம் ஆகும். இந்த சட்டத்தின் 124 முதல் 147 வரையிலான பிரிவுகள் ஷூரிட்டி பற்றி கூறுகிறது.

ஜாமீன் (ஷூரிட்டி) என்றால்

ஜாமீன் (ஷூரிட்டி) என்றால் உத்தரவாதம் கொடுப்பவர் அல்லது உத்தரவாதி என்று பொருள். உதாரணமாக A என்ற நபர் B என்ற நபருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை அல்லது B க்கு செய்வதாக ஒப்புக்கொண்ட ஒரு செயலை கொடுக்கவோ அல்லது செய்யவோ தவறினால், தாம் பொறுப்பு ஏற்பதாக இவர்கள் இருவரும் அல்லாத 3வது நபரான C என்பவர் கூறுவதைத்தான் உத்தரவாதம் என்கிறோம். அவ்வாறு உத்தரவாதம் கொடுப்பவர் தான் ஜாமீன் (ஷூரிட்டி) என்னும் உத்தரவாதி ஆவார்.

ஒருவருக்கு மற்றவர் உத்தரவாதம் கொடுப்பது என்பது முதல் நபர் கடன் வாங்கும் போது மட்டுமல்ல. அவர் ஏதேனும் வழக்கில் சிக்கி அவர் மீது கைது வாரண்ட் இருக்கும் போதோ அல்லது அவர் முன்ஜாமீன் கேட்கும் போதோ, அவருக்கு வேறு நபர் உத்தரவாதம் கொடுக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும்.

கடன் கொடுத்தவர், பெற்றவர், உத்தரவாதம் கொடுத்தவர் :

சாதாரண புரோநோட் கடன் அல்லது அடமானக் கடனாக இருந்தால் கடன் கொடுத்தவர், கடன் பெற்றவர் என இரண்டு பேர் மட்டுமே இருப்பார்கள். ஆனால் Indemnity ல் ஒரு நபர், புரோநோட்டோ அல்லது அடமானப் பத்திரமோ வாங்கிக் கொண்டு, வேறொரு நபருக்கு கடன் கொடுக்கும் போது, அந்த கடனை பெற்றவர் அதனை திருப்பி தருவதற்கு 3வது நபர் உத்தரவாதம் கொடுப்பதால், இங்கு கிரெடிட்டார் என்ற கடன் கொடுத்தவர், பிரின்ஸ்பல் டெப்டார் (Principal Debtor) என்னும் கடன் வாங்கியவர் மற்றும் ஜாமீன் (ஷூரிட்டி) என்ற உத்தரவாதி ஆகிய மூன்று பேர் இருப்பார்கள்.

உத்தரவாதியின் நிலை :

மேலே கூறப்பட்டுள்ள மூன்று பேரில் 3வது நபரான உத்தரவாதிக்கு சற்று சங்கடமான நிலை தான். கடன் கொடுத்தவர், கடனை கொடுக்கும் முன்பாக போதிய பாதுகாப்பு (Security) பெற்றுக் கொண்டு தான் கொடுக்கிறார். கடன் பெற்றவர் திருப்பிக் கொடுக்காவிட்டால், உத்தரவாதியிடம் இருந்து வசூலித்து விடுகிறார். கடன் பெற்றவர் முடிந்தால் திருப்பிக் கொடுக்கிறார். இல்லாவிட்டால் அவருக்கு பதில் உத்தரவாதம் கொடுத்தவர் தான் கொடுப்பார். இந்த நடவடிக்கையால் எந்தவித பிரதிபலனும் பெறாத உத்தரவாதி தான் யாருக்காக உத்தரவாதம் கொடுத்தாரோ, அந்த நண்பர் அல்லது உறவினர் திருப்பிச் செலுத்தாத கடனுக்காக தன் பணத்தை அல்லது சொத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது.

மூன்று வகையான  உரிமைகள் :

1. முக்கிய கடனாளிக்கு எதிரான உரிமைகள்

2. கடன் கொடுத்தவருக்கு எதிரான உரிமைகள்

3. இதர இணை உத்தரவாதிகளுக்கு எதிரான உரிமைகள்

என உத்தரவாதியின் உரிமைகளை மூன்று வகைகளை பிரிக்கலாம்.

1. முக்கிய கடனாளிக்கு எதிரான உத்தரவாதியின் உரிமைகள் :

A. அறிவிப்பு கொடுக்கும் உரிமை
கடன் கொடுத்தவர் உத்தரவாதியிடம் பணம் கேட்டு வந்தால், அந்தக் கடனை உடனடியாக தீர்க்கும்படி முக்கிய கடனாளிக்கு அறிவிப்பு அனுப்ப உத்தரவாதிக்கு உரிமை உண்டு.

B. பற்று உரிமை மாற்றுதல் :
                              கடன் கொடுத்தவருக்கு கொடுக்கப்பட வேண்டிய தொகை முழுவதையும் செலுத்தி, கடனாளியின் பொறுப்பு முழுவதையும் தீர்த்த பிறகு, கடன் கொடுத்தவருக்கு உள்ள உரிமைகள் முழுவதும் உத்தரவாதிக்கு வந்துவிடும். இதுதான் பற்று உரிமை மாற்றுதல் எனப்படும் சப்ரோகேஷன் எனப்படும். (பிரிவு 140)

C. பத்திரங்கள் மீது உரிமை :
                        உத்தரவாதி பணம் முழுவதையும் செலுத்திய பிறகு முக்கிய கடனாளியின் பத்திரங்கள் மீது கடன் கொடுத்தவர் போல் நடவடிக்கை எடுக்கலாம். (பிரிவு 141)

D. இழப்பு எதிர்காப்பு உரிமை :
முக்கிய கடனாளி சார்பாக உத்தரவாதி செலுத்திய தொகை முழுமைக்கும் இழப்பு எதிர்காப்பு எனப்படும் Indemnity உரிமை அவருக்கு உண்டு. (பிரிவு 149)

E. கடனாளியை கட்டாயப்படுத்தும் உரிமை :
உத்தரவாதி, கடனாளி சார்பாக பணம் செலுத்துவதற்கு முன்பாக கடனாளியிடம் (அந்த கடன் தீர்க்கப்படாமல் இருந்தால்) தன்னை, கடனைத் தீர்க்கும் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு கேட்கலாம்.

2. கடன் கொடுத்தவருக்கு எதிரான உத்தரவாதியின் உரிமைகள் :

A. பத்திரங்களை தன்வசம் ஒப்படைக்க கோருதல் :
கடனாளிக்கு பதிலாக உத்தரவாதி பணத்தை செலுத்தி கடனை தீர்த்திருந்தால், கடன் கொடுத்தவரிடம் இருக்கும் கடனாளியின் பத்திரங்களை தன்வசம் ஒப்படைக்க கோரலாம்.

B. #பத்திரங்களை விற்கச் சொல்லுதல் :
தான் வாங்கிய கடனுக்கு ஆதாரமாக கடனாளி, கடன் கொடுத்தவரிடம் கொடுத்திருந்த பத்திரங்களை விற்று, அந்த தொகையிலிருந்து அவருக்கு வரவேண்டிய கடன் தொகையை எடுத்துக் கொள்ளச் சொல்லி கடன் கொடுத்தவரிடம் கேட்கும் உரிமை உத்தரவாதிக்கு உள்ளது.

C.  கடனாளி  மீது  சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க கோருதல் :

தன்னிடம் பணம் கேட்டு கடன் கொடுத்தவர் வரும் போது, கடன் தொகையை வசூல் செய்ய கடனாளி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்க உத்தரவாதிக்கு உரிமை உண்டு.

3. இணை உத்தரவாதிகளுக்கு எதிராக
உத்தரவாதியின் உரிமை :

முக்கிய கடனாளி தன் கடனை தீர்க்காமல் இருந்துவிடும் பட்சத்தில், உத்தரவாதி அக்கடனை தீர்க்க வேண்டியது வரும். அந்த நேரங்களில் உத்தரவாதி இதர இணை உத்தரவாதிகளையும் அதில் பங்கு பெறுமாறு கேட்கலாம். அப்போது உத்தரவாதி மற்றும் இதர இணை உத்தரவாதிகள் எல்லோரும் சமமாக கடன்தாரருக்கு கொடுக்கப்படும் தொகையில் பங்கு பெற வேண்டும். அவ்வாறு எல்லா உத்தரவாதிகளும் சேர்ந்து கடனாளியின் கடன் முழுவதையும் தீர்த்த பிறகு, கடன் கொடுத்தவர் வசம் இருக்கும் கடனாளியின் பத்திரங்களில் அவரவர்களுக்கு உரிமை வந்துவிடுகிறது. அவர்கள் ஒவ்வொருவரும் அதில் அவரவர்களுக்குரிய பங்கினை பெறலாம்.

உத்தரவாதத்திலிருந்து வெளியேறுதல் :

இந்திய ஒப்பந்தச் சட்டம் பிரிவு 130,131 மற்றும் 133 ல் எந்தெந்த சூழ்நிலையில் உத்தரவாதி தான் கொடுத்த உத்தரவாதத்திலிருந்து வெளியேறலாம் என்று கூறுகிறது.

பிரிவு - 130 - உத்தரவாதத்தை திரும்ப பெறும் அறிவிப்பு கொடுப்பதன் மூலம்

பிரிவு - 131- உத்தரவாதி இறந்து விட்டால்

பிரிவு - 133- ஒப்பந்த விதிமுறைகளில் மாறுபாடுகள் ஏற்படும் போது