உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 39 விதி 3 ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி விசாரணை நீதிமன்றம் ஒரு வழக்கில் பிரதிவாதிக்கு எந்தவிதமான அறிவிப்பும் அனுப்பாமல் உறுத்துக் கட்டளை உத்தரவு வழங்க விரும்பினால், அவ்வாறு வழங்கப்படுவதற்கான காரணத்தை பதிவு செய்ய வேண்டும் உச்சநீதிமன்றம் "சிவகுமார் சதா Vs டெல்லி மாநகராட்சி (1999-3-SCC-161" என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது.மேலும் "Dr. V. தேவசகாயம் Vs சத்தியதாஸ் (2002-2-LW-672)" என்ற வழக்கில், ஒரு வழக்கில் எதிர்மனுதாரருக்கு அறிவிப்பு அனுப்பாமல் அவருக்கு எதிராக நீதிமன்றம் ஏதேனும் தடை உத்தரவை பிறப்பிக்கும் பொழுது அதற்கான காரணத்தை அந்த உத்தரவில் குறிப்பிட வேண்டும் என்றும் அவ்வாறு காரணங்களை குறிப்பிடாமல் அளிக்கப்பட்ட உத்தரவு ஒரு நிமிடம் கூட நடைமுறையில் இருக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.மேலும் உச்சநீதிமன்றம் இதே கருத்தை வலியுறுத்தி "1994-4-SCC-225" என்ற வழக்கிலும் தீர்ப்பு கூறியுள்ளது.உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 39 விதி 3 ல் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. அந்த முறையில் தான் அந்த விஷயம் நடைபெற வேண்டும். கீழமை நீதிமன்றங்கள் அந்த விதிமுறைகளுக்கு முரணாக செயல்பட்டு ஒரு உத்தரவை வழங்கினால் அந்த உத்தரவுகள் ரத்து செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.எனவே ஒரு உரிமையியல் வழக்கில் பிரதிவாதிக்கு நோட்டீஸ் அனுப்பாமல், விரிவான காரணங்களை கூறாமல் வாதிக்கு ஆதரவாக உறுத்துக் கட்டளை உத்தரவு வழங்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
M/s சண்முகம் பவுண்டேஷன் Vs சிவகாமி மற்றும் பலர்
2012-4-LW-CIVIL-670