Showing posts with label Police Department Standing order and GO. Show all posts
Showing posts with label Police Department Standing order and GO. Show all posts

Friday, February 9, 2018

காவல்துறை முக்கிய அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகள்

1.  காவல்துறையினர் எப்போதெல்லாம் ஒரு வழக்கின் புலன் விசாரணையை மறுக்கலாம் என்பது குறித்து, அரசாணை எண். 332, நீதித்துறை 28, பிப்ரவரி, 1906 மற்றும் அரசாணை எண். 485 நீதித்துறை 14,மார்ச் 1911 என்ற அரசாணைகளை பிறப்பித்துள்ளது. மேலும் தமிழ்நாடு காவல்நிலை ஆணை எண். 562 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 157(1)(b) யிலும் இதுகுறித்து கூறப்பட்டுள்ளது.

2.  கடித எண். வி1 - 24021/97/84/ஜிபிஏஎல், நாள் - 4.7.1978 மற்றும் 10.7.1985 ன்படி இந்திய அரசு, உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மத்திய காவல் அமைப்புகளின் தலைமைக்கு அனுப்பிய கடிதத்தில், கண்டிப்பாக காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய நடத்தை விதிகள் குறித்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

3.  காவல்நிலைய பொறுப்பு அலுவலர்கள் FIR நகலை புகார்தாரருக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க மறுப்பது மிகக் கடுமையான குற்றமாகும் என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் சி. எண். /165918/குற்றம் /(2)(1)/94, நாள் - 27.7.1994 ன்படி கீழ் ஆணை பிறப்பித்துள்ளார்.

4.  காவல் நிலைய ஆய்வாளர் புகாரை பெற்றுக் கொண்டவுடன் அது பிடியாணை வேண்டா குற்றமாக இருந்தால் உடனடியாக FIR பதிவு செய்ய வேண்டும். பிடியாணை வேண்டும் குற்றமாக இருந்தால் அந்த குற்றத்தை விசாரணை செய்ய, குற்றவியல் நடுவரின் அறிவுறுத்தலை பெற வேண்டும். சாதாரண மனுக்களை பெறும்போது, அவை உடனடியாக மனுக்கள் பதிவேட்டில் (CSR) பதிவு செய்யப்பட்டு, புகார்தாரருக்கு உடனடியாக CSR நகல் கொடுக்க வேண்டும். இவைகளை கடைபிடிக்காதது சட்ட விரோதமானதாக கருதப்பட்டு கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் RC. NO /62868/குற்றம் /1(2)/2001,நாள் - 31.3.2001 ன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் இது தொடர்பாக அரசாணை எண். 865, உள் (காவல் - 1) துறை, நாள் - 9.6.1997.என்ற அரசாணை உள்ளது. மேலும்  தலைமை அலுவலக நிலை ஆணை 133622/குற்றம் - 1(1)/97, நாள் - 17.6.1997 ம் உள்ளது.

5.  காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை உள்நோக்கத்துடன் பதிவு செய்யாமல் இருப்பதை கண்காணிக்கவும், தடுத்திடவும் என்ன விதிமுறைகளை காவல்துறையினர் பின்பற்ற வேண்டும் என்று RC. NO - 274292/குற்றம் - 1(1)/2004, நாள் - 3.2.2005 என்ற சுற்றறிக்கையின் கீழ் விதிமுறைகளை வகுத்துள்ளார்.

6.  வரதட்சணை மரணம் வழக்கில், கோட்டாட்சியர் பிரேத பரிசோதனை நடத்திய 15 நாட்களுக்குள் புலன் விசாரணை அதிகாரிக்கு அந்த பிரேத பரிசோதனை அறிக்கையை அனுப்பிட வேண்டும் என தமிழ்நாடு அரசு, உள்துறை, அரசு செயலாளர் கடிதம் (பல்வகை) எண். 1059,நாள் - 23.5.1990 ன் கீழ் ஆணை பிறப்பித்துள்ளார்.

7.  குடும்பத் தகராறு சம்பந்தப்பட்ட புகார்களிலும், சாதாரண பிரச்சினை சம்பந்தப்பட்ட புகார்களிலும் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட தரப்பினர்களின் வீட்டுக்கு நேரிடையாக சென்று அவர்கள் பிரச்சினையை விசாரித்து ஆலோசனை வழங்க வேண்டும். தேவையில்லாமல் இதுமாதிரியான பிரச்சினைகளில் கணவரை கைது செய்யக்கூடாது என காவல்துறை தலைமை இயக்குநர் ந. க. எண். 134085/குற்றம் - 1(3)/2003 என்ற கடிதத்தின் வாயிலாக அனைத்து காவல் நிலையத்திற்கும் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

8.  கைது செய்யப்பட்ட பெண்களிடம் காவல்துறையினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என காவல்துறை தலைமை இயக்குநர் ந. க. எண். 15857/குற்றம் 1(1)/2004,நாள் - 21.7.2004 ம் தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக அறிவுரைகளை வழங்கியுள்ளார் 

Wednesday, December 20, 2017

போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒருவரை வர சொல்லி விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதை ஏற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 160 படி, ஸ்டேஷன் விசாரணைக்கு அழைக்க சம்மன் அனுப்பி அதில் அவர் ஆஜராக வேண்டிய தேதி, நேரம் ஆகியவை கண்டிப்பாக அதில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.   ஸ்டேஷன் டைரியில் விசாரணை மினிட்ஸ் பற்றி, விசாரணை அதிகாரி எழுத வேண்டும் என்றும்,துன்புறுத்த கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.       மேலும், குற்றவியல் நடுவர்களும் போலீஸ் விசாரணையில் தலையிட கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
           
 11.12.2017ல் நீதியரசர் ரமேஷ் Crl.O.P.No.27174-2017ல் உத்தரவு வழங்கியுள்ளார். இந்த உத்தரவு இணையதளத்தில் உள்ளது. பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
                                      
 Bench said, it would not turn a blind eye to instances of harassment by the police under the guise of investigation.

Guidelines have been issued by the Madras HC has issued on how people should be summoned for interrogation in the criminal cases; in a bid to check harassment by the Police.

According to guidelines, the investigation officer is mandated to issue written summons under Criminal Procedure of Code S. 160 specifying the date & time when calling any person named in the complaint or witness to appear for inquiry.

“This Court, exercising its power under S. 482 CrPC normally wouldn’t interfere with the investigation conducted by a police officer,” said Justice M.S. Ramesh in the order.

“Nevertheless, it’d also not turn a blind eye to instances of harassment by Police, under the guise of investigation brought to its notice.”

The plea was filed by A. N. Lalman Lal & 4 others alleging police harassment under the guise of inquiry, it was heard by the High Court on Thursday.

While the Madras High Court acknowledged that the term ‘harassment’ itself has a ‘very wide meaning’, in order to circumvent the situations where it’s definition can be misconstrued, it issued guidelines.

Justice M.S. Ramesh said that officer is expected to record the minutes of inquiry in station diary & officer shouldn’t harass persons called for inquiry.

In his order, he also emphasized that while the magistrates do play a crucial role in the proceedings, it didn’t give them a licence to interfere in the investigation.

“Though Cr.P.C. empowers the Magistrate to be a guardian in all the stages of police investigation, there’s no power envisaging him to interfere with the actual investigation or the mode of investigation,” the Judge said.                                 

Wednesday, December 13, 2017

நாம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்மீது, காவல் நிலைய அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை

நாம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்மீது, காவல் நிலைய அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை எழுத்து மூலமாக அவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு பெற்றுக் கொண்டால்தான் அதனை நீதிமன்றத்தில் நாம் சமர்ப்பித்து காவல் நிலையத்தில் புகார் செய்ததையும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் நிரூபிக்க முடியும். அதன்மூலம் காவல் அதிகாரியின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும் முடியும்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?
*************************************************
பொதுவாக புகார் அளித்த நம்மிடம் வாய்மொழியாக உங்கள் புகார்மீது முதல் தகவல் அறிக்கை பதிய வழியில்லை என்று சொல்லி, காவல்நிலைய அதிகாரி நாம் அளித்த புகாரை “குளோஸ்” செய்து விடுவார். ஆனால், அவர் புகார் அளித்தவரிடம் புகாரின்மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என்ற காரணத்தை அறிவிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.

Cr.P.C. பிரிவு : 157 - 2 (ஆ)
*************************************
அவர் அந்தப் புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்பதற்கான காரணத்தை புகார் அளித்தவரிடம் அறிவிக்க வேண்டும் என்று குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 157 - 2(ஆ)வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தங்கள் மனுவில் குறிப்பிட்டு, புகார் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தை எழுத்து மூலம் காவல் நிலைய அதிகாரியிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

இந்திய சாட்சியச் சட்டம், 1872 - பிரிவு 76
*************************************************************
புகாரின்மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என்ற அறிக்கையின் நகலை தனது மேலதிகாரிக்கு எழுத்து மூலம் காவல் நிலைய அதிகாரி தெரிவிக்க வேண்டும்.
அந்த அறிக்கையின் நகலை மனுதாரர் காவல்நிலைய அதிகாரி அவர்களிடம் இருந்து இந்திய சாட்சியச் சட்டம், 1872 - பிரிவு 76ன் கீழும் பெற்றுக் கொள்ளலாம்.

அந்த புகார் சம்பந்தமாக நீதிமன்றத்தில் சென்று முறையிடும் போது மேற்கண்டவாறு பெற்ற ஆவணங்கள் புகார்தாரருக்கு கண்டிப்பாக உதவும்.

அன்புடன் செல்வம் பழனிச்சாமி

Wednesday, November 29, 2017

காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்து அடித்து கொடுமைப்படுத்தியதால்

தனது மகன் மீது காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்து, காவலில் வைத்து அடித்து கொடுமைப்படுத்தியதால் ஏற்பட்ட காயத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவரின் தாயார் ரிட் மனு தாக்கல் செய்ய முடியுமா?

"சேர்மன், ரயில்வே போர்டு Vs சந்திரிமாதாஸ் (2002-2-SCC-465)" என்ற வழக்கில், ரயில்வே ஊழியர்களால் கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணிற்கு ரூ 10,00,000 /-த்தை இழப்பீடாக வழங்கி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதேபோல் மதுரை உயர்நீதிமன்றம் " P. இராஜ்குமார் Vs காவல்துறை கூடுதல் இயக்குநர் (CDJ-2014-MHC-3992)"  என்ற வழக்கில், தாயாரை காவல்துறையினர் கொடுமைப்படுத்தியதற்காக இழப்பீடு வழங்குமாறு கோரி மகன் தாக்கல் செய்திருந்த நீதிப்பேராணை மனுவை இந்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு இடைக்கால நிவாரணமாக ரூ. 2,00,000 /-த்தை வழங்கியதோடு, அந்த வழக்கை மத்திய குற்றப் புலனாய்வு துறையினரின் விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேபோல் உச்சநீதிமன்றம் "சுபேஷ்சிங் Vs அரியானா மாநில அரசு (2006-3-SCC-178)" என்ற வழக்கில், காவல்துறையினரின் காவலிலுள்ள ஒருவர் இறக்க நேரிட்டால் அல்லது காவலில் வைத்து துன்புறுத்தப்பட்டிருந்தால் அல்லது இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 21 ல் கூறப்பட்டுள்ள உரிமைகளுக்கான உத்தரவாதம் மீறப்படுதல் போன்ற சம்பவங்கள் மெய்பிக்கப்படும் நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 32 அல்லது 226 ன் கீழ் பாதிக்கப்பட்ட நபருக்கு நீதிமன்றங்கள் இழப்பீடு தொகை வழங்கலாம் என்று தீர்ப்பு கூறியுள்ளது. இருந்தபோதிலும் அவ்வாறு இழப்பீடு தொகை வழங்குவதற்கு முன்பாக கீழ்க்கண்டவற்றை நீதிமன்றம் தனது கருத்தில் கொள்ள வேண்டும்.

1. இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 21 ல் கூறப்பட்டுள்ளவை மீறப்பட்டுள்ளது என்பது வெளிப்படையாக, மறுக்க முடியாத வகையில் அமைந்துள்ளதா?

2. அவ்வாறு அந்த உரிமைகள் மீறப்பட்டுள்ளது நீதிமன்றத்தின் மனசாட்சியை பாதிக்கும் அளவிற்கு மிகப்பெரிய விஷயமாக உள்ளதா?

3. காவலில் வைத்து துன்புறுத்தப்பட்டதால் மரணம் ஏற்பட்டுள்ளதா? அல்லது துன்புறுத்தப்பட்ட நபருக்கு ஏற்பட்ட காயங்களை மெய்பிக்கும் விதமாக மருத்துவ அறிக்கை அல்லது வெளிப்படையான காயங்கள் அல்லது தழும்புகள் அல்லது உடல் ஊனம் உள்ளதா?

காவல்துறையினரின் காவலில் வைத்து ஒரு நபரை துன்புறுத்தியதற்கு அந்த நபரின் வாக்குமூலத்தை தவிர மருத்துவ அறிக்கை அல்லது அந்த வாக்குமூலத்தை உறுதி செய்யக்கூடிய சாட்சியம் அல்லது காவல்துறையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை அல்லது அந்த சம்பவம் முற்றிலும் மிகைப்படுத்தப்பட்டோ கூறப்பட்டுள்ளது என்கிற விசயத்தை தெளிவாக அறிந்து கொள்கிற நிலையில், கட்டளை 32 அல்லது 226 ன் கீழ் இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்க இயலாது. ஆனால் பாதிக்கப்பட்ட நபரை உரிமையியல் /குற்றவியல் நடவடிக்கைகள் மூலம் உரிய நிவாரணங்களை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்த வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

அதேபோல் உச்சநீதிமன்றம் "நிலா பட்டி பெகரா Vs ஒரிசா மாநில அரசு (1993-2-SCC-746)" என்ற வழக்கில் காவல்துறை காவலில் இருந்த இளைஞர் இறந்த வகைக்கு அவருடைய தாயாருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.

அதேபோல் வரலாற்று சிறப்புமிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பான "D. K. பாசு Vs மேற்கு வங்க மாநிலம் (AIR-1997-SCW-610)" என்ற வழக்கில், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பண ரீதியாக இழப்பீடு வழங்க வேண்டியது அரசின் கடமை என்று தீர்ப்பு கூறியுள்ளது.

எனவே தனது மகனுக்கு ஏற்பட்ட காயங்களுக்காக தாயார் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய எவ்வித தடையும் இல்லை என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

W. P. NO - 9606/2010, DT - 16.12.2016

Banumathi Vs The Secretary, TAMILNADU and Others

(2017-1-TLNJ-CRL-19)

காவல்துறை முக்கிய அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகள் :

காவல்துறை முக்கிய அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகள் :

1.  காவல்துறையினர் எப்போதெல்லாம் ஒரு வழக்கின் புலன் விசாரணையை மறுக்கலாம் என்பது குறித்து, அரசாணை எண். 332, நீதித்துறை 28, பிப்ரவரி, 1906 மற்றும் அரசாணை எண். 485 நீதித்துறை 14,மார்ச் 1911 என்ற அரசாணைகளை பிறப்பித்துள்ளது. மேலும் தமிழ்நாடு காவல்நிலை ஆணை எண். 562 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 157(1)(b) யிலும் இதுகுறித்து கூறப்பட்டுள்ளது.

2.  கடித எண். வி1 - 24021/97/84/ஜிபிஏஎல், நாள் - 4.7.1978 மற்றும் 10.7.1985 ன்படி இந்திய அரசு, உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மத்திய காவல் அமைப்புகளின் தலைமைக்கு அனுப்பிய கடிதத்தில், கண்டிப்பாக காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய நடத்தை விதிகள் குறித்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

3.  காவல்நிலைய பொறுப்பு அலுவலர்கள் FIR நகலை புகார்தாரருக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க மறுப்பது மிகக் கடுமையான குற்றமாகும் என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் சி. எண். /165918/குற்றம் /(2)(1)/94, நாள் - 27.7.1994 ன்படி கீழ் ஆணை பிறப்பித்துள்ளார்.

4.  காவல் நிலைய ஆய்வாளர் புகாரை பெற்றுக் கொண்டவுடன் அது பிடியாணை வேண்டா குற்றமாக இருந்தால் உடனடியாக FIR பதிவு செய்ய வேண்டும். பிடியாணை வேண்டும் குற்றமாக இருந்தால் அந்த குற்றத்தை விசாரணை செய்ய, குற்றவியல் நடுவரின் அறிவுறுத்தலை பெற வேண்டும். சாதாரண மனுக்களை பெறும்போது, அவை உடனடியாக மனுக்கள் பதிவேட்டில் (CSR) பதிவு செய்யப்பட்டு, புகார்தாரருக்கு உடனடியாக CSR நகல் கொடுக்க வேண்டும். இவைகளை கடைபிடிக்காதது சட்ட விரோதமானதாக கருதப்பட்டு கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் RC. NO /62868/குற்றம் /1(2)/2001,நாள் - 31.3.2001 ன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் இது தொடர்பாக அரசாணை எண். 865, உள் (காவல் - 1) துறை, நாள் - 9.6.1997.என்ற அரசாணை உள்ளது. மேலும்  தலைமை அலுவலக நிலை ஆணை 133622/குற்றம் - 1(1)/97, நாள் - 17.6.1997 ம் உள்ளது.

5.  காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை உள்நோக்கத்துடன் பதிவு செய்யாமல் இருப்பதை கண்காணிக்கவும், தடுத்திடவும் என்ன விதிமுறைகளை காவல்துறையினர் பின்பற்ற வேண்டும் என்று RC. NO - 274292/குற்றம் - 1(1)/2004, நாள் - 3.2.2005 என்ற சுற்றறிக்கையின் கீழ் விதிமுறைகளை வகுத்துள்ளார்.

6.  வரதட்சணை மரணம் வழக்கில், கோட்டாட்சியர் பிரேத பரிசோதனை நடத்திய 15 நாட்களுக்குள் புலன் விசாரணை அதிகாரிக்கு அந்த பிரேத பரிசோதனை அறிக்கையை அனுப்பிட வேண்டும் என தமிழ்நாடு அரசு, உள்துறை, அரசு செயலாளர் கடிதம் (பல்வகை) எண். 1059,நாள் - 23.5.1990 ன் கீழ் ஆணை பிறப்பித்துள்ளார்.

7.  குடும்பத் தகராறு சம்பந்தப்பட்ட புகார்களிலும், சாதாரண பிரச்சினை சம்பந்தப்பட்ட புகார்களிலும் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட தரப்பினர்களின் வீட்டுக்கு நேரிடையாக சென்று அவர்கள் பிரச்சினையை விசாரித்து ஆலோசனை வழங்க வேண்டும். தேவையில்லாமல் இதுமாதிரியான பிரச்சினைகளில் கணவரை கைது செய்யக்கூடாது என காவல்துறை தலைமை இயக்குநர் ந. க. எண். 134085/குற்றம் - 1(3)/2003 என்ற கடிதத்தின் வாயிலாக அனைத்து காவல் நிலையத்திற்கும் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

8.  கைது செய்யப்பட்ட பெண்களிடம் காவல்துறையினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என காவல்துறை தலைமை இயக்குநர் ந. க. எண். 15857/குற்றம் 1(1)/2004,நாள் - 21.7.2004 ம் தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

காவல் நிலையத்தில் பணத்தை திருப்பி தருவதாக ஒப்புக்கொண்டு

 காவல் நிலையத்தில் பணத்தை திருப்பி தருவதாக ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுக்கும் ஒப்புதல் கடிதத்தை ஒரு சாட்சிய ஆவணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது.
காவல் நிலையத்தில் பணத்தை திருப்பி தருவதாக ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுக்கும் ஒப்புதல் கடிதத்தை ஒரு சாட்சிய ஆவணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது. அவ்வாறு தாக்கல் செய்ய்யப்படும் ஆவணம் இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 27ன் கீழ் தடை செய்யப்பட்ட ஆவணம் ஆகும்.

*Panneerselvam C. Vs. Manoharan (T. Ravindran J) 2017 (1) CTC 18*

உரிமையியல் வழக்குகளில் காவல்துறையினர் தலையிடலாமா?

உரிமையியல் வழக்குகளில் காவல்துறையினர் தலையிடலாமா?

சொத்தின் உரிமையாளர் யார் என்று கண்டறியும் உரிமையியல் நீதிபதிக்கான பணியை காவல்துறையினர் செய்யக்கூடாது. ஒரு காவல்துறை அதிகாரி நீதிபதியை போன்று செயல்பட முடியாது. எனவே உரிமையியல் சம்பந்தப்பட்ட வழக்குகளில் காவல்துறையினர் தலையிடக்கூடாது.

மதுரை உயர்நீதிமன்றம்

CRL. OP. NO - 17302/2014, DT - 12.11.2014

A. சிக்கந்தர் Vs காவல்துறை அதிகாரிகள், மதுரை

2015-1-MLJ-CRL-5