***********************************************************************
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 506(i) ன் கீழான குற்றத்தை பொறுத்து மதுரை உயர்நீதிமன்றம் " சீனிவாசன் Vs சார்பு ஆய்வாளர் (2009-4-MLJ-CRL-1118)" என்ற வழக்கில் தெளிவாக விவாதித்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு பத்தி 11 ல் பின்வருமாறு கூறியுள்ளது.
ஒருவருக்கு பாதிப்பினை ஏற்படுத்த வேண்டும் என்கிற உள்நோக்கம் இருந்தால் மட்டுமே இ. த. ச பிரிவு 506-ல் கூறப்பட்டுள்ளவை பொருந்தும். ஒருவருக்கு அபாயம் ஏற்படுத்த வேண்டும் என்கிற எந்த உள்நோக்கமும் இல்லாமல் வெறுமனே வெறும் வார்த்தைகளை பயன்படுத்துவது போதுமானதல்ல. ஒருவர் மற்றொருவரின் உடலுக்கு, புகழுக்கு அல்லது சொத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்துடன் செயல்பட்டார் என்பதை எடுத்துக் காட்டினால் மட்டுமே இ. த. ச பிரிவு 506-ன் கீழான குற்றச் செயல் நிகழ்ந்துள்ளதாக கருதப்படும்.
அதேபோல் மதுரை உயர்நீதிமன்றம் " இராஜன் Vs காவல்துறை ஆய்வாளர் (2008-2-MWN-CRL-258)" என்ற வழக்கில், பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாக கொண்டு கீழ்க்கண்டவாறு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் பத்தி 10 - ல்
" இதே போன்ற சங்கதிகள் கொண்ட " உஷாபாலா Vs பஞ்சாப் மாநில அரசு (2002-2-CCC-320-P&H)" என்ற வழக்கில், பஞ்சாப் உயர்நீதிமன்றம் இ. த. ச பிரிவு 506(ii) ன் கீழான குற்ற நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.
வெறுமனே மிரட்டுவதால் இ. த. ச பிரிவு 506-ன் கீழான குற்றச்சாட்டிற்கான முகாந்திரம் இந்த மனுதாரருக்கு எதிராக உள்ளதாக கருத முடியாது. எனவே இந்த மனுதாரருக்கு எதிராக எந்த வழக்கும் உருவாகவில்லை.
எனவே 15.7.1999 ஆம் தேதி இ. த. ச பிரிவுகள் 406 மற்றும் 498(A) ன் கீழ் பாட்டியாலா, சாதர் காவல் நிலையத்தில் குற்ற எண் 313 என்கிற எண்ணில் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கில் நிகழ்நிலை புகார்தாரரை மிரட்டியதாக மட்டுமே குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது அவருடைய உயிருக்கு ஆபத்து உள்ளது என்று காவல்துறையினரின் பாதுகாப்பு அவரால் கோரப்படவில்லை. எனவே இ. த. ச பிரிவு 506(ii) ன் கீழான குற்றச்சாட்டும் நிலைக்கதக்கதல்ல என்கிற முடிவிற்கு இந்த நீதிமன்றம் வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் மதுரை உயர்நீதிமன்றம் " கிருஷ்யா டைல்ஸ் & போர்டடரிஸ் (மெட்ராஸ் பி. லிட்) Vs காவல்துறை ஆய்வாளர் (2006-2-CTC-642)" என்ற வழக்கில், 1 முதல் 3 வரையான எதிரிகள் தன்னை கொன்று விடுவதாக மிரட்டினார்கள் என்கிற குற்றச்சாட்டினை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுவாக கூறப்படும் அந்த கூற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முடியாது என்று கூறியுள்ளது.
இதேபோன்றதொரு தீர்ப்பு " D. சுப்பிரமணியன் சுவாமி Vs C. புஷ்பராஜ் (1998-1-CTC-300)" என்ற வழக்கிலும் கூறப்பட்டுள்ளது.
எனவே ஒருவரை கொலை செய்து விடுவதாக வெறும் வார்த்தைகளால் மட்டும் திட்டியதற்காக அவர் மீது இ. த. ச பிரிவுகள் 506(i) மற்றும் 506(ii) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர முடியாது எனவும் அவ்வாறு தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யவும் முடியும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRL. OP. NO - 18665/2014, DT - 21.4.2015
S. Selvakumar Vs Inspector of police, AWPS, Keelakkarai, Ramanathapuram District
2015-2-MWN-CRL-195

No comments:
Post a Comment