Wednesday, November 29, 2017

எஸ்மா_சட்டம்_என்றால்_என்ன_தெரியுமா.??

எஸ்மா_சட்டம்_என்றால்_என்ன_தெரியுமா.??

1981-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த அத்தியவாசிய சேவைகள் பராமரிப்புச் சட்டம், ( #Essential_Services_Maintenance_Act – #esma)

போராட்ட காலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் தடுக்க மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரங்களை கொடுக்கிறது. அதன்படி, தபால், தந்தி, தொலைபேசி உள்ளிட்ட தொலைத்தொடர்பு, விமானம், ரயில், சாலை போக்குவரத்து போன்றவை அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் வருகின்றன. மத்திய, மாநில அரசுகளின் உணவுப் பொருள் கொள்முதல், விநியோகம் போன்ற துறைகளும், பாதுகாப்பு, துறைமுகங்கள் போன்றவையும் இந்த சட்டத்தின் கீழ் உள்ளன. மின்சாரம், குடிநீர், பால் விநியோகம், வங்கி போன்றவற்றையும் அத்தியாவசிய சேவைகளாக கருத இச்சட்டம் வகை செய்கிறது.
அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம், ஸ்டிரைக் போன்ற போராட்டங்களில் இறங்குவதை இச்சட்டம் தடை செய்கிறது. வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதோ, போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதோ, தேவையேற்படும் பட்சத்தில் கூடுதல் நேரம் வேலை செய்ய மறுப்பதோ கூட சட்ட விரோதம்தான்.
அவ்வாறு போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களை வாரண்ட் ஏதுமின்றி கைது செய்யும் அதிகாரம் காவல்துறையினருக்கு உண்டு. அரசு ஊழியர்கள் எனில் பணி நீக்கம், அத்தியாவசிய சேவைத்துறையில் உள்ள பிற தொழிலாளர்களுக்கு ஓராண்டு சிறை அல்லது 2 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்க இச்சட்டம் வகை செய்கிறது.

2002-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்த போது, சுமார் 2 லட்சம் பேரை அப்போதைய முதலமைச்சர் அம்மா அவர்கள் பணி நீக்கம் செய்தது இச்சட்டத்தை பயன்படுத்தியே. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே, நீக்கப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது....!

Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest

Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest என்பதையே ”SARFAESI ACT” என்று சுருக்கமாக அழைக்கிறோம்.

வங்கிகள் நீதிமன்றங்களுக்குச் செல்லாமலேயே ஒருவருக்கு கொடுத்த கடனை வசூலித்துக் கொள்வதற்கு இந்தச் சட்டம் முழு அதிகாரத்தைத் தருகிறது. இதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், “வங்கிக் கடன் வசூல் தீர்ப்பாயம்” என்ற அமைப்பின் உதவியையும் வங்கிகள் பெறலாம்.
இந்தச் சட்டம் கடந்த 2002ம் ஆண்டுதான் இயற்றப்பட்டது.

2002ம் ஆண்டுக்கு முன்பு வரை வங்கிகள் தன்னுடைய வாடிக்கையாளருக்கு வழங்கிய கடனை வசூலிக்க படாதபாடுபட்டு வந்தது.

அதற்கு வங்கியானது முதலில் உரிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். வழங்கப்பட்டிருக்கும் கடன் தொகைக்கு ஏற்ப நீதிமன்றத்தில் கட்டணம் செலுத்த வேண்டும். கடனுக்காக ஜாமீனாக கொடுக்கப்பட்ட சொத்தை ஜப்தி செய்வதற்கு பல சட்ட நடைமுறைகளை பின்பற்றி, வழக்கை நடத்தி தீர்ப்பைப் பெற வேண்டும்.

ஆனால், இந்த சர்பாசி சட்டம் அமுலுக்கு வந்தவுடன் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. யாரையும் எதிர்பார்க்காமல், வங்கியானது தான் கொடுத்த கடனை தானே வசூல் செய்வதற்கு இந்தச் சட்டம் வழிவகுத்தது.

இந்தச் சட்டத்தின் கீழ், 'கடன் வசூல் தீர்ப்பாயம்' (Debit Recovery Tribunal) என்று ஒன்றும் 'கடன் வசூல் மேல்முறையீட்டு தீர்ப்பாயம்' (Debit Recovery Appellate Tribunal) என்று ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
. இதில் எளிய முறையில் வங்கியானது கடன்காரர்கள் மீது வழக்கு தொடுக்கலாம். பிணைய சொத்தை வழக்கு தொடுப்பதற்கு முன்பாகவே வங்கியின் அதிகாரம் பெற்ற அலுவலர் மாவட்ட குற்றவியல் நடுவர் (DRO) மற்றும் மாவட்ட ஆட்சியர் வாயிலாக பற்றுகை செய்யலாம். நீதிமன்றம் பக்கம் போகும் வேலையே வங்கிக்கு இல்லை. அதே மாதிரி கடன்காரர்களும் கண்டபடி எதிர்வாதம் செய்யவும் முடியாது.

பிரிவு - 13
அடுத்தவர்கள் வாங்கிய கடனுக்கு உத்தரவாதம் அளித்துள்ளவர்கள், அதற்கு ஈடாக அளித்துள்ள சொத்துகளின் மீது சர்பாசி சட்டம் 2002 - பிரிவு 13-ன் கீழ் நடவடிக்கை எடுக்கமுடியும். ஒரு வேளை உத்தரவாத கையெழுத்திட்ட நபர்கள் அதற்கு ஈடாக நிறுவன பங்குகளைக் காட்டியிருந்தால் அவற்றை விற்பதற்கான நடவடிக்கை எடுக்க முடியும்.

பிரிவு - 17
வங்கியினுடைய சட்ட நடவடிக்கைளில் குறை ஏதாவது இருந்தால் அல்லது வங்கியானது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருந்தால் அது பற்றி கடன்பெற்றவர் சர்பாசி சட்டம் பிரிவு 17-இன்படி கடன் வசூல் தீர்ப்பாயத்திடம் முறையிடலாம்.

பிரிவு - 34
பிரிவு 34-இன்படி சர்பாசி சட்டத்தின் கீழ் வங்கிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை வங்கிகள் செயல்படுத்துவதை தடுத்து நிறுத்தும்படி எவரும் இடைக்கால உறுத்துக்கட்டளை உள்ளிட்ட இடைக்கால நிவாரணம் எதையும் நீதிமன்றங்களில் இருந்து பெறவே முடியாது.
ஏனென்றால், அவைகளை வழங்குவதற்கு உரிமையியல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது.
நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்கும்போது தனி நபர் பிணை அல்லது ஜாமீன் கேட்பது அவர்களின் வழக்கமான நடைமுறையாகும். சொந்தமாக ஜாமீன் அளித்த தொழிலதிபர்களிடமிருந்து கடனை மீட்கும் நடவடிக்கையை வங்கிகள் கடைசிபட்சமாகத்தான் மேற்கொள்கின்றது.

சொந்த ஜாமீன் அளித்தவர்களின்மீது கொடுத்த கடனை வசூலிப்பதற்காக வங்கிகள் எடுத்த நடவடிக்கை மிகக் குறைவாகும்.
கடன் மீட்பு தீர்ப்பாயத்துக்கு செல்லும் முன் உத்தரவாதம் அளித்த நபரின் சொத்துகளை முடக்கி அவற்றை விற்பதற்கான நடவடிக்கையை வங்கிகள் முதலில் எடுக்க வேண்டும்.

கடன் வாங்கிய ஒரு நிறுவனம் நஷ்டமாகி மூடப்பட்டு இருந்தால், அந்நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு சொந்த ஜாமீன் வழங்கியவர்களிடமிருந்து அந்தக் கடன் தொகையை வசூலிக்குமாறு நிதி அமைச்சகம் அனைத்து பொதுத் துறை வங்கிகளுக்கு கடந்த 18.03.2016 அன்று அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக தொடரப்படும் வழக்குகள் மற்றும் சொத்துகளை முடக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து இதே போன்ற நடவடிக்கைகளை பிற தொழில் நிறுவனங்களின் தொழிலதிபர்களிடமும் மேற்கொள்ள வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக் கையை ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தி அனுப்பியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிங்பிஷர் ஏர்லைன்ஸுக்கு கடன் அளித்த விஷயத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு சென்று விட்ட நிலையில் அவரிடமிருந்து, ”வழங்கிய கடனை” வசூலிக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. அதனால் இதுபோன்ற நிலை பிற வாராக்கடனை செலுத்தாத நிறுவனங்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக நிதி அமைச்சகம் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிய வருகிறது.

சர்பாஸி சட்டத்தின் வாயிலாக வங்கி எடுத்து ஏலம் விட்ட சொத்தை ஒருவர் வாங்குகின்றார். அவ்வாறான ஏலத்திற்கு எடுத்த தொகைக்கு Sale Certificate வழங்கப்படுகின்றது. அந்த Sale Certificate அடிப்படையில் ஏலத்தில் சொத்தை எடுத்தவர் அதை பதிவு செய்ய முனையும்பொது, பதிவாளர் அந்த சொத்தின் அரசு மதிப்பிற்கு Stamp Duty செலுத்த சொல்கின்றார். உயர்நீதிமன்றமானது, ection 47-A of the Indian Stamp Act, 1899, பொருந்தாது எனவும் Sale Certificate மதிப்பிற்கு Stamp Duty செலுத்துவதே சரி! என ஆணையிட்டுள்ளது. வழக்கு எண்: 2015 (1) CTC 526 (Mad)

ஒருவர் வீட்டிற்காக வங்கியில் கடன் வாங்கியுள்ளார். அவர் வீட்டை வாடகைக்கு வீட்டை விட்டுள்ளார். இதற்கிடையில் வீட்டிற்காக வங்கியில் வாங்கிய கடனை கட்டமுடியாத நிலையில், வங்கியானது சர்பாஸி சட்டத்தை பயன்படுத்தி அந்த வீட்டின் உடமையை எடுக்க முயற்சி செய்கின்றது. அப்போது ஒரு சட்ட வினா எழுகின்றது. வாடகைதாரர் குடியிருக்கும்போது, மேற்படி சட்டத்தை கொண்டு அவரை வாடகைதாரரை அங்கிருந்து அகற்றிவிட்டு அந்த வீட்டின் உடமையை எடுக்கு சர்பாஸி சட்டம் அனுமதிக்கின்றதா? அதற்கு உச்சநீதிமன்றம் “சர்பாஸி சட்டத்தில் வாடகைதார்ர் இருக்கும்போது அவரை காலி செய்து உடமை எடுக்க அதிகாரம் இல்லை எனவும் வாடகைதாரரை முறையாக சட்டப்படியாக அவரை அந்தவீட்டைவிட்டு காலி செய்த பின்னரே அந்த வீட்டின் உரிமையை எடுக்க முடியும் என தீர்ப்பளித்துள்ளது. வழக்கு எண்: 2016(2) CTC 319 (SC)

சர்பாஸி சட்டத்தின்படி சொத்தின் உடமையை எடுக்கும் வகையில் வங்கியானது நீதிமன்றத்தில் ஆணையிட கோரியதில், வங்கி அதற்கான ஆணையை பிறப்பித்திருக்கும் நிலையில் (உடமை இன்னும் எடுக்கப்படவில்லை) சொத்தின் உரிமையாளர் DRT –ல் மேல்முறையீடு செய்கின்றார். வங்கியானது சொத்தின் உடமை இன்னும் எடுக்கபடாத்தால், மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படவேண்டும் என்று வாதிட்டதின்பேரில் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகின்றது. சொத்தின் உரிமையாளரின் மேல்முறையீட்டின் உரிமையானது சொத்தின் உடமை எடுக்கப்படவில்லை என்பதை காரணமாக கொண்டு, எந்தவிதத்திலும் பாதிக்காது என தீர்ப்பளித்துள்ளது. வழக்கு எண்: 2015(4) CTC 18 (Mad)
SARFAESI சட்டத்தின் படி கடன் பெற்றவரின் சொத்துக்களை வங்கி எடுத்து கொள்கின்றது. அந்த கடன் பெற்றவர் இந்திய அரசுக்கு சுங்கவரி செலுத்த வேண்டும் என்பதால் வங்கியானது அந்த சொத்தை விற்கும்போது விற்ற பணத்தில் இருந்து முதலில் இந்திய சுங்கவரி துறையானது வரியை பெற உரிமை உள்ளது! என்ற வாதத்தை மேற்படி சட்டத்தின் பிரிவு 35 யை காட்டி சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. வழக்கு எண்: 2016 (3) CTC 66 (Mad).

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஒரு அரசு ஊழியரை எவ்வளவு காலத்திற்கு பணியிடை நீக்கத்திலேயே அரசு வைத்திருக்கலாம்?

DSP செல்வமணி லஞ்ச வழக்கு :

செல்வமணி என்பவர் சார்பு ஆய்வாளராக 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணியில் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 1998 ஆம் ஆண்டில் ஆய்வாளராகவும், 2010 ஆம் ஆண்டில் காவல்துறை துணை கண்காணிப்பாளராகவும் பதவி உயர்வு பெற்றார். அவர் இராயபுரம் உதவி ஆணையராகவும், தாம்பரம் உதவி ஆணையராகவும் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 2011 ஆம் ஆண்டில் மாவட்ட குற்றப் பதிவேட்டு பிரிவிலும், 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் திருச்சி மாவட்டம் லால்குடியில் காவல் துணை கண்காணிப்பாளராகவும் பணியமர்த்தப்பட்டார். அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் லால்குடி, கல்லாகுடி, கொல்லடம், சமயபுரம் மற்றும் சிறுகானூர் காவல் நிலையங்கள் இருந்தது.

இந்நிலையில் ராஜமாணிக்கம் என்பவரிடம் ரூ. 25,000/- லஞ்சம் கேட்டதாக ஒரு வழக்கு திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு சிறப்பு ஆய்வாளரால் குற்ற எண். 11/2012 என்கிற எண்ணில் பதிவு செய்யப்பட்டது. அதனால் அவரை பணியிடை நீக்கம் செய்து G. O. 2D. 208 HOME (Pol. 2) Department என்கிற எண்ணில் ஓர் உத்தரவு 27.7.2012 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. DSP மீதான லஞ்ச குற்ற வழக்கில் இறுதியறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த DSP தன்னை பணியிடை நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் W. P. NO - 21014/2013 என்ற எண்ணின் கீழ் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தார். அதனை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், DSP யை பணியிடை நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி ஒரு மனுவை அரசிற்கு அளிக்குமாறும், அதனை அரசு பரிசீலனை செய்து DSPயை அதிக முக்கியத்துவம் இல்லாத தொலை தூரத்திலுள்ள ஒரு பதவியில் நியமிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவினால் குறையுற்ற அரசு ஒரு ரிட் மேல்முறையீட்டை W. A. NO - 1552/2014 என்ற எண்ணின் கீழ் தாக்கல் செய்தது. அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் DSP தன்னை பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு ஒரு மனுவை அரசிடம் அளிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டதோடு, அந்த மனுவை இரண்டு வாரங்களில் பரிசீலனை செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

மேற்படி உத்தரவுபடி DSP ஒரு கோரிக்கை மனுவை தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளரிடம் 17.12.2012 ஆம் தேதி அளித்தார். அந்த மனுவை பெற்றுக் கொண்ட முதன்மை செயலாளர், DSP லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பொறி வைத்து பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருந்து வருவதால், பொது நிர்வாகத்துறையில் அவருக்கு மீண்டும் பணி வாய்ப்பு வழங்கப்பட்டால், அது மற்ற பொது ஊழியர்களின் நடத்தையை பாதிக்கும் என குறிப்பிட்டு DSP யின் கோரிக்கை மனுவை நிராகரித்து 30.12.2014 ம் தேதி ஒரு உத்தரவை பிறப்பித்தார். அந்த உத்தரவை எதிர்த்து DSP சென்னை உயர்நீதிமன்றத்தில் W. P. NO - 26606/2015 என்ற ரிட் மனுவை தாக்கல் செய்தார்.

DSP தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் " அம்பிகாபதி Vs இயக்குநர், மக்கள் நல்வாழ்வுத் துறை (1991-WLR-273) மற்றும் அஜய் குமார் செளத்ரி  Vs யூனியன் ஆப் இந்தியா (2015-2- SCALE - 432)" ஆகிய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, பணியிடை நீக்கம் உத்தரவு 3 ம மேல் நீடித்திருக்ககூடாதென்றும், அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் தவறு செய்ததாக கூறப்படும் அரசு ஊழியர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் மீது உரிய உத்தரவை பிறப்பித்து, அந்த பணியிடை நீக்கத்தை நீட்டித்திருக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் இந்த DSP யை எந்தவிதமான காரணங்களையும் குறிப்பிடாமல் பணியிடை நீக்கம் செய்து, நீண்ட காலமாக பணியிடை நீக்கத்திலேயே அரசு வைத்துள்ளது என்றும், எனவே அந்த உத்தரவை ரத்து செய்து DSP யை பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

DSP தரப்பு வாதத்தை கேட்ட உயர்நீதிமன்றம், இந்த ரிட் மனுவை உச்சநீதிமன்றம் " அஜய் குமார் செளத்ரி Vs யூனியன் ஆப் இந்தியா"  என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்க வேண்டும் என்று கூறியது.

ஓர் அரசு ஊழியரை பணியிடை நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவானது 3 மாதங்களுக்கு மேல் நீடித்திருக்ககூடாது எனவும், அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் தவறு செய்ததாக கூறப்படும் அரசு ஊழியருக்கு அந்த குற்றச்சாட்டு சார்வு செய்யப்பட்டு, அதன் மீது உரிய உத்தரவை பிறப்பித்து, இடைநீக்கத்தை நீட்டித்திருக்க வேண்டுமென்று மேற்கண்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

தமிழ்நாடு அரசாங்கம் கடித எண் 13519/எண்/2016-1,P & AR (PER. N) Dept என்கிற 23.07.2015 ஆம் தேதியிட்ட கடிதத்தின் மூலம் அரசு முதன்மை செயலாளர்கள், தலைமைச் செயலகத்தில் உள்ள துறைகள் மற்றும் அனைத்து துறையினரையும் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.

எனவே ஒரு அரசு ஊழியரை நீண்ட காலமாக எந்த காரணங்களும் இல்லாமல் பணியிடை நீக்கத்தில் வைத்திருப்பது நியாயமற்றது என்று கூறி இந்த DSP யை தொலை தூரத்தில் உள்ள அதிக முக்கியத்துவம் இல்லாத பணியில் வேலைக்கு அமர்த்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

W. P. NO - 26606/2015, DT - 29.9.2016
K. Selvamani Vs Chief Secretary, Tamilnadu and DGP,
(2017-1-CTC-795)
(2016-7-MLJ-766)

காவல்துறை முக்கிய அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகள் :

காவல்துறை முக்கிய அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகள் :


1.  காவல்துறையினர் எப்போதெல்லாம் ஒரு வழக்கின் புலன் விசாரணையை மறுக்கலாம் என்பது குறித்து, அரசாணை எண். 332, நீதித்துறை 28, பிப்ரவரி, 1906 மற்றும் அரசாணை எண். 485 நீதித்துறை 14,மார்ச் 1911 என்ற அரசாணைகளை பிறப்பித்துள்ளது. மேலும் தமிழ்நாடு காவல்நிலை ஆணை எண். 562 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 157(1)(b) யிலும் இதுகுறித்து கூறப்பட்டுள்ளது.

2.  கடித எண். வி1 - 24021/97/84/ஜிபிஏஎல், நாள் - 4.7.1978 மற்றும் 10.7.1985 ன்படி இந்திய அரசு, உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மத்திய காவல் அமைப்புகளின் தலைமைக்கு அனுப்பிய கடிதத்தில், கண்டிப்பாக காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய நடத்தை விதிகள் குறித்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

3.  காவல்நிலைய பொறுப்பு அலுவலர்கள் FIR நகலை புகார்தாரருக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க மறுப்பது மிகக் கடுமையான குற்றமாகும் என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் சி. எண். /165918/குற்றம் /(2)(1)/94, நாள் - 27.7.1994 ன்படி கீழ் ஆணை பிறப்பித்துள்ளார்.

4.  காவல் நிலைய ஆய்வாளர் புகாரை பெற்றுக் கொண்டவுடன் அது பிடியாணை வேண்டா குற்றமாக இருந்தால் உடனடியாக FIR பதிவு செய்ய வேண்டும். பிடியாணை வேண்டும் குற்றமாக இருந்தால் அந்த குற்றத்தை விசாரணை செய்ய, குற்றவியல் நடுவரின் அறிவுறுத்தலை பெற வேண்டும். சாதாரண மனுக்களை பெறும்போது, அவை உடனடியாக மனுக்கள் பதிவேட்டில் (CSR) பதிவு செய்யப்பட்டு, புகார்தாரருக்கு உடனடியாக CSR நகல் கொடுக்க வேண்டும். இவைகளை கடைபிடிக்காதது சட்ட விரோதமானதாக கருதப்பட்டு கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் RC. NO /62868/குற்றம் /1(2)/2001,நாள் - 31.3.2001 ன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் இது தொடர்பாக அரசாணை எண். 865, உள் (காவல் - 1) துறை, நாள் - 9.6.1997.என்ற அரசாணை உள்ளது. மேலும்  தலைமை அலுவலக நிலை ஆணை 133622/குற்றம் - 1(1)/97, நாள் - 17.6.1997 ம் உள்ளது.

5.  காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை உள்நோக்கத்துடன் பதிவு செய்யாமல் இருப்பதை கண்காணிக்கவும், தடுத்திடவும் என்ன விதிமுறைகளை காவல்துறையினர் பின்பற்ற வேண்டும் என்று RC. NO - 274292/குற்றம் - 1(1)/2004, நாள் - 3.2.2005 என்ற சுற்றறிக்கையின் கீழ் விதிமுறைகளை வகுத்துள்ளார்.

6.  வரதட்சணை மரணம் வழக்கில், கோட்டாட்சியர் பிரேத பரிசோதனை நடத்திய 15 நாட்களுக்குள் புலன் விசாரணை அதிகாரிக்கு அந்த பிரேத பரிசோதனை அறிக்கையை அனுப்பிட வேண்டும் என தமிழ்நாடு அரசு, உள்துறை, அரசு செயலாளர் கடிதம் (பல்வகை) எண். 1059,நாள் - 23.5.1990 ன் கீழ் ஆணை பிறப்பித்துள்ளார்.

7.  குடும்பத் தகராறு சம்பந்தப்பட்ட புகார்களிலும், சாதாரண பிரச்சினை சம்பந்தப்பட்ட புகார்களிலும் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட தரப்பினர்களின் வீட்டுக்கு நேரிடையாக சென்று அவர்கள் பிரச்சினையை விசாரித்து ஆலோசனை வழங்க வேண்டும். தேவையில்லாமல் இதுமாதிரியான பிரச்சினைகளில் கணவரை கைது செய்யக்கூடாது என காவல்துறை தலைமை இயக்குநர் ந. க. எண். 134085/குற்றம் - 1(3)/2003 என்ற கடிதத்தின் வாயிலாக அனைத்து காவல் நிலையத்திற்கும் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

8.  கைது செய்யப்பட்ட பெண்களிடம் காவல்துறையினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என காவல்துறை தலைமை இயக்குநர் ந. க. எண். 15857/குற்றம் 1(1)/2004,நாள் - 21.7.2004 ம் தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

காவல் நிலையத்தில் பணத்தை திருப்பி தருவதாக ஒப்புக்கொண்டு

 காவல் நிலையத்தில் பணத்தை திருப்பி தருவதாக ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுக்கும் ஒப்புதல் கடிதத்தை ஒரு சாட்சிய ஆவணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது.
காவல் நிலையத்தில் பணத்தை திருப்பி தருவதாக ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுக்கும் ஒப்புதல் கடிதத்தை ஒரு சாட்சிய ஆவணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது. அவ்வாறு தாக்கல் செய்ய்யப்படும் ஆவணம் இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 27ன் கீழ் தடை செய்யப்பட்ட ஆவணம் ஆகும்.

*Panneerselvam C. Vs. Manoharan (T. Ravindran J) 2017 (1) CTC 18*

28 RIGHTS OF THE ACCUSED PERSONS

28 RIGHTS OF THE ACCUSED PERSONS
1. Protection against arbitrary or unlawful arrest (Article 22 of the Constitution and Section 41, 55 and 151 of Cr.P.C.)
2. Protection against arbitrary or unlawful searches (Sees. 93, 94, 97, 100(4) to (8). and 165 of Cr.P.C.)
3. Protection against “Double Jeopardy” (Article 20(2) of the Constitution and Section 300 of Cr.P.C.)
4. Protection against conviction or enhanced punishment under ex-past facto law (Article 20(1) of the Constitution)
5. Protection against arbitrary or illegal detention in custody (Article 22 of the Constitution and Sees. 56, 57 and 76 of Cr.P.C.)
6. Right to be informed of the grounds, immediately after the arrest (Article 71(1) of the Constitution and Section 50 of Cr.P.C. as also Sees. 55 and 75 of Cr.P.C.)
7. Right of the arrested person not to be subjected to unnecessary restraint (Section 49 of Cr.P.C.)
8. Right to consult a lawyer of his own choice (Article 22(1) of the Constitution and Section 303 of Cr.P.C.)
9. Right to be produced before a Magistrate within 24 hours of his arrest (Article 22(1) of the Constitution and Sees. 57 and 76 of Cr.P.C.)
10. Right to be released on bail, if arrested (Sees. 436, 437 and 439 of Cr.P.C., also Sees. 50, 20 and 167 of Cr.P.C.)
11. Right not to be a witness against himself (Article 20(3) of the Constitution)
12. Right to get copies of the documents and statements of witnesses on which the prosecution relies (Sees. 173(7), 207, 208 and 238 of Cr.P.C.)
13. Right to have the benefit of the presumption of innocence till guilt is proved beyond reasonable doubt (Sees. 101-104 of Evidence Act)
14. Right to insist that evidence be recorded in his presence except in some special circumstances (Section 273 of Cr.P.C., also Section 317 Cr.P.C.)
15. Right to have due notice of the charges (Sees. 218, 228(2), 240(2), etc. of Cr.P.C.)
16. Right to test the evidence by cross-examination (Section 138 of Evidence Act)
17. Right to have an opportunity for explaining the circumstances appearing in evidence against him at the trial (Section 313 of Cr.P.C.)
18. Right to have himself medically examined for evidence to disprove the commission of offence by him or for establishing commission of offence against his body by any other person (Section 54 of Cr.P.C.)
19. Right to produce defence witnesses (Section 243 of Cr.P.C.)
20. Right to be tried by an independent and impartial Judge (The Scheme of Separate of Judiciary as envisaged in Cr.P.C., also Sees. 479, 327, 191, etc. of Cr.P.C.)
21. Right to submit written arguments at conclusion of the trial in addition to oral submission (Section 314 of Cr.P.C.)
22. Right to be heard about the sentence upon conviction (Sees. 235(2) and 248(2) of Cr.P.C.)
23. Right to fair and speedy investigation and trial (Section 309 of Cr.P.C.)
24. Right to appeal in case of conviction (Sees. 351, 374, 379, 380 of Cr.P.C. and Arts. 132(1), 134(1) and 136(1) of the Constitution)
25. Right not to be imprisoned upon conviction in certain circumstances (Section 360 of Cr.P.C., and Section 6 of the Probation of Offenders Act)
26. Right to restrain police from intrusion on his privacy (Article 31 of the Constitution)
27. Right to release of a convicted person on bail pending appeal (Section 380 of Cr.P.C.)
28. Right to get copy of the judgment when sentenced to imprisonment (Sec.363 of Cr.P.C.)

IMPORTANT DECISIONS (25.08.2017)

Agreement to sell - Non execution of sale deed inspite of receiving entire sale amount - Vendor left their place of residence without leaving their addresses and shut off their mobiles - Allegations not of civil nature - Petition for quashing dismissed. (2017(3) Criminal Court Cases 417 (M.P.)

Divorce - Exemption to file divorce petition within one year of marriage - A case of exceptional hardship to husband - Exemption granted. (2017(3) Civil Court Cases 442 (Uttarakhand)
Eye witness fled from the spot - It completely over-rides the direct evidence rule. (2017(3) Criminal Court Cases 346 (S.C.) 
Marriage - Girl aged 14 years and boy aged above 18 years - Till the minor child attains the age of majority, parties are merely contracting parties and not husband and wife. (2017(3) Civil Court Cases 490 (Gujarat)
Partition - Partial partition - Not impermissible in all events. (2017(3) Civil Court Cases 425 (H.P.)

Will - Execution - Scribe of Will one of the attesting witness - There is no law that he is the best witness and he alone is competent to depose about execution of Will. (2017(3) Civil Court Cases 510 (Madras)
Back window

Acquisition of land - Interest - No period can be excluded on whatever account. (2016(1) Apex Court Judgments 664 (S.C.)
Charge framed for higher offence - Accused can be convicted for lesser offence provided such lesser offence is "cognate offence" - Ingredients of such lesser offence has to be common - If offence/s for which charge is framed, is one and other offence for which conviction is recorded is different in its ingredients or it is different in its nature then conviction would not sustain as no charge was framed. (2016(1) Criminal Court Cases 813 (Guj.)

Cross examination - One is required to put one's own version in cross-examination of opponent - Effect of non cross-examination is that statement of witness has not been disputed. (2016(2) Apex Court Judgments 372 (S.C.)

Dishonour of cheque - Jurisdiction - Place where a cheque is delivered for collection has jurisdiction. (2016(1) Criminal Court Cases 545 (S.C.)

Dishonour of cheque - Signed on face and back - Cheque intended to be used as a 'self cheque' and not issued by accused to any other person - Cheque was not delivered to the complainant by accused so as draw presumption u/s 139 of the Act. (2010(1) Civil Court Cases 344 (Karnataka)

Dying declaration - Found to be truthful and statement contained therein made voluntarily and recorded correctly - Not to be doubted for the reason that signature or thumb impression was not obtained on said document. (2016(1) Criminal Court Cases 840 (S.C.)

FIR - No delay in lodging FIR - Question of its manipulation does not arise. (2016(1) Apex Court Judgments 043 (S.C.)
Jurisdiction - Courts where consequence of an offence occur have territorial jurisdiction to try the case. (2014(1) Criminal Court Cases 413 (Rajasthan)

Mortgage - Redemption - Sale of interest of one mortgagor in favour of mortgagee - Co-mortgagor is entitled to seek redemption to the extent of his own share on making payment of proportionate part of amount. (2010(1) Civil Court Cases 744 (Bombay)

Narcotic Drugs - Seizure, sampling, safe keeping and disposal of seized Drugs, Narcotics and Psychotropic substances - Measures to prevent substitution and pilferage from stores - Directions issued. (2016(1) Apex Court Judgments 386 (S.C.)

Pledge - Loan agreement - Default in repayment - Right of precedence of loan amount or repayment of dues of workers and cane growers - Workmen in the absence of liquidation, stand only as unsecured creditors and their right cannot prevail over the rights of the pawnee of goods. (2016(2) Apex Court Judgments 408 (S.C.)
Preliminary issue - An issue for which evidence is required cannot be treated as a preliminary issue. (2014(2) Civil Court Cases 206 (Delhi)

Public servant - Sanction for prosecution - Principles governing - Analysed. (2016(2) Apex Court Judgments 436 (S.C.)

Application for leave to file suit u/s 92 of the Code - has to be annexed with the plaint as maintainability of application can be decided on the basis of averments in the plaint. (2017(1) APEX COURT J 666 (S.C.)

Contempt - High Court cannot initiate contempt proceedings for contempt of Supreme Court - High Court and Supreme Court are empowered to punish for its contempt and contempt of Courts subordinate to it. (2017(1) APEX COURT J 414 (S.C.)

Direction for registration of FIR and investigation u/s 156(3) Cr.P.C. - Complaint should not be improbable and must show sufficient ground and commission of offence on the basis of which registration of a case can be ordered. (2017(2) Criminal Court Cases 353 (S.C.)

Equity - A trespasser or encroacher has no equity in his favour. (2017(2) CIVIL COURT CASES 660 (H.P.)

Maxim - `Boundaries prevail over extent' - Not applicable when demarcation of boundaries of property is absent. (2017(2) Civil Court Cases 261 (Madras)

Production and discovery of documents - Both are distinct and independent - Party may not apply for both at a time and may ask independently for each one. 2017(1) Civil Court Cases 141 (Gujarat)

Self acquired property - Son and daughter-in-law have no legal right to live in that house and can live in the house only at the mercy of parents upto the time parents allow. (2017(1) Civil Court Cases 790 (Delhi)

Agreement to sell 164 bighas 7 biswas of land - Grant of permission to purchase 145 bighas of land -  Contract between parties does not stand frustrated. (2014(3) Civil Court Cases 344 (S.C.)

Consent decree - Counsel appearing for a party is fully competent to put his signature to the terms of any compromise. 2014(4) Civil Court Cases 415 (S.C.)

Dishonour of cheque - `Stop payment' - Make a person liable for offence u/s 138 of the Act. 2014(4) Civil Court Cases 583 (S.C.)

Divorce - Cruelty - Non payment of maintenance - Amounts to cruelty. (2014(2) Civil Court Cases 488 (P&H)

Execution - Possession delivered - Trespass into property thereafter - Petitioner cannot be driven again to Civil Court for recovery of possession of his property - Police protection granted with direction to restore possession and to ensure maintenance of law and order situation - If necessary respondents be evicted by force. 2014(4) Civil Court Cases 729 (Kerala)

Maintenance u/s 125 Cr.P.C.  - Illegitimate child - Husband's plea that he had no access to wife when child was begotten stands proved by DNA test report - Husband not liable to pay maintenance to child. (2014(2) Civil Court Cases 220 (S.C.)

Quashing of FIR at the instance of third parties is unknown to law.  (2010(1) Criminal Court Cases 553 (S.C.)

Rape - Prosecutrix five months pregnant - Accused cannot be convicted on the sole basis of DNA report. (2010(1) Criminal Court Cases 129 (Gujarat) (DB)

S.156(3) Cr.P.C. - Complainant asked to lead his evidence before police can be directed to register FIR - Order passed by Magistrate, upheld. (2010(1) Criminal Court Cases 058 (Delhi)

Service - Misconduct - `Doctrine of Proportionality' - This doctrine has to be followed by the employer/employers at the time of taking disciplinary action against their employees/workmen to satisfy the principles of natural justice and safeguard the rights of employees/workmen. (2014(3) APEX COURT J 652 (S.C.)

Sniffer dog - Said dog traced accused and he was formally arrested thereafter - Accused has not been convicted on ground that sniffer dog tracked down house of accused and barked at him - Contention that identification of accused by sniffer dog cannot be relied upon as it is not admissible in order to prove guilt, rejected. 2014(2) APEX COURT J 205 (S.C.)

Stamp purchased in the name of one `H' by mentioning wrong name of his father - Such document cannot be impounded or the document cannot be declared an instrument having no stamp duty or insufficient stamp duty only for the reason that description of purchaser in the stamp duty is not correctly stated or the purchaser of stamp duty is not the one of the party to the instrument. (2014(2) Civil Court Cases 677 (Allahabad)

Temporary injunction - Cannot be granted when suit for permanent injunction is not maintainable. (2014(3) Civil Court Cases 100 (Rajasthan)

Usufructuary  mortgage - Right to recover possession - Commences when mortgage money is paid out of rents and profits or partly out of rents and profits and partly by payment or deposit by mortgagor - Until then, limitation does not start for purposes of Article 61 of the Schedule to the Limitation Act. (2014(3) APEX COURT J 303 (S.C.)

Written statement - Amendment - A person who denies title of plaintiff does not lose a right to set up a plea of irrevocable licence. (2014(2) Civil Court Cases 377 (P&H)