Wednesday, December 20, 2017

நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய முடியாது

 ஓர் எதிரிக்கு வழங்கப்பட்டுள்ள முன் ஜாமீனை ரத்து செய்வதற்கு முன்பாக, அந்த எதிரிக்கு அறிவிப்பு அனுப்பி, அவர் தரப்பு வாதத்தையும் நீதிமன்றம் கட்டாயம் கேட்க வேண்டும்.

 நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமீனை தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது. ஜாமீன் வழங்குவதற்கும், அதனை ரத்து செய்வதற்கும் வேறுபாடு உள்ளது. அவை இரண்டும் வெவ்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஜாமீன் நிபந்தனைகளில் ஒன்றாக எதிரி காவல் நிலையத்தில் அல்லது நீதிமன்றத்தில் முன்னிலையாகி கையெழுத்து போட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தாலும், எதிரி அவ்வாறு செய்யவில்லை என்ற காரணத்திற்காக அவரது ஜாமீனை உடனடியாக ரத்து செய்யக் கூடாது. எதிரி காவல் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ ஆஜராகி கையெழுத்து போடாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

எதிரியின் குடும்பத்தில் ஒரு துயர சம்பவம் நடந்திருக்கலாம் அல்லது நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது ஏழ்மை நிலையின் காரணமாகக் காவல் நிலையத்திற்கு செல்ல அவரிடம் பணம் இல்லாமல் இருக்கலாம் அல்லது புகார்தாரர் அவரைக் கையெழுத்து போடவிடாத படி தடுக்கலாம் அல்லது காவல் துறையினரே எதிரி கையெழுத்து போட விடாமல் தடுக்கலாம். எனவே ஜாமீன் மனுவை ரத்து செய்வதற்கு முன்பாக எதிரிக்கு அதுகுறித்து ஒரு அறிவிப்பை அனுப்பி அவர் தரப்பு நியாயத்தைக் கேட்க வேண்டும்

ஜாமீன் உத்தரவை ரத்து செய்வது அபாயமான ஒன்றாகும் ஒரு நபருக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை திரும்பப் பெறுகிற ஒரு விஷயமாகும். இயற்கை நீதிமுறைகள் மிகவும் முக்கியமானதாகும். இயற்கை நீதிமுறைகள் குறித்து சட்டத்தில் கூறப்படவில்லை என்றாலும் ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் இருக்க வேண்டிய ஒன்றாகும். இதற்கு நீதிபதிகளும் விதிவிலக்கானவர்கள் அல்ல. உயர்ந்த நுட்பங்களைக் கொண்ட ஒரு கம்ப்யூட்டர் கூட ஒரு நீதிபதிக்கு மாற்றாகச் செயல்பட முடியாது.
 ஏனென்றால் கம்ப்யூட்டருக்கு எந்தவிதமான உணர்ச்சிகளோ, உணர்வுகளோ கிடையாது. எனவே ஜாமீன் வழங்கிப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யும்போது நீதிபதிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது

CRL. RC. NO – 253 & 254/2016, DT – 13.06.2016, Uma Maheshwari (253/2016)Vs Inspector of police, District Crime Branch, Madurai & R. Hariharan (254/2016) Vs Inspector of police, District Crime Branch, Madurai (2016-3-MWN-CRL-121)

போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒருவரை வர சொல்லி விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதை ஏற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 160 படி, ஸ்டேஷன் விசாரணைக்கு அழைக்க சம்மன் அனுப்பி அதில் அவர் ஆஜராக வேண்டிய தேதி, நேரம் ஆகியவை கண்டிப்பாக அதில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.   ஸ்டேஷன் டைரியில் விசாரணை மினிட்ஸ் பற்றி, விசாரணை அதிகாரி எழுத வேண்டும் என்றும்,துன்புறுத்த கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.       மேலும், குற்றவியல் நடுவர்களும் போலீஸ் விசாரணையில் தலையிட கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
           
 11.12.2017ல் நீதியரசர் ரமேஷ் Crl.O.P.No.27174-2017ல் உத்தரவு வழங்கியுள்ளார். இந்த உத்தரவு இணையதளத்தில் உள்ளது. பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
                                      
 Bench said, it would not turn a blind eye to instances of harassment by the police under the guise of investigation.

Guidelines have been issued by the Madras HC has issued on how people should be summoned for interrogation in the criminal cases; in a bid to check harassment by the Police.

According to guidelines, the investigation officer is mandated to issue written summons under Criminal Procedure of Code S. 160 specifying the date & time when calling any person named in the complaint or witness to appear for inquiry.

“This Court, exercising its power under S. 482 CrPC normally wouldn’t interfere with the investigation conducted by a police officer,” said Justice M.S. Ramesh in the order.

“Nevertheless, it’d also not turn a blind eye to instances of harassment by Police, under the guise of investigation brought to its notice.”

The plea was filed by A. N. Lalman Lal & 4 others alleging police harassment under the guise of inquiry, it was heard by the High Court on Thursday.

While the Madras High Court acknowledged that the term ‘harassment’ itself has a ‘very wide meaning’, in order to circumvent the situations where it’s definition can be misconstrued, it issued guidelines.

Justice M.S. Ramesh said that officer is expected to record the minutes of inquiry in station diary & officer shouldn’t harass persons called for inquiry.

In his order, he also emphasized that while the magistrates do play a crucial role in the proceedings, it didn’t give them a licence to interfere in the investigation.

“Though Cr.P.C. empowers the Magistrate to be a guardian in all the stages of police investigation, there’s no power envisaging him to interfere with the actual investigation or the mode of investigation,” the Judge said.                                 

Tuesday, December 19, 2017

10 Constitutional Landmark Judgement

Landmark judicial decision changed the constitutional as well as everyday life. Their impact still replicate.

1)FUNDAMENTAL RIGHT CASE

                                          Keshvanand Bharti v. State of Kerala
                                          AIR 1973 SC 1461: (1973) 4 SCC 255
                                          Date of decision: 24-04-1973

In this case, the constitutional validity 24thAmendment Act 1971 was challenged. 24thAmendment was enacted by the Parliament which amended Article 368 that Parliament has constituent power to amend by way of addition, variation or repeal any provision under the article of the constitution in which Article 13 would not be applicable to such amendment.

The validity of the 24th Amendment on which the validity of the 25th, 26th and 29th Amendment would depend, and this was the principle issue.

This case was decided by 13 judges bench including S.M Sikri, C.J, and A.N Grover, A.N ray, H.R. Khanna, D.G Palekar, J.M Shelat, K.S Hegde, S.N. Dwivdei, M.H. Beg, F. Jagamohan Reddy and Y.V Chandrachud that Parliament cannot destroy the basic features of the Constitution. The majority opinion of the judges was that no part of the Constitution (Fundamental Rights), was beyond the Amending power of the Constitution, basic structure of the Constitution cannot be infringed.

2)ELECTION CASE

                                             Indira Gandhi v. Raj Narain
                                             AIR 1975 SC 22299: (1975) SCC 1:
                                             Date of Decision: 07-11-1975

In the case of Indira Gandhi, an Appeal was filed by an appellant against the decision of the Allahabad High Court in which Mrs. Gandhi’s election held invalidating on the corrupt practices ground.

The principle issue was the question involved of the validity of clause 4 of the Constitution 39thAmendment Act, 1975.

5 Judges bench including A.N. Ray, C.J and H.R. Khanna, K.K Mathew, M.H Beg and Y.V Chandrachud held that clause 4 of the Constitution 39th Amendment Act,1975 is void and unconstitutional because exclusion of the Judicial review in the election disputes can affect the basic structure of the Constitution. Court struck down the clause as it was violating the free and fair elections.

3)ADMISSIONS ON CASTE BASIS FOR PROFESSIONAL COURSE

                           State of Madras v. Champakam Dorairajan
                           AIR 1951 SC 226 (1951) 2 SCR 525
                           Date of Decision: 09-04-1951  

Champakam Dorairajan made an application to the High Court at Madras under Article 226 of the Indian Constitution for protection of the fundamental rights under Article 15(1) and Article 29(2) and requested to issue the writ of mandamus or any other suitable writ. State of Madras and officers observed that admissions into the Madras Medical Colleges were sought that it involves the violation of her fundamental rights when she came to know that her admission would not be possible as she belongs to the Brahmin community.

It was argued that violation of Article 15(1) and 29(2) is violation of her fundamental rights of the Indian Constitution.

This case was held by Harilal Kania, C.J and S.Fazal Ali, Patanjali Sastri, M.C Mahajan, B.K Mukherjea, S.R das and Vivin Boes  that refused admissions only on the grounds of religion, race, caste, language or any of them then it is a violation of the fundamental rights. This right is not to be denied on such grounds to any citizens and the provision of Article 29(2) in part 3 of the Constitution is void under Article 13.

4)BASIC STRUCTURE OF THE CONSTITUTION CANNOT BE AMEND BY PARLIAMENT

                                       Golakhnath v. State of Punjab
                                      AIR 1967 SC 1642: (1967) 2 SCR 762
                                      Date of Decision: 17-02-1967

In this case, issues were whether power to amend the Constitution resides under Article 368?   whether the F.R in part 3 can be amended or not?

This was held by K. Subha Rao, C.J. and C.A. Vaidialingam, G.K. Mitler, J.C Shah, J.M Shelat, K.N. Wanchoo, M.Hidayatullah, S.M. Sikri, V.Bhargava, R.S. Bachawat and V.Ramaswami that fundamental rights cannot be infringed or taken away by the amending procedure in Article 368 of Indian Constitution. Changes to the constitution is law within the meaning of Art 13(2) of the Constitution and therefore it is subject to the part 3 of Constitution. Amendment under Art 368 or any other provision of the Constitution are only made by the; Parliament.

5) TAKEOVER BY A MILL BY THE CENTRAL GOVERNMENT

                                                  Minerva mills ltd. V. Union of India
                                                 AIR 1980 SC 1789: (1980) 3 SCC 625
                                                       Date of Decision: 31-07-1980  

The Constitutional validity of 39th and 42ndAmendment was challenged by the petitioner. He also challenged sec 4 and sec 55 of 42nd Amendment Act of 1976 and the validity of Article 368(4) and Art 368(5) of the Constitution.

It was held by the judges: Y.V Chandrachud, C.J. and A.C Gupta, N.L Untwalia, P.N. Bhagwati, and P.S Kailasam, that sec 55 of the Constitution 42ndAmendment Act is beyond the amending power of the parliament, is void if it destroys or damage the basic structure of the Indian Constitution. Article 31(C) held unconstitutional as it destroys the basic and essential features of the Constitution. Article 368(4) and Art 368(5) are also held unconstitutional in that it removes all limitations on the amending power of the parliament.

Sec 55 and sec 4 of the Constitution 42nd amendment Act are held as void and unconstitutional. Art 31C and Art 368(4) and (5) are also held as unconstitutional and void.

6) ILLEGAL DETENTION FOR 14 YRS. AFTER ACQUITTAL BY THE COURT

                                             Rahul Sah v. State of Bihar
                                       AIR 1983 SC 1086: 1983 Cri Lj 1614
                                            Date of Decision: 01-08-1983

The principle issue of this case was whether S.C under Art 32, can pass an order of compensation for infringement of fundamental right by officers or not?

Art 32 of the Constitution confers the power on the S.C to issue directions or orders or writs, whichever may be appropriate for the enforcement of any rights conferred by part 3. It was held by Y.V Chandrachud, C.J. and Ranganath Mishra and Amarendra Nath Sen that Supreme Court can pass an order of compensation for the infringement of fundamental rights under art 32 of the Constitution if such an order is the nature of compensation consequential upon the deprivation of a fundamental rights.

7) SEXUAL HARASSMENT OF WOMEN AT WORKPLACE

                                                   Vishakha v. State of Rajasthan
                                                    AIR 1997 SC 3011: 1997 (5)
                                                    Date of Decision: 13-08-1997

NGOs and other social activists filed writ petition in the Supreme Court for the enforcement of the fundamental rights of working women under Art 14,19 and 21 of the Constitution of India. The issue was Sexual Harassment of working women at workplace.

Judgement of this case was given by J.S. Verma and Mrs. Sujata V. Manohar and B.N. Kripal, it was held that it is violation of the fundamental rights of ‘Right to Life and Liberty’ and ‘Gender Equality’ if there is sexual harassment of women at workplace. It is the violation of Art 14,15,19(1)(g) and 21 of the Constitution.

8)  CONSTITUTIONAL VALIDITY OF DEATH SENTENCE

                                             Bachan Singh vs. State of Punjab
                                             AIR 1980 SC 898: 1982 (1)
                                             Date of Decision: 09-05-1980

In this case Bachan Singh was appellant who was tried and convicted to death sentence under sec-302 of Indian Penal Code, by Session Judge. His death sentence confirmed by High Court and dismissed his appeal, then he goes through the special leave appeal to the Supreme Court.

The principle issue of this case was to check the constitution validity of death sentence for murder provided in section 302 IPC.

It was held by Y.V Chandrachud, C.J. and A.C. Gupta, N.L. Untwalia, P.N. Bhagwati and R.S Sarkaria, that sec 302 of the Indian Penal Code yet provides for the death sentence as Section 354(3) of Code of Criminal Procedure, 1973 is constitutionally valid.

Challenge to the constitutionality of the questioned provisions mentioned in Section 302 of Indian Penal Code and Sec 354(3) of the Criminal Procedure Code, 1973 is excluded.

9) RIGHT TO PRIVACY

                               Justice K.S Puttaswami and Anr. v. Union of India and Ors.
                                         WRIT PETITION (CIVIL) NO 494 OF 2012        
                                                     Date of Decision: 24-08-2017


In this case, nine judges bench assembled to determine whether privacy is a constitutionally protected value.

 Justice D.Y Chandrachud overruled the judgement of Justice Y.V Chandrachud and held that Right to Privacy is Fundamental right under Article 21 of the Constitution. The decision in M.P Sharma is over ruled, which says that right to privacy is not protected by the Constitution. The decision in Kharak Singhstands over ruled to the extent that right to life and personal liberty is not protected by the Constitution.

       This is a landmark case by the Supreme Court of India that right to privacy is protected under Art 21 of part 3 of the Constitution, but not an absolute right and there are some restrictions in matters of national security and mutual interest of the citizens and the state.

10) TRIPLE TALAQ UNCONSTITUTIONAL

                                          Shayara Bano vs union of India and Ors
                                               Writ petition (C) No 118 of 2016    
                                               Date of Decision: 22 August 2017

Issue of this case was that certain practices of Muslim Personal laws such as Triple Talaq, Polygamy and Nikah halala has been challenged. The All India Muslim Personal Law Board (AIMPLB) has warned secular authorities against interfering with religious laws.

A 5 judges Constitution bench including chief Justice J.S Khekhar, Justice Kurian Joseph, Justice Rohinton Nariman, Justice Uday Lalit and Justice Abdul Nazeer deal with the Constitutional validity of the Practice of ‘Instant triple talaq’ or ‘talaq-e-biddat’ held that triple talaq cannot be justified or given legal validity. The practice of triple talaq is discriminatory in many ways.

Supreme Court says that only those features of a religion are constitutionally protected which are “integral” or “essential” parts of it. There is no evidence to show that talaq e biddat constitutes an integral part of the Islamic faith and it does not deserve constitutional protection.

Monday, December 18, 2017

நில அளவை – நிலவரித்திட்டம் – தீர்வை விதிப்பு:

நில அளவை – நிலவரித்திட்டம் – தீர்வை விதிப்பு:
================================================
நில அளவை:

ஒரு நில அளவை புலத்தின் ஒரு பாகமோ அல்லது பாகங்களோ அதிக பரப்புடையதாக இருந்தால் நில ஒப்படை, நில எடுப்பு, நில மாற்றம் மற்றும் இதர காரணங்களுக்கு நிலம் தேவைப்படும் போது அந்த நிலத்தை தனியே பதிய வேண்டியுள்ளது.

மேற்கண்ட நேர்வில், ஒரு புலம் 20 ஹெக்டர் அல்லது அதற்கு மேற்பட்டோ இருந்தாலும் சம்பந்தப்பட்ட நில அளவை புலத்தினை(Sub-division) உட்பிரிவு செய்வதற்குப் பதிலாக அவைகளுக்கு தனி எல்லைகள் குறிப்பிட்டு வரைபடம் தயாரித்து அவைகளை புதிய அளவை survey எண்ணாகப் பதிய வேண்டும்.
புதிதாக உருவாக்கப்பட உள்ள புலங்களுக்கு அந்தக் கிராமத்தில் கடைசியாக பதிவாகியுள்ள புல எண்ணில் இருந்து தொடர்ச்சியாக எண்கள் கொடுக்க வேண்டும்.

பிரிவினை செய்த நில அளவை புலத்தின் மீதிப் பாகத்திற்கு அதன் அசல் எண்ணையே இடவேண்டும்.
கீழ்க்கண்டவை தமிழ்நாடு 1923 வருடம் 8-ஆவது சட்டத்தின்படி நடவடிக்கைக்குட்பட்டவையாகும்.

தற்போதுள்ள நில அளவை புலங்களிருந்து ஏற்படுத்தப்படும் புதிய நில அளவை புலங்கள் சம்மந்தமாகவும்
தற்போதுள்ள நில அளவை புலங்களின் எல்லைகளில் செய்யப்படும் மாறுதல்கள் சம்மந்தமாகவும் புறம்போக்கு எல்லைகளைப் பாதிக்கும் உட்பிரிவுகள் சம்பந்தமாகவும் தீர்வை விதிக்கப்பட்ட வகையிலிருந்து புறம்போக்காக மாற்றுவதனால் ஏற்படும் எல்லை வரையறுப்புகள் சம்பந்தமாகவும்(நில எடுப்பு)

1. கிராம வரைப்படம்:

ஒரு வருவாய்க் கிராமத்தின் அமைப்பைக் குறிப்பிடும் வரைபடமாகும்.
இதில் சர்வே எண்கள், அந்த புலன்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகள், மயானம், மசூதி பாதை,ரோடு, கல்வெட்டுகள், வாய்க்கால், ஏரி, ஆறுகள், இரயில்வே பாதைகள், பெரிய மின்சார கம்பி தடங்கள் மற்றும் புராதனச் சின்னங்கள் ஆகிய சர்வே அடையாள விவரங்கள்(Survey Details) அச்சிடப்பட்டிருக்கும்.
இந்த வரைபடத்தை வைத்துக் கொண்டு ஒரு நில அளவு புலம் எங்கே அமைந்துள்ளது என்பதனை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

2. ‘டி’ ஸ்கெட்ச்

ஒரு கிராம வரைபடத்தை பல பகுதிகளாக பிரித்து பல புலன்கள் அடங்கிய, ஒரு பகுதிக்கு ஒரு வரைபடமாக தயாரித்து ஒரு கிராமத்திற்கு பல சுவடுகளில் புத்தக வடிவில் பராமரிக்கப்படுகிறது.
இதில் நில அளவைக் கற்கள் அமைந்துள்ள இடங்கள், புறம்போக்கு நிலங்கள் அமைந்துள்ள இடங்களும் குறிக்கப்பட்டிருக்கும்.
இந்த வரைப்படத்தினைப் பயன்படுத்தி பயிராய்வின் போது சர்வே கற்கள் உள்ள இடம் மற்றும் புறம்போக்கு நிலங்கள் உள்ள இடங்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.
3. புல வரைபடம்:
---------------------------
ஒரு வருவாய் கிராமமானது பல நில அளவை புலன்கள் கொண்டதாகும்.
ஒவ்வொரு புலத்திற்கும் ஒவ்வொரு வரைபடம் தயார் செய்யப்பட்டு கிராமத்திற்கு மொத்தமாக புத்தகவடிவில் பராமரிக்கப்படுகிறது. ஒவ்வொரு புலப்படத்திலும் அந்த புலத்தில் உள்ள உட்பிரிவுகள், நில அளவுகள் மற்றும் ‘லேடர்’ அட்டவணை ஆகிய விவரங்கள் வரையப்பட்டிருக்கும்.
நில எடுப்பு, நில மாற்றம், உட்பிரிவுகள் முதலிய நிலையான மாற்றங்கள் நேரிடும் போது அதற்குண்டான ஆணைக்கு ஏற்ப, நில அளவர் புலப்படத்தில் மாறுதல் செய்வார்(Plotted in the sketches). கிராம நிர்வாக அலுவலர் எந்த மாறுதல்களையும் இதில் செய்யக் கூடாது.
புலத்தணிக்கை செய்யும்போது இந்த புல வரைப்படத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட புலம் அல்லது உட்பிரிவு எங்கே அமைந்துள்ளது என்பதனை தெரிந்துக் கொள்ளலாம்.
4.சர்வே கற்கள் பதிவேடு:
---------------------------------------
இது இரண்டு வகைப்படும்.

‘A’ கற்கள் பதிவேடு
‘B’ கற்கள் பதிவேடு

ஒவ்வொரு மாதத்திலும் கிராம நிர்வாக அலுவலர் புலன் ஆய்வு செய்யும் போது ‘D’ ஸ்கெட்சை வைத்துக் கொண்டு, அதில் குறிப்பிட்டுள்ள நில அளவைக் கற்கள் உள்ளனவா அல்லது இல்லையா என்று தெரிந்துக் கொண்டு மாதந்தோறும் வட்டத் தலைமை நில அளவருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
மேலும் காணாமல் போன கற்களை புதுப்பிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், காணாமல் போன கற்களை புதுப்பிப்பதற்கு ஆகும் செலவினை கணக்கிட்டு நிலவரி பாக்கிபோல் வசூல் செய்ய வேண்டும்.
நிலங்களை பூமியில் உள்ளவாறு பிரிவு மற்றும் உட்பிரிவு செய்து கிராம புலப்படம் தயார் செய்து கிராம நிர்வாக அலுவலர்கள் அவற்றைப் பாதுகாத்து வருகின்றனர்.

டிப்போ பதிவேடு:
------------------------------------------------------------------------------------------------------------------------------------
சில வருவாய் கிராமங்களில் நில அளவை பராமரிப்பு பணிகளுக்காக ‘A’ & ‘B’ கற்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதற்கான இருப்புப் பதிவேடு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சர்வே டிப்போவிலிருந்து கற்களை பராமரிப்பு வேலைகளுக்கு எடுக்கும் போது இந்தப் பதிவேட்டில் பதிவு செய்து சம்பந்தப் பட்டவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
கணக்கில் ஏற்படும் குறைபாடுகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் பொறுப்பாவார்.
19. Art 51A(G)வில் VAO-வின் பங்கு:
------------------------------------------------------
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகளின் கூறு 51A(G)–இல் கூறப்பட்டுள்ளது. இயற்கைச் சூழலை மேம்படுத்த காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வனவிலங்குகள் மற்றும் இயற்கை ஆதாரங்களைப் பாதுகாத்தல்.
நிர்வாகத்துறைக்கு சொந்தமான காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வனவிலங்குகள், இயற்கை ஆதாரங்களைப் பாதுகாப்பதில் கிராமநிர்வாக அலுவலர் முக்கியப் பங்கு வகிக்கிறார். காடுகள்
சில கிராமங்களில் நிர்வாகத்துறைக்கு சொந்தமான சமூகக் காடுகள், அரசுக்கு சொந்தமான காடுகள் இருக்கும் அவற்றைப் பாதுகாக்க கிராம நிர்வாக அலுவலர் கடமைப்பட்டுள்ளார்.
காடுகளைப் பாதுகாப்பதில் VAO-வின் பங்கு
காடுகளில் உள்ள முக்கியப் பரப்பளவை வரைபடம் மூலமும், அவற்றில் உள்ள Areaவை ஆக்கிரமிப்பு செய்யும் பகுதிகளை உடனே வட்டாட்சியர் துணையைக் கொண்டு அகற்ற வேண்டும்.
மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் எப்படி பட்டது என்பதனை தனி ஆய்வு செய்து புதிதாக வேறு நபர்கள் காட்டுப் பகுதிகளில் குடியேற அனுமதிக்கக் கூடாது.
அரியவகை மரங்கள் மற்றும் அரியவகை மூலிகைகளை போன்றவையை பாதுகாக்கவும் அவற்றை வெட்டுவோருக்கு பலமடங்கு அபராதம் விதித்து தொகையை வசூல் செய்ய வேண்டும்.

ஏரிகளைப் பாதுகாப்பதில் VAOவின் பங்கு:
ஏரிகள், கண்மாய்கள் போன்றவை கிராமத்தின் முக்கிய நீர் ஆதாரம் ஆகும்.
இவற்றின் மொத்த பரப்பளவு கூடுதலாக இருக்கும் அவற்றை புலப்படம் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏரி உள்ள மொத்த பரப்பளவில் ஏரிக்கரை ஓரத்தில் குடிசை அமைத்து ஆக்கிரமிப்பு செய்யும் நபர்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
”ஏரி”, “கண்மாய்”, “குளம்” போன்ற நீர்நிலை பகுதிகளில் உள்ள மணல் பகுதிகளையும், செம்மண் போன்ற கனிம வளங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கனிமவளம் திருட்டு நடக்கும் போது அவற்றை கிராம உதவியாளர் மூலமும், மற்றவர் துணைகொண்டும் தடுக்க வேண்டும். உடனடியாக வட்டாட்சியருக்குத் தகவல் அளிக்க வேண்டும்.

ஆறுகள் மற்றும் இதர ஆதாரங்களைப் பாதுகாப்பது
ஆக்ரமணம் ஏற்படாதபடி பாதுகாப்பது.
மணல் திருட்டு நடைபெறா வண்ணம் தடுப்பது
ஆறுகளில் துர்வாரும் பணி நடைபெறும் போது கவனிப்பது
பொதுப்பணித் துறையின் உதவியுடன் ஆறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவை.
வன விலங்குகளைப் பாதுகாப்பது:
காடுகள் அதிகம் உள்ள பகுதிகளில் வனவிலங்குகள் கிராமத்தில் புகுந்து நாசம் ஏற்படாதபடி வனத்துறைக்கு தகவல் அளிப்பது
வனப்பகுதியில் வாழும் மான், யானை, போன்ற விலங்குகளை வேட்டையாடாமல் தடுக்க வனத்துறை அலுவலருக்கு தகவல் அளிப்பது
கிராமத்தில் ‘வனப் பாதுகாப்பு’ பற்றியும் அரிய விலங்கினம் பாதுகாப்பது பற்றியும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்துவது.
குளக்கரையில் மரங்கள் வைத்து சமூகக் காடுகள் உருவாக்குவது, இருக்கும் காடுகளின் பரப்பளவை மேம்படுத்துவது, வனத்துறையின் மரங்களை வெட்டுதல் மற்றும் அரிய வகை விலங்குகளை வேட்டையாடாமல் பாதுகாப்பது முக்கியக் கடமையாகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51-A-யின் படியாக அரசுக்குச் சொந்தமான ஏரி, ஆறு, கால்வாய், அனைத்தையும் பாதுகாப்பது VAOவின் முக்கியக் கடமையாகும்.
நிலவரித் திட்டம்:
----------------------------
நிலவரித் திட்ட அலுவலர், நிலவரித் திட்டம் செயலாக்கும் பகுதியைச் சுற்றிப்பார்த்து அப்பகுதியின் விவரங்களை சேகரித்து விரிவான சுற்றாய்வு அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைப்பார்.
விவரங்கள் : மக்கள்தொகை, மக்கள் வாழ்க்கைத் தரம், வசதி, வருவாய், மழையளவு, மண் வகைகள், பாசன ஆதாரங்கள், பயிர் வகைகள், போக்குவரத்து வசதி, மார்க்கெட் நிலவரம்.
இந்த சுற்றாய்வு அறிக்கையினை அரசு அங்கீகாரம் செய்த பின்பு, அந்தப் பகுதிக்குண்டான நிலவரித் திட்ட அறிக்கை(Notification) தயார் செய்யப்படுகிறது.
தீர்வை விதிப்பு
நிலத்தின் பயன்பாடுக்கு ஏற்ப நிலவர் திட்டத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது அவை:
நன்செய்
புன்செய்
மானாவாரி
நன்செய் : நன் + செய் என பிரித்து நன் + நீர் என்றும் செய் – நிலம் எனவும் பொருள் கொண்டு – நீர்ப்பாய்ச்சலான நிலம் என்று அமைந்துள்ளது.
நன்செய் வகைப்பாடு
ஒரு போக நன்செய்(Single crop wet)
இரு போக நன்செய்(Double crop wet)
இணக்கம் செய்யப்பட்ட இரு போக நன்செய்(Compounded double Crop wet land) என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அரசாங்க நீர்ப்பாசன ஆதாரங்கள் மூலம் பாசன வசதி பெறக்கூடிய நிலங்கள் நன்செய் நிலங்கள் எனப்படும்.
புன்செய் நிலங்கள் தனியார் கிணறுகளில் நீர்ப்பாசன வசதி பெற்றவையாகும்.
நன்செய் நிலங்கள்
நீர் ஆதாரம் / பாசன வசதியைக் கொண்டு வகைப்படுத்தப்படுகிறது.
நீர்ப்பாசன ஆதாரங்கள் 5 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
1-ஆம் வகை : காவிரி ஆறு போன்று ஆண்டு முழுவதும் நீர் கிடைக்கக் கூடியவை.
2-ஆம் வகை : 8 மாதம் முதல் 10 மாதங்கள் வரை நீர் கிடைக்கக் கூடியவை.
3-ஆம் வகை : 5 மாதம் முதல் 8 மாதங்கள் வரை நீர் கிடைக்கக் கூடியவை.
4-ஆம் வகை : மூன்று மாதம் முதல் 5 மதங்கள் வரை நீர் கிடைக்கக்கூடியவை.
5-ஆம் வகை : மூன்று மாதத்திற்குக் குறைவாக நீர் கிடைக்கக் கூடியவை.
1. மானாவாரி:
நிலத்தில் தேக்கப்பட்ட மழைநீரைக் கொண்டு அல்லது சதுப்பு நிலங்கள், சிறிய குட்டை போன்ற நீர்நிலைகளைக் கொண்டு நன்செய் பயிர்களை விளைவிக்கக் கூடிய நிலங்கள் மானாவாரி எனப்படும்.
மானாவாரி நிலங்கள் புன்செய் நிலங்களை விட சிறிது மேம்பட்டிருக்கும்.
மானாவாரி நிலங்கள் ஏரி உள் பகுதியில் அமைந்துள்ளதால் இந்நிலங்கள் ஈரத்தன்மை கொண்டதாக இருப்பதால் நன்செய் பயிர்கள் சாகுபடி செய்ய ஏதுவாக அமையும்.
2. தீர்வை ஏற்பட்ட தரிசு:
சில நிலங்கள் தீர்வை விதிக்கப்பட்டிருந்தும் நிலவரி திட்டத்தின் போது உரிமைக் கொண்டாடாத நிலையில் அதனை தீர்வை ஏற்பட்ட தரிசுகளாக வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலங்கள் பல்வேறு மாவட்டங்களில் “அனாதீனம்” என்றும் வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
3. புறம்போக்கு நிலங்கள்:
---------------------------------------
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் மற்றும் சமுதாய பயனபாட்டிற்காக உள்ள நிலங்கள் புறம்போக்கு நிலங்களாக வகைப்பாடு செய்யப்பட்டுள்ளன.
புறம்போக்கு நிலங்களில் கல்லாங்குத்து மற்றும் மேடு என்ற நிலங்களை தீர்வை ஏற்படாத தரிசு நிலங்களாகவும் மற்ற அரசு சொந்த நிலங்களை புறம்போக்கு நிலமாகவும் வகைப்பாடு செய்வர்.
நிலங்களுக்கு எவ்வாறு தீர்வை நிர்ணயிக்கப்படுகிறது
நிலவரி திட்டத்தின் போது மண்ணின் கூட்டு சேர்க்கை அமைப்பை அனுசரித்தும்
நிலங்களின் மண் வகைப்பாடுகளின் தன்மையை அனுசரித்தும் நிலங்களைப் பாகுபாடு செய்கின்றனர்.
மண்ணின் தரத்தை, முக்கிய விளைப்பொருளின் உண்மையான விளைச்சல் ஆகியவற்றை பலவிதமாக பரிசோதனை செய்து 20 ஆண்டுகளின் சராசரி தானிய விலையை மாவட்ட முழுவதற்கும் அடிப்படையாகக் கொண்டு தானியத்தை விற்பனை செய்வதற்கு ஆகும் போக்குவரத்து மற்றும் விவசாய செலவுகளை கழித்துக் கொண்டு எஞ்சியுள்ள தானிய மதிப்பு பணமாக மாற்றப்பட்டு(Conversion) மதிப்பிடப்படுகின்றன.

இந்த மதிப்பின் பாதித் தொகை நிலத்திற்காக அரசுக்கு செலுத்த வேண்டிய உச்ச நிலத் தீர்வையாக கருதப்படுகிறது. இதன் பின்னர் ஒத்த தானிய மதிப்புள்ள மண்ணின் தரம் எத்தன்மையாக இருப்பினும் அவை தரங்களின் வரிசை முறையில் ஒன்று சேர்க்கப்படுகின்றன.

நன்செய் தரத்தீர்வை நிர்ணயம்:

இவை நிலம் இருக்கும் இடத்திலிருந்து நீர்ப் பாசன ஆதாரங்களின் தன்மையை அனுசரித்து நன்செய் தரத்தீர்வை நிர்ணயம் செய்யப்படுகிறது.

புன்செய் தரத்தீர்வை நிர்ணயம்:

புன்செய் நிலமாக இருந்தால் அவை சாலைகளுக்கும், சந்தைகளுக்கும் அண்மையில் உள்ளதை அனுசரித்தும் தரத்தீர்வை நிர்ணயிக்கப்படுகிறது.

தரத்தீர்வை அடுத்த நிலவரித் திட்டம் அமலாக்கும் வரை மாற்றப்படுவதில்லை.
நிலவரி - அரசு பாக்கிகள் - நிலவரி வசூல் சட்டத்தின் கீழ் வசூல் செய்யும் நடைமுறை

நிலவரி:
நிலவரியில் தரத் தீர்வை, பசலி ஜாஸ்தி, தீர்வை ஜாஸ்தி அபராதம், புறம்போக்கு நிலவரி அபராதம் உள்ளூர் மேல்வரி(LC) உள்ளூர் மிகு மேல்வரி(LCS) ஆகியவை அடங்கும். நிலையான வஜாக்கள் மற்றும் பருவக்கால வஜாக்கள் ஆகியவை கணக்கிட்டு அவை தரத் தீர்வையிலிருந்து கழிக்கப்படுகின்றன.
இவ்வாறாக மொத்தத் தொகை கணக்கிடப்பட்டு புன்செய், நன்செய் தீர்வை கழிவுகள் கழிக்கப்படுகின்றன. இவ்வாறாக கழிக்கப்பட்ட நிகரத் தொகைக்கு நிலவரி என்பார்கள். அத்துடன் நன்செய் நிலங்களுக்கு விதிக்கப்படும் கூடுதல் நன்செய் தீர்வை, கூடுதல் தண்ணீர் தீர்வை ஆகியவையும் சேர்த்து அந்த பட்டாதாரர் செலுத்த வேண்டிய நிலவாரியாக நிர்ணயம் செய்யப்படுகிறது.

கிராம நிர்வாக அலுவலர் ஒவ்வொரு பசலியிலும் டிசம்பர் மாதம் ஒரு தோராய கேட்பு பட்டியல்(Provisional Demand) தயார் செய்து வட்டாட்சியரின் ஒப்புதல் பெற்று ஜனவரி மாதத்திலிருந்து நான்கு தவணைகளாக நிலவரியை வசூல் செய்ய வேண்டும். இந்த நிலவரியுடன் கிராம நிர்வாக அலுவலர் நிலவரி பாக்கி மீது வட்டியாக விதிக்கப்பட்ட அபராதத் தொகையையும் வசூல் செய்ய வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர் நிலவரி தவிர கீழ்க்கண்ட இதர பாக்கிகளையும் நிலவரி போல் வசூல் செய்ய வேண்டும்.

வாரகம்
நகர்ப்புற் நிலவரி
நிலக் குத்தகை
நிலச் சீர்திருத்தச் சட்டத்தின்படி குத்தகை மற்றும் நில மதிப்பு
முத்திரைத் தாள் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட தொகை
வறியர் வழக்கு பாக்கி
சர்வே சி.எஸ்.எம். (எ) மற்றும் சி.எஸ்.எம். (பி)
விவசாய வருமான வரி
அபிவிருத்தி வரி
பல வகையான வருவாய் பாக்கிகள்

கிராம நிர்வாக அலுவலகர்கள் எந்த தொகை வசூல் செய்தாலும் அதற்குண்டான பற்றுச் சீட்டு செலுத்தியவருக்கு வழங்க வேண்டும். இத்தகைய வசூலான பணத்தை கிராமக் கணக்கு 13-இல் கணக்கிட்டு அதனை தாமதமில்லாமல் குறிப்பிட்ட நாளில் அரசுக் கணக்கில் செலுத்திட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் மாத இறுதிக்கு மேல் வசூல் செய்யப்பட்ட எந்தத் தொகையையும் கையிருப்பில் வைத்திருக்கக் கூடாது. அப்படி வைத்திருந்தால் அதனை தற்காலிகமாகக் கையாடல் செய்யப்பட்டதாகவே கருதப்படும்.
அதற்குண்டான நடவடிக்கைக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் உட்படுவார்கள். பட்டாதாரர்கள் நிலவரியை Revenue Money Order மூலமும் குறிப்பிட்டத் தொகைக்கு மேலிருந்தால் நேரடியாகவும் வங்கியில் செலுத்தலாம்

அடமானக் கடனை மீட்கவே முடியாதா?

ஒரு நபர் தன் நிலத்தை அவசர தேவையின் காரணமாக அடமானமாக வைத்து கடன் பெறுகிறார். பொதுவாகவே கடன் வாங்குவது என்பது வேகமாக ஓடுகின்ற நதியில் நீச்சல் தெரிந்த நபர் எதிர்நீச்சல் போடுவது போல ஆபத்தான பயணமாகும்.

அதேசமயத்தில் தன்னுடைய சொத்தை அடமானம் வைத்து கடன் வாங்குவது நீச்சலே தெரியாத ஒரு நபர் ஓடுகின்ற காட்டாற்று வெள்ளத்தில் எதிர்த்து நீந்த முயற்சி செய்வது போன்ற மிகுந்த ஆபத்தான செயலாகும். அது வங்கியின் மூலம் வாங்கிய கடன் அல்லது தனியாரிடம் வாங்கிய கடன் எதுவாக இருந்தாலும் கண்ணிமைக்கும் நேரத்தில் வட்டி குட்டிபோட்டு அடமானம் வைத்த சொத்தை இழந்திட நேரிடும்.

முறையாக அசலும் செலுத்திடாமல், வட்டியும் செலுத்திடாமல் அடமானச் சொத்து ஏலத்திற்கு வந்து வேறு ஒருவர் அதை வாங்கிய பிறகு பணத்தை மொத்தமாக திரட்டி அடமானக் கடனை திருப்பி செலுத்தி தன் சொத்தை திரும்ப பெற முயற்சி செய்வது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல் ஆகிவிடுகிறது. இது சம்பந்தமான ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தின் அமர்வு நீதிமன்றத்தின் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் Allokam Peddabbaya என்ற நபர் தன்னுடைய அடமானச் சொத்தை ஏலத்திற்கு வந்த பிறகு மீட்கவே முடியாதா? என்ற தனது ஆதங்கத்தை மறுஆய்வு மனுவாக தாக்கல் செய்து விசாரணை நடத்தும்படி கேட்டிருந்தார். அதனை விசாரித்த நீதிபதிகள், Transfer of the property Act (1882) பிரிவு 60 ன்படி கடன் பொருட்டு அடமானம் வைக்கப்பட்ட சொத்து முறையாக அசலும், வட்டியும் கட்டாததால் ஏலத்திற்கு வந்து விற்கப்பட்டு வேறு ஒரு நபருக்கு சுவாதீனமும் கொடுக்கப்பட்ட பிறகு கடன்காரர் முழுத்தொகையையும் வட்டியுடன் செலுத்தினாலும் நிச்சயமாக அடமானச் சொத்தை திரும்ப மீட்க முடியாது என்று தீர்ப்பு கூறினார்கள்.

SC. No- 671/2017
Allokam Peddabbaya Vs Allahabad Bank dt -  19.6.2017

Saturday, December 16, 2017

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமென்பது நுகர்வோர் பிரச்னைகள், சேவை குறைபாடு, வணிக நடைமுறை, நேர்மையற்ற வணிகமுறை போன்றவற்றிற்கு தீர்வு தரும் சட்டமாக உள்ளது. நுகர்வோர் நீதிமன்றங்கள் மூலம் புகார்தாரரே புகார் தாக்கல் செய்தும் அவரே வாதிட்டும் நீதிபெற முடியும். மருத்துவக்குறைபாடுகள், வங்கிகள், வீடு கட்டிக் கொடுப்பவர் பிரச்னைகள் மற்றும் பொருள்கள் தரத்தில் உள்ள குறைபாடுகள் போன்றவற்றை உள்ளடக்கிய சிக்கல்களுக்கு நீதி பெற நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம்.
                                         முக்கிய விதிகள்:-
நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் பிரிவு ”2(7)” நுகர்வோர் மன்றங்கள் எல்லாம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 இல் பிரிவு 27(2) இன்படி முதல் நிலைக் குற்றவியல் நீதிமன்றமாக செயல்படவும், அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கவும் அல்லது அதிகபட்சம் ரூ.10,000/-(ரூபாய் பத்தாயிரம்) அபராதம் விதிக்கவும் அதிகாரம் உள்ளது.

நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் பிரிவு ”3” அடுக்கு நீதி வழங்கும் நுகர்வோர் மன்ற அமைப்புகள் பண வகையிலான அதிகார வரம்பு :-

*
மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
*
மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் 20 இலட்சத்திற்கு மேல் ஒரு கோடி வரை.
*
தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஒரு கோடிக்கு மேல்.
*
மேல் முறையீடு  :- உச்சநீதிமன்றம்

                          நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் 

பிரிவு 2(b):- புகார்தாரர்(Complainant) என்பவர் யார்? எந்தவகையான புகார்தாரர்கள் புகார் கொடுக்க உரிமை உள்ளது?
*
நுகர்வோர் புகார் தாக்கல் செய்யலாம்.
*
ஒரே நலனில் அக்கறை கொண்ட நுகர்வோர் பலர் இருக்கையில், ஒருவர் அல்லது பலர் இருக்கையில், ஒருவர் அல்லது பலர் இச்சட்டத்தின் கீழ் புகார் செய்யலாம்.
*
நிறுவனச் சட்டம் (Company Act) 1956 இன் கீழ் அல்லது நடைமுறையிலுள்ள வேறு சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற எந்த நுகர்வோர் அமைப்பும் (Any Voluntary Consumer Association) புகார் செய்யலாம்.
*
மத்திய அரசாங்கம் அல்லது ஏதேனுமொரு மாநில அரசாங்கம் புகார் செய்யலாம்.
*
நுகர்வோர் (Consumer) இறப்பு (Death) ஏற்படும் நிலையில், அவரது சட்ட வாரிசு அல்லது பிரதிநிதி (Legal Heir) தாக்கல் செய்யலாம்.
*
மேலும், நுகர்வோர் நேரிடையாகவோ அல்லது அவருடைய சார்பிலோ பொருட்களுடைய மதிப்பீட்டை அனுசரித்து அல்லது சேவையை அனுசரித்து நஷ்ட ஈடு தொகை பெறமுடியும்.

நுகர்வோர் (Consumer) என்பவர் யார் என்ற விளக்கத்தை கீழ்கண்ட பிரிவுகளில் காண்போம் :-

பிரிவு.2(d)(i):- பொருட்களை நுகர்வோர், பணம் செலுத்தி விலைக்கு வாங்குவது  (அ) பகுதி அளவு பணம் செலுத்துவது, மற்றும் பகுதி வாக்குறுதியின் பேரில் வாங்குவது (அ) தள்ளி பணத்தைச் செலுத்தப்படும் என்ற முறையில் பொருட்களை வாங்குவது; அத்தகைய பொருட்களை பயன்படுத்துவர் இந்த விளக்கத்தின் கீழ் வருகிறார். (அதாவது) பொருட்களை விலைக்கு வாங்கியவர் (அ) பாதி வாக்குறுதியின் பேரிலும், பாதி பணம் செலுத்தியதின் பேரில் சேர்த்து நுகர்வோர்என்ற விளக்கத்திற்கு வருகிறார். ஆனால், நுகர்வோர் என்பவர், அத்தகைய பொருட்களை மறுவிற்பனைக்கு வாங்குபவரும், (அ) வியாபார நோக்கத்திற்கு  வாங்குபவரும், ‘நுகர்வோர்பிரிவில் வருவதில்லை.

பிரிவு.2.(d)(ii):-  பணம் செலுத்தி, ‘சேவையைவாடகைக்கு பெறுவது, (அல்லது) பயன் பெறுவது:- (அல்லது) பாதியை செலுத்தப்படுவது மற்றும் பாதி வாக்குறுதியின் பேரில் (பயன்பெறுவது)  (அல்லது) வேறு எந்த முறையின் கீழ் பணத்தை தள்ளி (பிறகு) செலுத்தப்படுதல், மற்றும்  பணம் செலுத்தி சேவைபெறுதல் (அல்லது) வாக்குறுதியின் பேரில் செலுத்துவது, (அல்லது) பாதி செலுத்துவது மற்றும் பாதியை வாக்குறுதியின் பேரில் பெறுதல் செலுத்துவது, (அல்லது) வேறு எந்த முறையிலும் பணம் தள்ளி செலுத்துவது, பெறுபவர்களை தவிர அத்தகைய (Such Services) ’சேவைகளின்பலன்களை பெறுபவர்களையும் ‘(Benificiary)’ சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

பிரிவு.2(e)-நுகர்வோர் பிரச்சனை என்றால் என்ன?:-
நுகர்வோர், எழுத்து மூலம் புகார் (குறைபாடுகள்) (Complaint) வேறு நபர் மீது கொடுப்பது (அல்லது) அந்தப்புகாரில் மறுப்பதுஅல்லது குற்றச்சாட்டுகளை எதிர்ப்பது என்பதாகும். அதாவது, நுகர்வோர் அல்லது பதிவு செய்யப்பட்ட நுகர்வோர் அமைப்பு அல்லது மத்திய அரசாங்கம் அல்லது மாநில அரசாங்கம் மேற்படி புகார்‘ (Complaint) தாக்கல் செய்வது, இந்த விளக்கத்தில் உள்ளடங்கியுள்ளது. எனவே, பிரச்னை (Dispute) என்ன என்பதை விரிவாக சொல்லவேண்டுமென்றால், ஒரு நபர் பரிகாரம்(Claim) கோருவது அந்த கோரிக்கையை மற்ற நபர் மறுப்பது அல்லது பொய்என்று கூறுவது அல்லது உண்மைஎன்று கூறுவதாகும். நுகர்வோர்பிரச்னையில்’, ‘அசையா சொத்துக்கள் பற்றியும்அல்லது அசையா சொத்துக்களின் விலை பற்றியும்எழுகின்ற பிரச்னைகள், வருவதில்லை. ஆகவே, நுகர்வோர் பிரச்னை பற்றி நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் சிவில் நீதிமன்றம் (Civil Court) போல புகாரில் தீர்ப்புக்காக எழுவினாக்கள்’ (Issues) எழுதப்பட வேண்டியதில்லை. ஆனால், பிரச்னை பற்றி தீர்மானிக்கப்பட வேண்டிய அம்சங்கள் எழுதப்பட வேண்டும்(Points for determination).

பிரிவு.2(f) குறைபாடு (பொருட்கள்):- குறைபாடு என்றால், ‘தவறானது’, நேர்த்தியில்லாமல் இருப்பதுஅல்லது தரத்தில்குறைபாடு உள்ளது, எண்ணிக்கைக் குறைபாடு, பொருளின் உள்திறன், சுத்தம் (Purity) அமலில் உள்ள சட்டத்தின்படி தகுதி உடையவையாகஇல்லாமல் இருத்தல் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும், அந்த குறைபாடு எந்த ஒப்பந்தத்தின் கீழ் அல்லது வெளிப்படையாகவும் அல்லது மறைமுகமாகவும் பொருட்கள் சம்பந்தமாக வியாபாரி (உற்பத்தியாளர்) என்ற வகையில் கோருகின்ற முறையிலும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

நுகர்வோர் சட்டத்தில் நஷ்ட ஈடு கோர முடியாத சேவைகள்:-

மேற்குறிப்பிட்ட சேவைகள் போல் இல்லாமல் இலவசமாக பெறும் சேவை மற்றும் தனிப்பட்ட சேவை ஒப்பந்தத்தின் கீழ் உள்ள சேவைக்கும் பொருந்தாது. விதி விலக்காக அரசு அலுவலர் அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை எடுத்துக்கொண்டால் இலவச சிகிச்சையாகக் கருதமுடியாது. அதில் சேவைக் குறைபாடு இருந்தால் அந்த அரசு அலுவலர் நுகர்வோர் நீதிமன்றத்தில் இழப்பீடு பெறலாம். மேலும் வாடகைதாரர் வீட்டு உரிமையாளர் சேவை குறைப்பாட்டிற்கும் நுகர்வோர் நீதிமன்றத்தில் பரிகாரம் கோரமுடியாது. இது போன்ற பல விரிவான சட்ட உரிமைகளை உள்ளடக்கியதே நுகர்வோர் பாதுகாப்பு சட்டமாகும். எனவே மக்கள் அனைவரும் நுகர்வாளர்களாக இருக்கும் பட்சத்தில் தாங்களே விரிவாக இச்சட்டத்தின் விளக்கத்தைப் பெற்று அல்லது வழக்கறிஞர் மூலமாக வழக்குத் தாக்கல் செய்து இழப்பீடு பெறலாம்
சட்டம் உன் கையில்

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்துக்கும் பெண்களுக்கும் என்ன சம்பந்தம் என நினைக்கிறீர்களா? ஏன் தோழிகளே... நாம்தானே நம்  வீட்டின் நிதி  அமைச்சர்களாக செயல்படுகிறோம். வீட்டின் வரவு செலவு கணக்குகளை பார்ப்பதோடு நம் பணி நிறைவு பெற்று விட்டதா என்ன? பெரும்பாலும் வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையுமே நாம்தானே தேர்வு செய்து வாங்கி வருகி றோம்!

அவ்வாறு நாம் வாங்கும் பொருட்களை தரம் பார்த்துதானே வாங்கி வருகிறோம்? இருப்பினும், நாம் அறியாது குறை நேர்ந்தால் கு டும்பத்தாரின்  கிண்டலுக்கும் கேலிக்கும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி வருந்தும் நிலை உண்டே! நாம் ஏமாற்றப்பட்டதற்கு யாரிடம்  எவ்வாறு வினா எழுப்பி தீர்வு  கோர முடியும் என்பதை விளக்குவதுதான் இந்த நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்!

நுகர்வோர் என்பவர் யார்? இந்த மண்ணில் ஜனிக்கும் ஒவ்வொரு மனிதனுமே நுகர்வோர்தான்! நாம் செலவழிக்கும் பணத்துக்கு  ஈடாக பொருள்  வாங்கும்போதோ, சேவையைப் பயன்படுத்தும் போதோ நுகர்வோர் ஆகிறோம். சற்றுப் பின்னோக்கிச் செ ல்வோமெனில், பண்டமாற்று முறையே  வணிக முறையாக நிலவி வந்த காலமுண்டு. அதற்குப் பின் வந்த காலங்களில் வாணிபத் துக்குப் பணத்தை பயன்படுத்தும் முறை வந்தது. அந்தக்  காலகட்டத்தில்கூட மனிதர்கள் நேர்மையாகவும், போற்றுதலுக்குரிய முறையி லும் வணிகம் நடத்தி வந்தனர் என்று வரலாறு கூறுகிறது.  காலம்  செல்லச் செல்ல மனிதனின் பேராசையால் வணிக முறையில்  கலப்படம், பொருட்களின் எடை மற்றும் அளவு குறைத்தல், அதிக விலைக்கு  விற்றல், தரமற்ற போலிகளை விற்றல் என்று பல தவறான முறைகள் கையாளப்பட்டு இன்று வரை நடைபெற்று வருகின்றன.
இதற்காக வணிக முறையை முறைப்படுத்துவதற்காக காலப்போக்கில் THE INDIAN CONTRACT ACT,  THE  SALE OF GOODS ACT, THE  AGRICULTURAL PRODUCE (GRADING AND MARKETING)  ACT, PREVENTION OF FOOD ADULTERATION ACT, THE STANDARDS  OF WEIGHT  AND MEASURES  ACT போன்ற பல சட்டங்கள் இயற்றப்பட்டு இன்றும் நடைமுறையில் உள்ளன. மேற்கூறிய சட்டங் களின் கீழ்  தீர்வு பெற சிவில் நீதிமன்றங்களையே நாடவேண்டிய நிலை உள்ளது. அதனால் பெருமளவில் நேரமும் பணமும் விரயமா கக்கூடிய வாய்ப்புள்ளதால்  பொருள் முதலீடு செய்து வியாபாரம் செய்பவர்களைத் தவிர பாதிக்கப்பட்ட சராசரியான நபர்கள்  வழக்கு தொடுப்பதை தவிர்த்தார்கள்.

அதனால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு பாதுகாப்பு தரும் பொருட்டு உலக அளவில் ஐக்கிய நாடுகள் சபை, வளர்ந்த நாடுகள் மற் றும் வளரும்  நாடுகளிலெல்லாம், ‘நுகர்வோரின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும்’ என்று 1985ல் தீர்மானம் நிறைவேற்றி யுள்ளது.  நம் அரசியல் அமைப்பு  சாசனம் தனிநபர் சுதந்திரம் மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பறைசாற்றுகிறது.  அதன் அடிப்படையிலேயே நுகர்வோர்  பாதுகாப்புச் சட்டம், 1986ல் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன் (Caveat Emptor) ‘வாங்குபவனே விழித்திரு’ என்ற விதி நிலவி  வந்தது. மகாத்மா காந்தி, ‘‘ ‘நுகர்வோர்’  என்பவர்  நம்மைச் சார்ந்தவரில்லை, ‘நுகர்வோர்’ பொருளை விலைக்கு வாங்குவதில் ‘அரச’ராகக்  கருதப்படுகிறார்’’ என்ற மேன்மையான கருத்தைக் கூறியுள்ளார். இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு அவரின் கூற்றுப்படி நுகர்வோரே அரசராக  விளங்குவது மறுக்க முடியாத உண்மை. 

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களின் சிறப்பம்சங்கள்
 

குறைந்த செலவில் விரைவான  நீதி மற்றும் சுருக்கமான விசாரணை.நுகர்வோர் குறைதீர் மன்றத்தின்     விசாரணை நடைமுறைகள் சிவில் நீதிமன்றங்களில் உள்ளது போல தோற்றமளித்தா லும், நுகர்வோர் மன்றத்தின் விசாரணை நடைமுறைகளை சிவில் விசாரணை நடைமுறைகள் என்று கருதக்கூடாது.

இந்திய சான்றாவணச் சட்டம் 1872 (Indian Evidence Act) குறைந்தபட்ச நோக்கங்களுக்காக மட்டுமே ஒரு  வரம்புக்கு உட்பட்டு பயன்படுத்த  வேண்டும்.

இச்சட்டத்தின் விசாரணை நடைமுறையில் பொதுவான இயற்கை நீதி விதிகள் (Principles of Natural  Justice) அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்க  வேண்டும்.
நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் புகார்தாரர் மற்றும் எதிர் மனுதாரர்கள் அவர்களது வழக்கில் அவர்களே வாதிட முடியும். தங்க ளது பிரதிநிதிகளின்  (Agent) மூலமாகவும் ஆஜராக முடியும். நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் வழக்கறிஞர்களே வழக்குகளில் ஆஜராகி நடத்த வேண்டும் என்ற  கட்டாயம் இல்லை.
நுகர்வோர் என்றால் யார்?

இந்தச் சட்டத்தின் கீழ்  பொருள் களை விலைக்கு வாங்குபவர் அல்லது சேவையை அவர் கொடுக்கும் விலைக்கு ஈடாக பெறுபவர்,  அதற்கானத்  தொகையை பகுதியாகவோ முழுமையாகவோ செலுத்திவிடுதல் அல்லது முழுமையாகவோ  அல்லது பகுதியாகவோ  செலுத்துவதற்கு  ஒப்புக்கொள்ளுபவரையே இந்தச் சட்டம் நுகர்வோர் என்று கூறுகிறது.   ஒரு நபர் வியாபார நோக்கத்துக்காகவும்,  தான் லாபம் பெரும் நோக்கத்தில்  வாங்கும் பொருட்களில் ஏற்படும் குறைகளுக்காகவோ, நஷ்டத்துக்காகவோ இந்தச் சட்டத்தைப்  பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

வியாபார நோக்கம் என்ற விளக்கத்தில் ஒரு நபர் மறுவிற்பனைக்காக பொருட்களை விலைக்கு வாங்குதலும் வியாபார நோக்கம் எ ன்று  கருதப்படுகிறது. உதாரணமாக ஒரு நபர் 50 கம்ப்யூட்டர்களை பெரிய அளவில் விலைக்கு வாங்கி ‘கம்ப்யூட்டர் மையம்’ நடத்தி  வருகிறார். இந்த  வகையில் செயலாற்றுவது வியாபார நோக்கத்துக்காகவும் லாபம் ஈட்டுவதற்காகவும் என்று கருதப்படுகிறது. இவ்வா றான நிலையில் ஏற்படும்  குறைபாடுகளுக்கான நஷ்ட ஈட்டினை இந்தச் சட்டத்தின் கீழ் கோர இயலாது.

ஒரு நபர் தான் வாங்கும் பொருளின் மூலம் வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே விலைக்கு வாங்கினால் அது ‘வியா பார  நோக்கமில்லை’. ‘சுயவேலை வாய்ப்பின் மூலம் வாழ்வதற்காக’(Self Employment for livelihood)  பொருட்களை வாங்கும் பட்சத்தில் அந்த நபரின்  செய்கை வியாபார நோக்கில் இல்லை என்று கருதப்படுகிறது. உதாரணமாக ஒரு  நபர் வாடகை கார் (Taxi) சுய வேலையின் கீழ் வாழ்க்கை  நடத்துவதற்காக வாங்குவது வியாபார நோக்கமாக கருதப்பட மாட்டாது.

புகார்...

பாதிக்கப்பட்ட நபர் நுகர்வோர் குறைதீர் மன்றத்தை நாடுவதற்கு முன்னர் எதிர் தரப்பினருக்கு அவரால் ஏற்பட்ட நஷ்டத்தை வி ளக்கி, அதனை ஈடு  செய்யக் கோரி  அல்லது பொருள் மாற்றம் அல்லது பொருளை பழுது பார்க்கக் கோரி ஒரு விளக்கக் கடிதம்  எழுதி அதனை பதிவுத் தபாலில்  அனுப்புதல் அவசியம். சில நேரங்களில் நமக்கான சரியான தீர்வு கிடைக்கக்கூடிய வாய்ப்பும் உள் ளது. ஒரு வேளை சரியான தீர்வு கிடைக்கவில்லை  என்றாலும் அல்லது கடிதத்துக்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்றாலும்,  உரிய ஆவணங்களுடன் (ரசீது, கடிதங்கள், கேரண்டி கார்ட்) உரிய  படிவத்தில் புகார் தாக்கல் செய்யலாம். 

                                            புகார் தாரராக...
  • புகார்தாரர் இந்தச் சட்டத்தின் கீழ் புகார் தாரராக...நுகர்வோரே புகார் தாக்கல் செய்யலாம். ஒரே நலனில் அக்கறை கொண்ட நுகர் வோர் பலர்  இருக்கையில் ஒருவர் அல்லது பலர்  இச்சட்டத்தின் கீழ் புகார் செய்யலாம்.
  • நிறுவனச் சட்டம் (Company Act) 1956ன் கீழ் அல்லது நடைமுறையிலுள்ள வேறு சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற எந்த  நுகர் வோர்  அமைப்பும்  (Any Voluntary Consumer Association) புகார் செய்யலாம்.
  • மத்திய அரசாங்கம் அல்லது ஏதேனுமொரு மாநில அரசாங்கமும் புகார் செய்யலாம். நுகர்வோர் (Consumer) இறப்பு ஏற்படும்  நிலையில், அவரது  சட்ட வாரிசு அல்லது பிரதிநிதி தாக்கல் செய்யலாம்.
  • நுகர்வோர் நேரிடையாகவோ அல்லது அவருடைய சார்பிலோ பொருட்களுடைய மதிப்பீட்டை அனுசரித்து அல்லது சேவையை  அனுசரித்து நஷ்ட  ஈடு தொகை பெற முடியும்.
  • மூன்று அடுக்கு நீதி வழங்கும் நுகர்வோர் மன்ற அமைப்புகள் (ThreeTier Consumer Disputes  Redressal Agencies) பண வகையிலான அதிகார  வரம்பு
  • மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் (District Forum). அசல் அதிகார வரம்பு (Original  Jurisdiction) ரூபாய் 20 லட்சம் வரை. பொதுவாக  மாவட்ட நீதிபதியாக தகுதியானவரோ அல்லது ஓய்வு பெற்ற  மாவட்ட நீதிபதியோ இதற்கு தலைவராக இருப்பார். அவருடன் இரண்டு உறுப்பினர்கள்  அமர்வார்கள். அதில் ஒருவர் கட்டாயமாக பெண் உறுப்பினராக இருக்க வேண்டும்.
  • மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் (State Commission). ரூபாய் 20 லட்சத்துக்கும் மேல் ஒரு கோடி வரை. பொது வாக ஓய்வு பெற்ற  உயர்நீதிமன்ற நீதிபதியே இதற்கு தலைவராக இருப்பார். அவருடன் 2 உறுப்பினர்கள் அமர்வார்கள். அதில் ஒருவர் கட்டாயமாக பெண் உறுப்பினராக  இருக்க வேண்டும்.
  •  தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் (National Commission), ரூபாய் 1 கோடிக்கு மேல். பொதுவாக ஓய்வு பெற்ற  உச்ச நீதிமன்ற நீதிபதியே  இதற்கு தலைவராக இருப்பார். அவருடன் 4 உறுப்பினர்கள் அமர்வார்கள். அதில் ஒருவர் கட்டாயமாக  பெண் உறுப்பினராக இருக்க வேண்டும்.
  •  மேல் முறையீடு உச்ச நீதிமன்றம் (Supreme Court)நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வறு மைக்கோட்டுக்கு கீழ் உள்ள  புகார்தாரர்களுக்கு நீதிமன்றக் கட்டணம் ஏதுமில்லை. ஏனைய வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள புகார் தாரர்களுக்கு அவர்களுடைய ஈடு  கோரிக்கையை பொருத்து நீதிமன்றக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் குறைதீர் மன் றத்தின் கீழ் பொதுவாக ஒரு நபர் சொந்த  உபயோகத்துக்காக வாங்கும் டி.வி., ஏசி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களில் ஏற்ப டும் குறைபாடுகளுக்கு மட்டுமன்றி விமானம் மற்றும் ரயில்  பயணங்களில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் வசதிக் குறைவுகளுக்கும் புகார்  மனு தாக்கல் செய்யலாம்.
உதாரணமாக புகார்தாரர் முன் பதிவு செய்த பயணச்சீட்டின் மூலம் பதிவு செய்துள்ள ரயில்வே பெட்டியில் பயணம் செய்கையில்  அந்தப் பதிவு செய்த  பெட்டியில் பதிவு செய்யாமல் பல நபர்கள் பயணம் செய்கிறார்கள் என்றால் டிக்கெட்   பரிசோதகரிடம்  இதனை  தெரிவித்தும் கவனத்தில்  எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், அந்தப் பெட்டியில் புகார்தாரரின் பொருள் திருடு போய் விட்டது என்றாலும் ரயில்வே நிர்வாகம் சேவை  குறைபாடு செய்துள்ளது. இந்தச் சேவை குறைபாட்டுக்காக ரயில்வே நிர்வாகம் புகார் தாரருக்கு நஷ்டஈடு பணம் கொடுக்க வேண்டும். மருத்துவ  கவனக் குறைபாட்டுக்காகவும்  நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தீர்வு  கோர இந்தச் சட்டத்தின் கீழ் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

உதாரணமாக ஒரு நபர் தனது வயிற்றிலுள்ள கட்டியை அகற்றுவதற்காக மருத்துவ அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை யில்  சேர்க்கப்பட்டு, அறுவை சிகிச்சை நிபுணர் அந்த நோயாளிக்கு வயிற்றிலுள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்ட பின், அந்த  நோயாளியின் வயிற்றில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்திய கத்தரிக்கோலை கவனக்குறைவாக வைத்து தையல் போட்டு   மூடிவிடுகிறார்.   மயக்கம் தெளிந்த பிறகு மீண்டும் வயிற்றில் கடுமையான வலியால் பாதிக்கப்படுகிறார். இவ்வாறான கவனக்குறை வான செயல்கள் சேவை  குறைபாட்டின் கீழ் வருவதால் பாதிக்கப்பட்ட நபர் நுகர்வோர் குறைதீர் மன்றத்தினை நாடி புகார் தாக்கல்  செய்து நஷ்டஈடு கோரலாம்.

அடுக்குமாடி வீடுகள் அல்லது வீடு கட்டிக்கொடுப்பதில் ஒப்பந்தத்துக்கு மாறுபட்டு சேவை குறைபாடுகள் இருந்தால் வீடு வாங்குப வர் வீடு கட்டிக்  கொடுப்பவரிடமிருந்து நஷ்ட ஈடு கோர இந்தச் சட்டத்தின் கீழ் வழிவகை செய்யப்பட்டுள்ளது.  உதாரணமாக வீடு  வாங்கியவர் வீட்டின் விலையின்படி  முன்பணமும் பிறகு முழுத் தொகையையும் திட்டத்தின்படி செலுத்திய பின் அந்தக் கட்டிடத் துக்கு விலை ஏறிவிட்டது என்று கூறி மீண்டும் அதிக  பணத்தை வீடுகட்டிக் கொடுத்தவர் கோர உரிமை இல்லை. அவ்வாறு கோரும்  பட்சத்தில் வீட்டினை விலைக்கு வாங்கியவர் மாவட்ட நுகர்வோர்  குறைதீர்மன்றம் அல்லது மாநில குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்து பரிகாரம் கோரலாம். ‘விரைவு தபால்’ சேவை, வங்கிச் சேவைகளில்  குறைபாடு இருந்தாலும் நஷ்டஈடுபெற வழி செய் யப்பட்டுள்ளது.  எந்தவொரு புகாரையும் தாக்கல் செய்ய பாதிக்கப்பட்டதிலிருந்து இரண்டு ஆண்டு  நிறைவடைவதற்கு முன்னர்  தாக்கல் செய்யவேண்டும். ஒருவேளை 2 ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்ய தவறும் பட்சத்தில் உரிய காரணம்  இல்லாமல் குறைதீர்  மன்றம் அதனை ஏற்றுக்கொள்ளாது. 

நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனு எந்தவித முகாந்திரமும் இல்லாமல் தாக்கல் செய்யப்படும் பட்சத்தில்  புகார்தாரர்  எதிர்தரப்பிற்கு ரூபாய் பத்தாயிரத்திற்கு மிகாத நஷ்டஈடு கொடுக்க உத்தரவிடப்படும்.  மேலும், குறைதீர்மன்றம் அளிக்கும்  தீர்ப்பு மேல் முறையீடு  செய்யப்படாமலும் நிறைவேற்றப்படாமலும் இருக்கும் பட்சத்தில் குறைதீர் மன்ற அவமதிப்புக்காக ஒரு மாதத் திலிருந்து 3 ஆண்டு வரையிலான  சிறைத் தண்டனையும் ரூபாய்  2 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் அபராதமும் விதிக்க வழி செய்யப் பட்டுள்ளது.  மேலும், இந்த நுகர்வோர் பாதுகாப்புச்  சட்டம் 1986ஐ நடைமுறைப்படுத்துவதற்கான விதிகளும் இயற்றப்பட்டுள்ளது. 

பாதிக்கப்படும் நுகர்வோர் அதற்கான தீர்வைப் பெற நியாயம் கேட்டு கேள்வி எழுப்பாத வரை, தவறு செய்தவர்கள் அந்தத் தவற் றினை திருத்திக்  கொள்வதற்கான வாய்ப்பே இல்லை! நுகர்வோரே ராஜா என்பது எழுத்தளவில் மட்டுமல்லாமல் அதற்கு செயல்  வடிவம் கொடுக்க வேண்டும்  என்றால், பாதிக்கப்பட்ட நுகர்வோர் இந்தச் சட்டத்தினை முழுமையாக பயன்படுத்தி அதற்கான  தீர்வை பெறுவதன் மூலமே நிலை நாட்டப்படும்.  நுகர்வோரின் உரிமை மீறல் மனித உரிமை மீறலே!


சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிறக்காத குழந்தைக்குச் சொத்து (Unborn child) ஒருவர் கொடுக்க முடியுமா?

இந்தியாவில் உள்ள சொத்துரிமை மாற்றுச் சட்டம் 1882-ன் பிரிவு 5-ன்படி எந்த சொத்துக்களையும் ஒருவருக்கு மற்றொருவருக்கு உரிமை மாற்றிக் கொடுத்துக் கொள்ளும்போது, (விற்பனை, செட்டில்மெண்ட், போன்றவை), இரண்டு உயிருள்ள நபர்களுக்குள் மட்டுமே கொடுத்துக் கொள்ளமுடியும் அல்லது பரிமாறிக் கொள்ள முடியும் என்று சொல்லியுள்ளது. மேலும், உயிருள்ள நபர் என்பது, மனிதர்களையும், மனிதர்களால் நடத்தப்படும் நிறுவனங்களையும், (அது பதிவு செய்யப் பட்டிருந்தாலும், அல்லது பதிவு செய்யப்படாமல் இருந்தாலும்) உள்ளடக்கியே உயிருள்ள நபர் என்றே கருதப்படும் எனவும் விளக்குகிறது.

இவ்வாறு தெளிவாக சொல்லிப்பட்டிருக்கையில், எப்படி பிறக்காத (உயிரில்லாத) ஒரு குழந்தைக்கு கொடுக்க முடியும் என்ற கேள்வி எழும்.
இந்திய சொத்துரிமை மாற்றுச் சட்டத்தில், முஸ்லீம் அல்லாதவர்களுக்கு என்றே, 2-ம் அத்தியாயம் உள்ளது. அதிலுள்ள பிரிவுகள் 5 முதல் 53-ஏ வரை உள்ளவைகள், விதிவிலக்கான அல்லது வித்தியாசமான சில சொத்து மாற்றங்களைக் குறிப்பிடுகிறது. அவ்வாறு சொல்லப் பட்டுள்ளவைகளில் பிரிவு 13-ல் தான், “பிறக்காத குழந்தைக்கு சொத்தை மாற்றுவதைப் பற்றிசொல்லப்பட்டுள்ளது.
பிரிவு:13: “பிறக்காத குழந்தைக்கு, அந்த குழந்தைக்கு பயன் அளிக்கும் வகையில் ஒரு சொத்தை கொடுக்கலாம் என்றும்; அவ்வாறு கொடுத்த சொத்தை பெறுவதற்கு அந்த குழந்தை இந்த உலகில் இல்லாமல் இருப்பதால், அதற்கு முன், அதை உயிருள்ள ஒருவர், தன்கைவசம் வைத்திருத்து, அந்த குழந்தை பிறந்தவுடன் அதனிடம் சேர்த்து விடவேண்டும்என்று அந்த பிரிவில் சொல்லப்பட்டுள்ளது.
மேலும், அவ்வாறு அந்த பிறக்காத குழந்தைக்கு கொடுக்கும் சொத்தை, அனுபவிக்கும் உரிமையை கட்டுப்படுத்தாமல், (அதன் ஆயுட்கால உரிமை என்று எழுதாமல்) முழுஉரிமையுடன் அந்த குழந்தை பிறந்தவுடன் அனுபவிக்க ஏதுவாக கொடுத்திருக்க வேண்டும்.
மேலும், “பிறக்காத குழந்தைஎன்பது இதுவரை பிறக்காமல் அதாவது கருவில்கூட உருவாகாமல் இருக்கும் குழந்தை என்றே சட்டம் கருதுகிறது. ஆனால், கருவில் வளரும் குழந்தை, இந்த உலகில் உயிருடன் இருக்கும் குழந்தைஎன்றே கருத வேண்டும்.
உயில் எழுதி வைக்கும்போதும், இவ்வாறான பிறக்காத குழந்தைக்கு சொத்து சேரும்படியும் உயிலை எழுதி வைக்கலாம்.