நுகர்வோர்
பாதுகாப்புச் சட்டமென்பது நுகர்வோர் பிரச்னைகள், சேவை குறைபாடு, வணிக நடைமுறை, நேர்மையற்ற வணிகமுறை
போன்றவற்றிற்கு தீர்வு தரும் சட்டமாக உள்ளது. நுகர்வோர் நீதிமன்றங்கள் மூலம்
புகார்தாரரே புகார் தாக்கல் செய்தும் அவரே வாதிட்டும் நீதிபெற முடியும். மருத்துவக்குறைபாடுகள், வங்கிகள், வீடு கட்டிக் கொடுப்பவர்
பிரச்னைகள் மற்றும் பொருள்கள் தரத்தில் உள்ள குறைபாடுகள் போன்றவற்றை உள்ளடக்கிய
சிக்கல்களுக்கு நீதி பெற நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம்.
முக்கிய
விதிகள்:-
நுகர்வோர்
பாதுகாப்புச்சட்டம் பிரிவு ”2(7)” நுகர்வோர் மன்றங்கள் எல்லாம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 இல் பிரிவு 27(2) இன்படி முதல் நிலைக் குற்றவியல்
நீதிமன்றமாக செயல்படவும், அதிகபட்சம்
3 ஆண்டுகள்
சிறைத் தண்டனை வழங்கவும் அல்லது அதிகபட்சம் ரூ.10,000/-(ரூபாய் பத்தாயிரம்) அபராதம்
விதிக்கவும் அதிகாரம் உள்ளது.
நுகர்வோர்
பாதுகாப்புச்சட்டம் பிரிவு ”3” அடுக்கு நீதி வழங்கும் நுகர்வோர் மன்ற அமைப்புகள் பண
வகையிலான அதிகார வரம்பு :-
* மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
* மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் 20 இலட்சத்திற்கு மேல் ஒரு கோடி வரை.
* தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஒரு கோடிக்கு மேல்.
* மேல் முறையீடு :- உச்சநீதிமன்றம்
நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம்
பிரிவு 2(b):- புகார்தாரர்(Complainant) என்பவர் யார்? எந்தவகையான புகார்தாரர்கள் புகார் கொடுக்க உரிமை உள்ளது?
* நுகர்வோர் புகார் தாக்கல் செய்யலாம்.
* ஒரே நலனில் அக்கறை கொண்ட நுகர்வோர் பலர் இருக்கையில், ஒருவர் அல்லது பலர் இருக்கையில், ஒருவர் அல்லது பலர் இச்சட்டத்தின் கீழ் புகார் செய்யலாம்.
* நிறுவனச் சட்டம் (Company Act) 1956 இன் கீழ் அல்லது நடைமுறையிலுள்ள வேறு சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற எந்த நுகர்வோர் அமைப்பும் (Any Voluntary Consumer Association) புகார் செய்யலாம்.
* மத்திய அரசாங்கம் அல்லது ஏதேனுமொரு மாநில அரசாங்கம் புகார் செய்யலாம்.
* நுகர்வோர் (Consumer) இறப்பு (Death) ஏற்படும் நிலையில், அவரது சட்ட வாரிசு அல்லது பிரதிநிதி (Legal Heir) தாக்கல் செய்யலாம்.
* மேலும், நுகர்வோர் நேரிடையாகவோ அல்லது அவருடைய சார்பிலோ பொருட்களுடைய மதிப்பீட்டை அனுசரித்து அல்லது சேவையை அனுசரித்து நஷ்ட ஈடு தொகை பெறமுடியும்.
நுகர்வோர் (Consumer) என்பவர் யார் என்ற விளக்கத்தை கீழ்கண்ட பிரிவுகளில் காண்போம் :-
பிரிவு.2(d)(i):- பொருட்களை நுகர்வோர், பணம் செலுத்தி விலைக்கு வாங்குவது (அ) பகுதி அளவு பணம் செலுத்துவது, மற்றும் பகுதி வாக்குறுதியின் பேரில் வாங்குவது (அ) தள்ளி பணத்தைச் செலுத்தப்படும் என்ற முறையில் பொருட்களை வாங்குவது; அத்தகைய பொருட்களை பயன்படுத்துவர் இந்த விளக்கத்தின் கீழ் வருகிறார். (அதாவது) பொருட்களை விலைக்கு வாங்கியவர் (அ) பாதி வாக்குறுதியின் பேரிலும், பாதி பணம் செலுத்தியதின் பேரில் சேர்த்து ‘நுகர்வோர்’ என்ற விளக்கத்திற்கு வருகிறார். ஆனால், நுகர்வோர் என்பவர், அத்தகைய பொருட்களை ‘மறுவிற்பனைக்கு வாங்குபவரும், (அ) ’வியாபார நோக்கத்திற்கு வாங்குபவரும், ‘நுகர்வோர்’ பிரிவில் வருவதில்லை.
பிரிவு.2.(d)(ii):- பணம் செலுத்தி, ‘சேவையை’ வாடகைக்கு பெறுவது, (அல்லது) பயன் பெறுவது:- (அல்லது) பாதியை செலுத்தப்படுவது மற்றும் பாதி வாக்குறுதியின் பேரில் (பயன்பெறுவது) (அல்லது) வேறு எந்த முறையின் கீழ் பணத்தை தள்ளி (பிறகு) செலுத்தப்படுதல், மற்றும் பணம் செலுத்தி ‘சேவை’ பெறுதல் (அல்லது) வாக்குறுதியின் பேரில் செலுத்துவது, (அல்லது) பாதி செலுத்துவது மற்றும் பாதியை வாக்குறுதியின் பேரில் பெறுதல் செலுத்துவது, (அல்லது) வேறு எந்த முறையிலும் பணம் தள்ளி செலுத்துவது, பெறுபவர்களை தவிர அத்தகைய (Such Services) ’சேவைகளின்’ பலன்களை பெறுபவர்களையும் ‘(Benificiary)’ சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
பிரிவு.2(e)-நுகர்வோர் பிரச்சனை என்றால் என்ன?:-
நுகர்வோர், எழுத்து மூலம் புகார் (குறைபாடுகள்) (Complaint) வேறு நபர் மீது கொடுப்பது (அல்லது) அந்தப்புகாரில் ‘மறுப்பது’ அல்லது குற்றச்சாட்டுகளை எதிர்ப்பது என்பதாகும். அதாவது, நுகர்வோர் அல்லது பதிவு செய்யப்பட்ட நுகர்வோர் அமைப்பு அல்லது மத்திய அரசாங்கம் அல்லது மாநில அரசாங்கம் மேற்படி ’புகார்‘ (Complaint) தாக்கல் செய்வது, இந்த விளக்கத்தில் உள்ளடங்கியுள்ளது. எனவே, பிரச்னை (Dispute) என்ன என்பதை விரிவாக சொல்லவேண்டுமென்றால், ஒரு நபர் பரிகாரம்(Claim) கோருவது அந்த கோரிக்கையை மற்ற நபர் மறுப்பது அல்லது ’பொய்’ என்று கூறுவது அல்லது ‘உண்மை’ என்று கூறுவதாகும். ‘நுகர்வோர்’ பிரச்னையில்’, ‘அசையா சொத்துக்கள் பற்றியும்’ அல்லது ‘அசையா சொத்துக்களின் விலை பற்றியும்’ எழுகின்ற பிரச்னைகள், வருவதில்லை. ஆகவே, நுகர்வோர் பிரச்னை பற்றி நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் சிவில் நீதிமன்றம் (Civil Court) போல புகாரில் தீர்ப்புக்காக ‘எழுவினாக்கள்’ (Issues) எழுதப்பட வேண்டியதில்லை. ஆனால், பிரச்னை பற்றி தீர்மானிக்கப்பட வேண்டிய அம்சங்கள் எழுதப்பட வேண்டும்(Points for determination).
பிரிவு.2(f) குறைபாடு (பொருட்கள்):- குறைபாடு என்றால், ‘தவறானது’, நேர்த்தியில்லாமல் இருப்பது’ அல்லது ‘தரத்தில்’ குறைபாடு உள்ளது, எண்ணிக்கைக் குறைபாடு, பொருளின் உள்திறன், சுத்தம் (Purity) அமலில் உள்ள சட்டத்தின்படி ‘தகுதி உடையவையாக’ இல்லாமல் இருத்தல் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும், அந்த ‘குறைபாடு எந்த ஒப்பந்தத்தின் கீழ் அல்லது வெளிப்படையாகவும் அல்லது மறைமுகமாகவும் பொருட்கள் சம்பந்தமாக வியாபாரி (உற்பத்தியாளர்) என்ற வகையில் கோருகின்ற முறையிலும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
நுகர்வோர் சட்டத்தில் நஷ்ட ஈடு கோர முடியாத சேவைகள்:-
மேற்குறிப்பிட்ட சேவைகள் போல் இல்லாமல் இலவசமாக பெறும் சேவை மற்றும் தனிப்பட்ட சேவை ஒப்பந்தத்தின் கீழ் உள்ள சேவைக்கும் பொருந்தாது. விதி விலக்காக அரசு அலுவலர் அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை எடுத்துக்கொண்டால் இலவச சிகிச்சையாகக் கருதமுடியாது. அதில் சேவைக் குறைபாடு இருந்தால் அந்த அரசு அலுவலர் நுகர்வோர் நீதிமன்றத்தில் இழப்பீடு பெறலாம். மேலும் வாடகைதாரர் வீட்டு உரிமையாளர் சேவை குறைப்பாட்டிற்கும் நுகர்வோர் நீதிமன்றத்தில் பரிகாரம் கோரமுடியாது. இது போன்ற பல விரிவான சட்ட உரிமைகளை உள்ளடக்கியதே நுகர்வோர் பாதுகாப்பு சட்டமாகும். எனவே மக்கள் அனைவரும் நுகர்வாளர்களாக இருக்கும் பட்சத்தில் தாங்களே விரிவாக இச்சட்டத்தின் விளக்கத்தைப் பெற்று அல்லது வழக்கறிஞர் மூலமாக வழக்குத் தாக்கல் செய்து இழப்பீடு பெறலாம்

சட்டம் உன் கையில்
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்துக்கும் பெண்களுக்கும் என்ன சம்பந்தம் என நினைக்கிறீர்களா? ஏன் தோழிகளே... நாம்தானே நம் வீட்டின் நிதி அமைச்சர்களாக செயல்படுகிறோம். வீட்டின் வரவு செலவு கணக்குகளை பார்ப்பதோடு நம் பணி நிறைவு பெற்று விட்டதா என்ன? பெரும்பாலும் வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையுமே நாம்தானே தேர்வு செய்து வாங்கி வருகி றோம்!
அவ்வாறு நாம் வாங்கும் பொருட்களை தரம் பார்த்துதானே வாங்கி வருகிறோம்? இருப்பினும், நாம் அறியாது குறை நேர்ந்தால் கு டும்பத்தாரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி வருந்தும் நிலை உண்டே! நாம் ஏமாற்றப்பட்டதற்கு யாரிடம் எவ்வாறு வினா எழுப்பி தீர்வு கோர முடியும் என்பதை விளக்குவதுதான் இந்த நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்!

நுகர்வோர் என்பவர் யார்? இந்த மண்ணில் ஜனிக்கும் ஒவ்வொரு மனிதனுமே நுகர்வோர்தான்! நாம் செலவழிக்கும் பணத்துக்கு ஈடாக பொருள் வாங்கும்போதோ, சேவையைப் பயன்படுத்தும் போதோ நுகர்வோர் ஆகிறோம். சற்றுப் பின்னோக்கிச் செ ல்வோமெனில், பண்டமாற்று முறையே வணிக முறையாக நிலவி வந்த காலமுண்டு. அதற்குப் பின் வந்த காலங்களில் வாணிபத் துக்குப் பணத்தை பயன்படுத்தும் முறை வந்தது. அந்தக் காலகட்டத்தில்கூட மனிதர்கள் நேர்மையாகவும், போற்றுதலுக்குரிய முறையி லும் வணிகம் நடத்தி வந்தனர் என்று வரலாறு கூறுகிறது. காலம் செல்லச் செல்ல மனிதனின் பேராசையால் வணிக முறையில் கலப்படம், பொருட்களின் எடை மற்றும் அளவு குறைத்தல், அதிக விலைக்கு விற்றல், தரமற்ற போலிகளை விற்றல் என்று பல தவறான முறைகள் கையாளப்பட்டு இன்று வரை நடைபெற்று வருகின்றன.
இதற்காக வணிக முறையை முறைப்படுத்துவதற்காக காலப்போக்கில் THE INDIAN CONTRACT ACT, THE SALE OF GOODS ACT, THE AGRICULTURAL PRODUCE (GRADING AND MARKETING) ACT, PREVENTION OF FOOD ADULTERATION ACT, THE STANDARDS OF WEIGHT AND MEASURES ACT போன்ற பல சட்டங்கள் இயற்றப்பட்டு இன்றும் நடைமுறையில் உள்ளன. மேற்கூறிய சட்டங் களின் கீழ் தீர்வு பெற சிவில் நீதிமன்றங்களையே நாடவேண்டிய நிலை உள்ளது. அதனால் பெருமளவில் நேரமும் பணமும் விரயமா கக்கூடிய வாய்ப்புள்ளதால் பொருள் முதலீடு செய்து வியாபாரம் செய்பவர்களைத் தவிர பாதிக்கப்பட்ட சராசரியான நபர்கள் வழக்கு தொடுப்பதை தவிர்த்தார்கள்.
அதனால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு பாதுகாப்பு தரும் பொருட்டு உலக அளவில் ஐக்கிய நாடுகள் சபை, வளர்ந்த நாடுகள் மற் றும் வளரும் நாடுகளிலெல்லாம், ‘நுகர்வோரின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும்’ என்று 1985ல் தீர்மானம் நிறைவேற்றி யுள்ளது. நம் அரசியல் அமைப்பு சாசனம் தனிநபர் சுதந்திரம் மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பறைசாற்றுகிறது. அதன் அடிப்படையிலேயே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986ல் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன் (Caveat Emptor) ‘வாங்குபவனே விழித்திரு’ என்ற விதி நிலவி வந்தது. மகாத்மா காந்தி, ‘‘ ‘நுகர்வோர்’ என்பவர் நம்மைச் சார்ந்தவரில்லை, ‘நுகர்வோர்’ பொருளை விலைக்கு வாங்குவதில் ‘அரச’ராகக் கருதப்படுகிறார்’’ என்ற மேன்மையான கருத்தைக் கூறியுள்ளார். இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு அவரின் கூற்றுப்படி நுகர்வோரே அரசராக விளங்குவது மறுக்க முடியாத உண்மை.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களின் சிறப்பம்சங்கள்
குறைந்த செலவில் விரைவான நீதி மற்றும் சுருக்கமான விசாரணை.நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் விசாரணை நடைமுறைகள் சிவில் நீதிமன்றங்களில் உள்ளது போல தோற்றமளித்தா லும், நுகர்வோர் மன்றத்தின் விசாரணை நடைமுறைகளை சிவில் விசாரணை நடைமுறைகள் என்று கருதக்கூடாது.
இந்திய சான்றாவணச் சட்டம் 1872 (Indian Evidence Act) குறைந்தபட்ச நோக்கங்களுக்காக மட்டுமே ஒரு வரம்புக்கு உட்பட்டு பயன்படுத்த வேண்டும்.

இச்சட்டத்தின் விசாரணை நடைமுறையில் பொதுவான இயற்கை நீதி விதிகள் (Principles of Natural Justice) அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்க வேண்டும்.
நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் புகார்தாரர் மற்றும் எதிர் மனுதாரர்கள் அவர்களது வழக்கில் அவர்களே வாதிட முடியும். தங்க ளது பிரதிநிதிகளின் (Agent) மூலமாகவும் ஆஜராக முடியும். நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் வழக்கறிஞர்களே வழக்குகளில் ஆஜராகி நடத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
நுகர்வோர் என்றால் யார்?
இந்தச் சட்டத்தின் கீழ் பொருள் களை விலைக்கு வாங்குபவர் அல்லது சேவையை அவர் கொடுக்கும் விலைக்கு ஈடாக பெறுபவர், அதற்கானத் தொகையை பகுதியாகவோ முழுமையாகவோ செலுத்திவிடுதல் அல்லது முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ செலுத்துவதற்கு ஒப்புக்கொள்ளுபவரையே இந்தச் சட்டம் நுகர்வோர் என்று கூறுகிறது. ஒரு நபர் வியாபார நோக்கத்துக்காகவும், தான் லாபம் பெரும் நோக்கத்தில் வாங்கும் பொருட்களில் ஏற்படும் குறைகளுக்காகவோ, நஷ்டத்துக்காகவோ இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
வியாபார நோக்கம் என்ற விளக்கத்தில் ஒரு நபர் மறுவிற்பனைக்காக பொருட்களை விலைக்கு வாங்குதலும் வியாபார நோக்கம் எ ன்று கருதப்படுகிறது. உதாரணமாக ஒரு நபர் 50 கம்ப்யூட்டர்களை பெரிய அளவில் விலைக்கு வாங்கி ‘கம்ப்யூட்டர் மையம்’ நடத்தி வருகிறார். இந்த வகையில் செயலாற்றுவது வியாபார நோக்கத்துக்காகவும் லாபம் ஈட்டுவதற்காகவும் என்று கருதப்படுகிறது. இவ்வா றான நிலையில் ஏற்படும் குறைபாடுகளுக்கான நஷ்ட ஈட்டினை இந்தச் சட்டத்தின் கீழ் கோர இயலாது.
ஒரு நபர் தான் வாங்கும் பொருளின் மூலம் வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே விலைக்கு வாங்கினால் அது ‘வியா பார நோக்கமில்லை’. ‘சுயவேலை வாய்ப்பின் மூலம் வாழ்வதற்காக’(Self Employment for livelihood) பொருட்களை வாங்கும் பட்சத்தில் அந்த நபரின் செய்கை வியாபார நோக்கில் இல்லை என்று கருதப்படுகிறது. உதாரணமாக ஒரு நபர் வாடகை கார் (Taxi) சுய வேலையின் கீழ் வாழ்க்கை நடத்துவதற்காக வாங்குவது வியாபார நோக்கமாக கருதப்பட மாட்டாது.
புகார்...
பாதிக்கப்பட்ட நபர் நுகர்வோர் குறைதீர் மன்றத்தை நாடுவதற்கு முன்னர் எதிர் தரப்பினருக்கு அவரால் ஏற்பட்ட நஷ்டத்தை வி ளக்கி, அதனை ஈடு செய்யக் கோரி அல்லது பொருள் மாற்றம் அல்லது பொருளை பழுது பார்க்கக் கோரி ஒரு விளக்கக் கடிதம் எழுதி அதனை பதிவுத் தபாலில் அனுப்புதல் அவசியம். சில நேரங்களில் நமக்கான சரியான தீர்வு கிடைக்கக்கூடிய வாய்ப்பும் உள் ளது. ஒரு வேளை சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றாலும் அல்லது கடிதத்துக்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்றாலும், உரிய ஆவணங்களுடன் (ரசீது, கடிதங்கள், கேரண்டி கார்ட்) உரிய படிவத்தில் புகார் தாக்கல் செய்யலாம்.
புகார் தாரராக...

- புகார்தாரர் இந்தச் சட்டத்தின் கீழ் புகார் தாரராக...நுகர்வோரே புகார் தாக்கல் செய்யலாம். ஒரே நலனில் அக்கறை கொண்ட நுகர் வோர் பலர் இருக்கையில் ஒருவர் அல்லது பலர் இச்சட்டத்தின் கீழ் புகார் செய்யலாம்.
- நிறுவனச் சட்டம் (Company Act) 1956ன் கீழ் அல்லது நடைமுறையிலுள்ள வேறு சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற எந்த நுகர் வோர் அமைப்பும் (Any Voluntary Consumer Association) புகார் செய்யலாம்.
- மத்திய அரசாங்கம் அல்லது ஏதேனுமொரு மாநில அரசாங்கமும் புகார் செய்யலாம். நுகர்வோர் (Consumer) இறப்பு ஏற்படும் நிலையில், அவரது சட்ட வாரிசு அல்லது பிரதிநிதி தாக்கல் செய்யலாம்.
- நுகர்வோர் நேரிடையாகவோ அல்லது அவருடைய சார்பிலோ பொருட்களுடைய மதிப்பீட்டை அனுசரித்து அல்லது சேவையை அனுசரித்து நஷ்ட ஈடு தொகை பெற முடியும்.
- மூன்று அடுக்கு நீதி வழங்கும் நுகர்வோர் மன்ற அமைப்புகள் (ThreeTier Consumer Disputes Redressal Agencies) பண வகையிலான அதிகார வரம்பு
- மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் (District Forum). அசல் அதிகார வரம்பு (Original Jurisdiction) ரூபாய் 20 லட்சம் வரை. பொதுவாக மாவட்ட நீதிபதியாக தகுதியானவரோ அல்லது ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியோ இதற்கு தலைவராக இருப்பார். அவருடன் இரண்டு உறுப்பினர்கள் அமர்வார்கள். அதில் ஒருவர் கட்டாயமாக பெண் உறுப்பினராக இருக்க வேண்டும்.
- மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் (State Commission). ரூபாய் 20 லட்சத்துக்கும் மேல் ஒரு கோடி வரை. பொது வாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியே இதற்கு தலைவராக இருப்பார். அவருடன் 2 உறுப்பினர்கள் அமர்வார்கள். அதில் ஒருவர் கட்டாயமாக பெண் உறுப்பினராக இருக்க வேண்டும்.
- தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் (National Commission), ரூபாய் 1 கோடிக்கு மேல். பொதுவாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியே இதற்கு தலைவராக இருப்பார். அவருடன் 4 உறுப்பினர்கள் அமர்வார்கள். அதில் ஒருவர் கட்டாயமாக பெண் உறுப்பினராக இருக்க வேண்டும்.
- மேல் முறையீடு உச்ச நீதிமன்றம் (Supreme Court)நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வறு மைக்கோட்டுக்கு கீழ் உள்ள புகார்தாரர்களுக்கு நீதிமன்றக் கட்டணம் ஏதுமில்லை. ஏனைய வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள புகார் தாரர்களுக்கு அவர்களுடைய ஈடு கோரிக்கையை பொருத்து நீதிமன்றக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் குறைதீர் மன் றத்தின் கீழ் பொதுவாக ஒரு நபர் சொந்த உபயோகத்துக்காக வாங்கும் டி.வி., ஏசி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களில் ஏற்ப டும் குறைபாடுகளுக்கு மட்டுமன்றி விமானம் மற்றும் ரயில் பயணங்களில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் வசதிக் குறைவுகளுக்கும் புகார் மனு தாக்கல் செய்யலாம்.
உதாரணமாக ஒரு நபர் தனது வயிற்றிலுள்ள கட்டியை அகற்றுவதற்காக மருத்துவ அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டு, அறுவை சிகிச்சை நிபுணர் அந்த நோயாளிக்கு வயிற்றிலுள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்ட பின், அந்த நோயாளியின் வயிற்றில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்திய கத்தரிக்கோலை கவனக்குறைவாக வைத்து தையல் போட்டு மூடிவிடுகிறார். மயக்கம் தெளிந்த பிறகு மீண்டும் வயிற்றில் கடுமையான வலியால் பாதிக்கப்படுகிறார். இவ்வாறான கவனக்குறை வான செயல்கள் சேவை குறைபாட்டின் கீழ் வருவதால் பாதிக்கப்பட்ட நபர் நுகர்வோர் குறைதீர் மன்றத்தினை நாடி புகார் தாக்கல் செய்து நஷ்டஈடு கோரலாம்.
அடுக்குமாடி வீடுகள் அல்லது வீடு கட்டிக்கொடுப்பதில் ஒப்பந்தத்துக்கு மாறுபட்டு சேவை குறைபாடுகள் இருந்தால் வீடு வாங்குப வர் வீடு கட்டிக் கொடுப்பவரிடமிருந்து நஷ்ட ஈடு கோர இந்தச் சட்டத்தின் கீழ் வழிவகை செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக வீடு வாங்கியவர் வீட்டின் விலையின்படி முன்பணமும் பிறகு முழுத் தொகையையும் திட்டத்தின்படி செலுத்திய பின் அந்தக் கட்டிடத் துக்கு விலை ஏறிவிட்டது என்று கூறி மீண்டும் அதிக பணத்தை வீடுகட்டிக் கொடுத்தவர் கோர உரிமை இல்லை. அவ்வாறு கோரும் பட்சத்தில் வீட்டினை விலைக்கு வாங்கியவர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றம் அல்லது மாநில குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்து பரிகாரம் கோரலாம். ‘விரைவு தபால்’ சேவை, வங்கிச் சேவைகளில் குறைபாடு இருந்தாலும் நஷ்டஈடுபெற வழி செய் யப்பட்டுள்ளது. எந்தவொரு புகாரையும் தாக்கல் செய்ய பாதிக்கப்பட்டதிலிருந்து இரண்டு ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் தாக்கல் செய்யவேண்டும். ஒருவேளை 2 ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்ய தவறும் பட்சத்தில் உரிய காரணம் இல்லாமல் குறைதீர் மன்றம் அதனை ஏற்றுக்கொள்ளாது.
நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனு எந்தவித முகாந்திரமும் இல்லாமல் தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் புகார்தாரர் எதிர்தரப்பிற்கு ரூபாய் பத்தாயிரத்திற்கு மிகாத நஷ்டஈடு கொடுக்க உத்தரவிடப்படும். மேலும், குறைதீர்மன்றம் அளிக்கும் தீர்ப்பு மேல் முறையீடு செய்யப்படாமலும் நிறைவேற்றப்படாமலும் இருக்கும் பட்சத்தில் குறைதீர் மன்ற அவமதிப்புக்காக ஒரு மாதத் திலிருந்து 3 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையும் ரூபாய் 2 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் அபராதமும் விதிக்க வழி செய்யப் பட்டுள்ளது. மேலும், இந்த நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986ஐ நடைமுறைப்படுத்துவதற்கான விதிகளும் இயற்றப்பட்டுள்ளது.
பாதிக்கப்படும் நுகர்வோர் அதற்கான தீர்வைப் பெற நியாயம் கேட்டு கேள்வி எழுப்பாத வரை, தவறு செய்தவர்கள் அந்தத் தவற் றினை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பே இல்லை! நுகர்வோரே ராஜா என்பது எழுத்தளவில் மட்டுமல்லாமல் அதற்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்றால், பாதிக்கப்பட்ட நுகர்வோர் இந்தச் சட்டத்தினை முழுமையாக பயன்படுத்தி அதற்கான தீர்வை பெறுவதன் மூலமே நிலை நாட்டப்படும். நுகர்வோரின் உரிமை மீறல் மனித உரிமை மீறலே!
No comments:
Post a Comment