Wednesday, December 13, 2017

மனுக்களை ஒருவர் தாமே நீதிமன்றத்தில் நேரிடையாக தாக்கல் செய்யலாம்.

 மனுக்களை ஒருவர் தாமே நீதிமன்றத்தில் நேரிடையாக தாக்கல் செய்யலாம்.

          நீதித்துறை நடுவர் மன்றம்
              திருவைகுண்டம்

                 Crmp. No - 25/2017

P. தனேஷ்
S /O  பரமசிவன்
2/2 தெற்கு மாடத் தெரு
திருவைகுண்டம்                   .....    மனுதாரர்

                                 Vs

காவல் ஆய்வாளர்,
திருவைகுண்டம்
காவல் நிலையம், புதுக்குடி... எதிர்மனுதார்

மனுதாரர் பக்கம் வணக்கமாக தாக்கல் செய்யப்படும் மனு கு. வி. மு. ச பிரிவு 200 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 166 ன்படி

நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். திருவைகுண்டம் வடக்கு தெருவில் வசித்து வரும் சுப்பையா மற்றும் அவரது நண்பர் கணேசன் ஆகியோருக்கும் எனக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக சிவில் வழக்கு நடந்து வருகிறது. இதனால் என்மீது காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்த மேற்படி இருவரும் 3.8.2017 ம் தேதி காலை சுமார் 10 மணிக்கு என் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த என்னை வழிமறித்து "ஏண்டா பொறம்போக்கு நாயே, நீ என்ன பெரிய மயிராடா, மரியாதையா கேஸை வாபஸ் வாங்கு, இல்லையென்றால் உன்னையும், உன் குடும்பத்தையும் வெட்டி கொன்று விடுவோம் என ஆபாசமாக பேசி எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள்.

இதனால் என் உயிருக்கும், என் குடும்பத்தார் உயிருக்கும், உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இது சம்பந்தமாக திருவைகுண்டம் காவல்நிலைய ஆய்வாளருக்கு பதிவு அஞ்சலில் நான் 3.8.2017 ம் தேதி எதிரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எனக்கும், என் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டு புகார் அனுப்பினேன். என்னுடைய புகார் கைது செய்தற்குரிய குற்றமாகும் (Cognizable Offence). ஆனால் திருவைகுண்டம் காவல்நிலைய ஆய்வாளர் என் புகார் மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை திருவைகுண்டம் காவல்நிலைய ஆய்வாளர் கு. வி. மு. ச பிரிவு 154 ன்படி செயல்படவில்லை. மேலும் உச்சநீதிமன்றம் W. P. NO - 68/2008 என்ற வழக்கில் FIR பதிவு செய்வது சம்மந்தமாக காவல்துறையினருக்கு வழங்கிய அறிவுறுத்தல்களை பின்பற்றி என் புகார் மனுவின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உச்சநீதிமன்ற உத்தரவுப்படி என் புகார் மனுவின் மீது FIR பதிவு செய்யாத திருவைகுண்டம் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 166 ன்படி திருவைகுண்டம் காவல்நிலைய ஆய்வாளர் குற்றம் புரிந்துள்ளார்.

எனவே சமூகம் நீதிமன்றத்தாரவர்கள் கருணை கூர்ந்து மேற்படி எதிர்மனுதார் மீது என் குற்றப் புகாரின் அடிப்படையில் FIR பதிவு செய்யாத காரணத்திற்காகவும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றாத காரணத்திற்காகவும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 166 ன்படி அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் படி வேண்டுகிறேன்.

நாள் - 10.8.2017                        புகார்தாரர்

இணைப்பு :

1. 3.8.2017 - தேதியிட்ட புகாரின் நகல்

2. எனது புகாரை எதிர்மனுதார் பெற்றுக் கொண்டதற்கான அஞ்சல் ஒப்புதல் அட்டை

3. FIR பதிவு செய்வது சம்மந்தமாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் நகல்

(குறிப்பு - மேற்படி உச்சநீதிமன்ற தீர்ப்பு - W. P. NO - 68/2008 தீர்ப்பு நாள் - 12.11.2013, Lalitha Kumari Vs Govt. Of UP & Others என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் படியும், மேற்படி தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் பிறப்பித்த நிலை ஆணை எண் (Standing Instruction) 58/2013, நாள் - 27.11.2013 ன்படி கைது செய்தற்குரிய குற்றங்களில், கு. வி. மு. ச பிரிவு 154 ன்படி காவல்துறையினர் FIR பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.)

No comments:

Post a Comment