Friday, December 22, 2017

வங்கிகளின் மீது புகார் அளிக்க வேண்டுமா?

வங்கிகளுக்கு எதிராகப் பதிவாகும் புகார்களின் எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் (2013-14) 21 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை முதலில் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்குத் தெரிவிக்க வேண்டும். அதன் பேரில் ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வங்கி குறைதீர்ப்பாயத்தின் கீழ்கண்ட முகவரியில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி குறைதீர்ப்பாயம் (ஆஃபீஸ் ஆஃப் பேங்கிங் ஆம்புட்ஸ்மேன்) தெரிவித்துள்ளது.

வங்கி தீர்ப்பாயம்(ஓம்பட்ஸ்மேன்) என்பது வங்கி சேவைகள் குறித்து வாடிக்கையாளர்கள் செய்யும் புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய ரிசர்வ் வங்கி அளிக்கும் சேவை. இந்த வங்கி தீர்ப்பாயம் 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இது திட்டம் ஒரு சட்ட ரீதியிலான அமைப்பாகும். இந்த அமைப்பு வங்கி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துகிறது. வங்கி வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் புகார்களை ஏற்று அவற்றை சரி செய்கிறது.

மத்திய ரிசர்வ் வங்கியால் நியமனம் செய்யப்பட்ட மூத்த அதிகாரிகள் இந்த அமைப்பில் இருக்கின்றனர். இவர்கள் வங்கி வாடிக்கையாளர்களின் புகார்களை ஏற்று அவர்களின் புகார்களை சரி செய்ய ஆவன செய்கின்றனர். இந்த அமைப்பு அனைத்து வர்த்தக வங்கிகள், கிராமப்புற வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் ஆகிய அனைத்து வகை வங்கிகளையும் கட்டுப்படுத்துகிறது.

கடந்த நிதியாண்டுக்கான ரிசர்வ் வங்கி குறைதீர்ப்பாயத் துறையின் ஆண்டறிக்கை சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அதில், வங்கி குறைதீர்ப்பாளர் (தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபர் தீவுகள்) யு.சிரஞ்சீவி கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் கூறியது:- கடந்த நிதியாண்டில் வங்கிகளுக்கு எதிராக தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபர் தீவுகளில் 8,775 புகார்கள் பதிவாகியுள்ளன. இது அதற்கு முந்தைய நிதியாண்டை விட 21 சதவீதம் அதிகமாகும். தேசிய அளவில் அதிக எண்ணிக்கையிலான புகார்கள் இங்குதான் பதிவாகியுளளன.
அதே வேளையில் தீர்ப்பாயத்தில் முடிவு காணப்படாமல் நிலுவையில் உள்ள புகார்களின் சதவீதம் 8.5 சதவீதத்திலிருந்து 2.50 சதவீதமாகக் குறைந்துள்ளது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மீதான புகார்கள் அதிகம்: கடந்த நிதியாண்டில் (2013-14) பாரத வங்கி மற்றும் பிற தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் மீதான புகார்கள் 62 சதவீதமாக இருந்தது. புதிதாகத் தொடங்கப்பட்ட தனியார் வங்கிகளின் மீதான புகார்கள் 19 சதவீதமாக உள்ளது. வங்கி குறைதீர்ப்பாயத்தின் சார்பில் ஒவ்வொரு காலாண்டுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக கிராமப்புறங்களில் இருந்து வரும் புகார்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. ஏ.டி.எம்.கார்டு புகார்கள் அதிகம்: பொதுவாக ஏ.டி.எம். கார்டுகள், கல்வி கடன்கள் தொடர்பான புகார்களே அதிகளவில் பதிவாகின்றன. கடந்த நிதியாண்டில் மட்டும் 66 சதவீத புகார்கள் ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்டுகள், கடன் வழங்கல் தொடர்பாக புகார் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார்

மேலும் புகார்களை எங்கு பதிவு செய்யலாம்? என்று கேட்ட போது வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை முதலில் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்குத் தெரிவிக்க வேண்டும். அதன் பேரில் ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வங்கி குறைதீர்ப்பாயத்தின் கீழ்கண்ட முகவரியில் மேல்முறையீடு செய்யலாம். வங்கி குறைதீர்ப்பாளர், வங்கி குறைதீர்ப்பாயம் ( ஆஃபிஸ் ஆஃப் தி பேங்கிங் ஆம்புட்ஸ்மேன்), இந்திய ரிசர்வ் வங்கி (2-வது தளம்), 16, ராஜாஜி சாலை, சென்னை-600 001 தொலைபேசி: 044 – 2539 5964, 2539 9170, 2539 9159, 2539 9158, மின்னஞ்சல்: 044 – 25395488 இ-மெயில் bochennai@rbi.org.in இணையதள முகவரி: http:rbi.org.ஆகியவற்றின் மூலம் புகார்களை பதிவு செய்யலாம்.

No comments:

Post a Comment