அரசு அலுவலகங்களில் புகார்/மனுவை கையளித்ததிற்கான ஒப்புதல் சான்று
ஒவ்வொரு மனு / புகாரினை அரசு அலுவலகத்தில் வழங்கும்போது, அதற்குரிய ஒப்புதல் சான்று வழங்கும் நடைமுறையினை பெரும்பாலான அரசு அலுவலகங்கள் நடைமுறைப்படுத்துவதில்லை.
அவ்வாறு நாம் வழங்கிய ஆதாரங்களுடன் கூடிய புகார் மற்றும் மனுக்களுக்கு அரசாணை எண் 99 & 114 ன் படி ஒப்புதல் ரசீது பெறவில்லையெனில் அல்லது அவர் வழங்க மறுத்தாரெனில், சம்பந்தப்பட்ட அரசு அலுவலக அதிகாரி அந்த புகாரின் / மனுக்களின் மீதோ நடவடிக்கை எடுத்து தீர்வு காணாதிருக்கும் பட்சத்தில் அந்த அதிகாரி மீது சட்ட நடவடிக்கை அல்லது மேலதிகாரியிடம் அந்த கீழ்நிலை அதிகாரி குறித்து ஆதாரத்துடன் புகார் அளிக்க வழிவகை இல்லாமல் போயிவிடும்.
மேலும் இதுகுறித்து தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட புகார் / மனு குறித்த நிலை பற்றிய கேள்வி கேட்க எழாத சூழல் உருவாகக்கூடும்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க...
1) ஒவ்வொரு புகாரின் / மனுக்களில் இறுதி பக்கத்தில் கீழ்கண்ட வார்த்தைகளை இணைத்து அந்த புகார்/மனுக்களை நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்
...........................................
...........................................
மதிப்பிற்குரிய அய்யா / அம்மா இம்மனுவினை பெற்று ஏற்றுக்கொண்டு இம்மனுவிற்கு
1. அரசு ஆணை எண் : 114 நாள் -02-08-2006
2. அரசு ஆணை எண் : 66 நாள் - 23-02-1983
3. அரசு ஆணை எண் : 80 நாள்- 13-05-1999
4. மத்திய அரசு ஆணை எண் : 13013/1/2006 (05.05.2006)
5. அரசு ஆணை எண் : 99 நாள்: 21-09-2015 மற்றும்
மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு எண் : W .P. NO.20527 OF 2014, dated 01-08-2014 ன் படி, ஒப்புதல் சான்று வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
...........................................
...........................................
2) புகார் / மனுக்களை வழங்கிய பின்னர் சம்பந்தப்பட்ட அரசு அலுவலக அதிகாரியிடம் துறை சார்ந்த ஒப்புதல் சான்று கேளுங்கள். அவர் வழங்க மறுத்தாரெனில், புகாரின் / மனுவின் நகலினை அவரிடம் காட்டி, இறுதி பக்கத்தில் "இப்புகாரினை / மனுவினை பெற்றுக்கொண்டேன்" என கைப்பட எழுதி அதில் அவரின் கையொப்பம் / தேதி மற்றும் அலுவலக முத்திரை இட்டு தருமாறு வலியுறுத்தி அதனை கைவசம் வைத்து கொள்ளுங்கள். மற்றும் அந்த கையொப்பம் / முத்திரையிடப்பட்ட புகார் / மனுவினை நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்
அல்லது,
கீழ்கண்ட பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையினரின் ஆணை (G.O 89) பக்கத்தினை நகல் எடுத்து வைத்துக்கொண்டு, அதில் ஒப்புதல் சான்றினை கேட்டு பெறுங்கள்.
மேற்கண்ட ஒப்புதல் பெறப்பட்ட மனுவின் / புகாரின் மீது 30-45 நாட்களில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரி தகுந்த நடவடிக்கை எடுக்காதிருக்கும் பட்சத்தில், நீங்கள் மேலதிகாரிகளிடம் முறையிட அல்லது சட்ட நடவடிக்கை எடுக்க மேற்கண்ட ஆதாரம் பக்கபலமாக பலனளிக்கும் விதத்தில் இருக்கும்.
*மேலதிக விபரங்களுக்கு இணைக்கப்பட்ட கோப்பினை பார்க்க*
No comments:
Post a Comment