தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம்
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் 1993-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறது. இவ்வாணையத்தில் மாநில மகளிர் ஆணையத் தலைவி மற்றும் 9 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மகளிர் ஆணையம் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கவும், பெண்களுக்கு சமத்துவம் வழங்கவும்,
பெண்களுக்கெதிரான அனைத்து வகை இன்னல்களிருந்து பாதுகாப்பினை உறுதி செய்யவும் மற்றும் குடும்பத்திலும், சமுதாயத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து பெண்களை பாதுகாப்பதற்கு தேவையான அதிகாரங்களைப் பெற்ற ஒரு சட்ட ரீதியான அமைப்பாகும். மேலும் மகளிர் ஆணையம் பெண்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை கண்டறிந்து அது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது. இவ்வாணையம் பெண்கள் சம்பந்தப்பட்ட சட்டங்கள் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆணையத்தின் குறிக்கோள்கள்
மகளிரின் நலனை உறுதி செய்து அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தல்.பாலினப்பாகுபாடு குறித்த விவகாரங்களை கவனித்தல்.பெண்களின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆணையத்தின் பரிந்துரையை அரசுக்கு அனுப்பி வைத்தல்.
மகளிர் ஆணையத்தின் செயல்பாடுகள்
இந்திய அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சட்ட பிரிவுகள் பாதுகாப்புகள் மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் குறித்தான விபரங்களை கவனித்தல்.பெண்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் பல்வேறு நிறுவனங்கள் மூலம் முறையாக செயல்படுத்தப்படாத போது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல்பெண்களுக்கு நீதி கிடைக்க தவறும் பட்சத்தில் தேவையான நீதியைப் பெறுவதற்கு உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளஅரசுக்கு பரிந்துரை செய்தல்.பெண்களின் உரிமைகள் மறுக்கப்படும் நிகழ்வுகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு உரிய அதிகாரம் பெற்ற அலுவலர்கள் மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல். பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கண்டுள்ளவாறு பாதுகாப்பிற்கான உத்திரவாதம் வழங்கப்படாத நிலையிலும், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண மகளிர் ஆணையத்தை நேரிடையாக அணுகலாம

No comments:
Post a Comment