Tuesday, November 28, 2017

இந்திய அரசியலமைப்புச் சட்டம்


இந்திய அரசியலமைப்பு முகவுரை


*  இந்திய ஜனநாயகத்திற்கு அடிப்படையான பண்புகளை விளக்கும் பகுதியாக முகவுரை (Preamble) அமைகிறது.


*  அமெரிக்க நாட்டின் அரசியலமைப்பைப் முக வுரை எனும் கொள்கையை இந்திய அரசியல மைப்பு வல்லுநர்கள் எடுத்துக் கொண்டனர்.


*  இந்திய அரசியலமைப்பிற்கு முகப்புரை வழங்கிய பெருமை ஜவஹர்லால் நேருவைச் சாரும்.


*  இந்திய அரசியலமைப்பின் திறவுக்கோல், "இந்திய அரசியலமைப்பின் இதயம்' என்று போற்றப்படுவது முகவுரைதான்.

*  இந்திய அரசியலமைப்பு முகவுரை இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே திருத்தப்பட்டுள்ளது.


*  1976-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட 42-வது சட்டத் திருத்தத்தின்படி முகவுரையில் சமதர்ம (Socialist), மதச்சார்பற்ற (Secular), ஒருமைப் பாடு (Integrity) எனும் மூன்று சொற்கள் சேர்க்கப்பட்டன.


இந்திய அரசும் அதன் எல்லைகளும்


*  இந்திய அரசியலமைப்பில் பகுதி-1, இந்திய அர சும் அதன் எல்லைகளும் பற்றி விளக்குகிறது.


*  இந்தியாவில் உள்ள மாநிலங்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆகும். மத்திய ஆட்சிப் பகுதி யான யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை மொத்தம் 6 ஆகும். ஒரு தேசிய தலைநகர் பகுதி (டெல்லி)யும் உள்ளன.


*  புதிய மாநிலங்களை உருவாக்கும் பாராளுமன்ற உரிமைகளை விவரிப்பது சட்டப்பிரிவு- 2


*  புதிய மாநிலத்தை உருவாக்குவது, பழைய மாநிலங்களைச் சுருக்குவது, எல்லைகளை மாற்று வது இவற்றை விவரிப்பது சட்டப்பிரிவு- 3


*  புதிய மாநிலங்களை உருவாக்கத் தேவையான சட்ட வழிமுறைகளைப் பற்றிப் பேசுவது சட்டப்பிரிவு- 4


* இந்தியாவில் மொழிவாரி மாநிலமாக, முதன்முதலாக அமைக்கப்பட்ட மாநிலம் ஆந்திரப்பிரதேசமாகும். இது 1953-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.


*  இந்தியாவின் 28-வது மாநிலம் ஜார்கண்ட்.


அடிப்படை உரிமைகள்


*  இந்திய அரசியலமைப்பு, தொடக்கத்தில் ஏழு அடிப்படை உரிமைகளைக் கொண்டிருந்தது.


*  1978-ல் 44-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி சொத்துரிமையானது அடிப் படை உரிமையிலிருந்து நீக்கம் செய்யப் பட்டதால், தற்போது ஆறு அடிப்படை உரிமைகள் உள்ளன.


*   1. சமத்துவ உரிமை (அரசியலமைப்பு பிரிவு 14-18):


*   2. சுதந்திரத்திற்கான உரிமை (அரசியலமைப்புப் பிரிவு 19-22)


*  3. சுரண்டலுக்கு எதிரான உரிமை (அரசிய லமைப்புப் பிரிவு 23-24):


*  4. சமயச் சுதந்திரத்திற்கான உரிமை (அரசிய லமைப்புப் பிரிவு 25-28):


*  5. பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் (அரசிய லமைப்புப் பிரிவு 29-30):


*  6. அரசியலமைப்பு தீர்வு வழிகளுக்கான உரிமை (அரசியலமைப்புப் பிரிவு - 32):



 இந்திய சட்டம்-அட்டவணை



இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 12 அட்டவணைகள் உண்டு. அவை

முதல் அட்டவணை - இந்திய எல்லைகளைப் பற்றியது.


2-வது அட்டவணை - சம்பளம் மற்றும் இதரப் படிகள் ( குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள்).

3- வது அட்டவணை - பதவிப் பிரமாணம், ரகசியக் காப்பு பிரமாணம்.

4 -வது அட்டவணை - மாநிலங்களவையின் பிரதிநிதித்துவம்.

5, 6-வது அட்டவணைகள் அட்டவணைப் பகுதிகளை நிர்வாகம் செய்தல்.

7 - வது அட்டவணை - பிராந்திய மொழிகள்.

9 - வது அட்டவணை - நில உச்சவரம்பு, ஜாமீன்தரி ஒழிப்பு.

10 - வது அட்டவணை - கட்சி தாவல்தடை , (52 - வது சட்டதிருத்தம்).

11 - வது அட்டவணை - பஞ்சாயத்து ராஜ் (73 - வது சட்டதிருத்தம்).

12 - வது அட்டவணை - நகர் பாலிகா (74 - வது சட்டதிருத்தம்).

இந்திய அரசியலமைப்புச் சட்டம்

பகுதி 1 (ஷரத்து 1-4) இந்திய யூனியன் பற்றியது. அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை போன்றவை.

பகுதி 2 (ஷரத்து 5-11) இந்திய குடியுரிமை பற்றியது.

பகுதி 3 (ஷரத்து 12-35) அடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள்.

பகுதி 4 (ஷரத்து 36-51) அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்.
பகுதி 5 ( ஷரத்து 51 A) அடிப்படை கடமைகள்.

பகுதி 6 (ஷரத்து 52- 151) மத்திய அரசமைப்பு அதாவது குடியரசு தலைவர், து. குடியரசு தலைவர், அமைச்சரவை, பாராளுமன்றம் அதன் அமைப்பு. உச்சநீதி மன்றம் அதன் அமைபு.

பகுதி 6( ஷரத்து 152-237) மாநில அரசமைப்பு, கவர்னர், மாநில அமைச்சரவை. மாநில சட்டமன்றம் / சட்ட மேலவை அதன் அமைப்பு உயர் நீதி மன்றம் அதன் அமைப்பு.

பகுதி 7 (ஷரத்து 238) அரசமைப்பு சட்டம் முதல் ஷெட்யூலில் உள்ள மாநிலங்கள் பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப் பட்டுள்ளது.

பகுதி 8 (ஷரத்து 239 -242) மத்திய யூனியன் பிரதேசம் குறித்து.

பகுதி 9 ( ஷரத்து 243) உள்ளாட்சி நிர்வாகம் இந்த ஷரத்தில் இருக்கும் உட் பிரிவுகள் ஏராளம்.

பகுதி 10 ஷரத்து 244 THE SCHEDULED AND TRIBAL AREAS.

பகுதி 11 (ஷரத்து 245-263) மத்திய மாநில அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான உறவு.

பகுதி 12 (ஷரத்து 264-300) அரசின் நிதி குறித்த ஷரத்துக்ள் நிதி / நிதியினைக் கையாளும் நெறிகள்.

பகுதி 12( ஷரத்து 301- 307) இந்திய நாட்டில் வணிகம் செய்யும் நடமுறைக்கான ஷரத்துகள்.

பகுதி 13( ஷரத்து 308-323) அரசுப் பணி.

பகுதி 14 (ஷரத்து 324ஏ மற்றும் 323 பி) மத்திய தீர்ப்பாயங்கள்.

பகுதி 15 (ஷரத்து 324-329) தேர்தல்கள், தேர்தல் கமிஷன்.

பகுதி 16 (ஷரத்து 330-342) ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்தியர் ஆகியோர் குறித்து.

பகுதி 17 (ஷரத்து 343-351) மொழி(சினிமா இல்ல) தேசிய மொழி, வட்டார மொழி, நீதி மன்றங்களில் மொழி.

பகுதி 18 (ஷரத்து 352-360) அவசர நிலைக்கானது(எமெர்ஜென்சி)

பகுதி 19 (ஷரத்து 361-367) இதர ( இதில் குடியரசு தலைவர், கவர்னர் இந்தப் பதவிக்கான சட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும் சில)

பகுதி 20 (ஷரத்து 368) இந்திய் அரசமைப்புச் சட்டம் திருத்தம் அதற்கான நடைமுறை.

பகுதி 21 (ஷரத்து 369-392) TEMPORARY, TRANSITIONAL AND SPECIAL PROVISIONS அதாவது சில நேரத்தில் மாநில அரசின் நிர்வாகப் பொறுப்பிலும் அதே நேரம் மத்திய அரசும் அந்தப் பொருளில் சட்டமியற்ற வழி செய்யும் concurrent list குறித்த நெறிகள்.

பகுதி 22 (ஷரத்து 392-395) SHORT TITLE, COMMENCEMENT, AUTHORITATIVE TEXT IN HINDI AND REPEALS

No comments:

Post a Comment