ஒரு சொத்தை நீதிமன்றத்தின் மூலம் ஏலத்தில் விற்கப்பட்ட பிறகு அந்த ஏல விற்பனையை ரத்து செய்வதற்கு எத்தனை நாட்களுக்குள் தீர்ப்புக் கடனாளி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டும்?
உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 21 விதிகள் 89 மற்றும் 92 மற்றும் காலவரையறைச் சட்டம் பிரிவு 127 ஆகியவற்றின் படி ஒரு சொத்து நீதிமன்ற ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் அந்த தீர்ப்புத் தொகையை, தீர்ப்புக் கடனாளி நீதிமன்றத்தில் வைப்பீடு செய்ய வேண்டும். அவ்வாறு வைப்பீடு செய்ய தவறினால் தீர்ப்பு கடனாளி ஏல விற்பனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிப்பதை தவிர நீதிமன்றத்திற்கு வேறு வழியில்லை. இதுகுறித்து உச்சநீதிமன்றம் " ராம் கரண் குப்தா Vs J. S. எக்ஸிம் லிமிடெட் (2012-6-CTC-SC-710)" என்ற வழக்கில் தெளிவாக கூறியுள்ளது.
உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 21 விதிகள் 89 மற்றும் 92, காலவரையறைச் சட்டம் பிரிவு 127 "ஆகியவற்றை பார்க்கும் பொழுது உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 21 விதி 89 ன் கீழ் மனுதாக்கல் செய்வதற்கோ, தேவையான தொகையை வைப்பீடு செய்வதற்கோ எந்த கால அளவையும் நிர்ணயிக்கவில்லை. ஆனால் காலவரையறைச் சட்டம் பிரிவு 127 ஆனது 60 நாட்களுக்குள் அந்த மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறுகிறது.
எனவே சட்டத்தின் படி நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அளவிற்குள் தீர்ப்புக் கடனாளி விற்பனைத் தொகையை நீதிமன்றத்தில் வைப்பீடு செய்ய தவறி விட்டால், உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 21 விதி 89 ன் கீழ் தீர்ப்பு கடனாளியால் ஏல விற்பனையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உத்திரவிடுவதை தவிர நீதிமன்றத்திற்கு வேறு வழியில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
C. A. NO - 4469/2014, DT - 11.4.2014
அன்னபூர்ணா Vs மல்லிகா அர்ஜுன் மற்றும் பலர்
2014-2-TLNJ-CIVIL-110

No comments:
Post a Comment