Tuesday, November 28, 2017

தகவல் அறியும் உரிமைச் சட்ட உத்தரவுகள்!!!

 தகவல் அறியும் உரிமைச் சட்ட உத்தரவுகள்!!!

தகவல் இனியும் உரிமைச் சட்டம் பற்றி பல சந்தேகங்கள் எழுப்பிருந்திர்கள்,
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி
தகவல்கள் கொடுக்க மறுக்கிறார்கள் என்ன செய்வது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.

பல நிலைகளில் இது போன்று குற்றச்சாட்டு எழுப்பப்படும் போது தொடரப்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரிசை படுத்திருந்திருக்கிேறன்.

# புகார் மனு தொடர்பான, அலுவலக & நடப்பு கோப்பு குறிப்பு வழங்க மறுத்ததால், சட்டப்பிரிவு 20 (1) & 20 (2)-ன் கீழ் விளக்கம்,*  TNSIC, வழக்கு எண். 7483 / விசாரணை / 2010, 14.08.2010

# குற்றப்பத்திரிகை நகல் கேட்டால், அதில் எவற்றைக் கழிக்க வேண்டுமோ அவற்றைக் கழித்து மீதமுள்ள விவரங்கள் வழங்க வேண்டும்.குற்றப்பத்திரிகை வெளியிடக்கூடிய தகவல்
( மத்திய தகவல் ஆணையம் CIC/DS/A/2013/001754- SA நாள்:03-11-2014 )

# பொதுதகவல் அலுவலர் மேல்முறையீட்டு அலுவலரின் ஆணைக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் பொதுதகவல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கலாம். ( மத்திய தகவல் ஆணையம் CIC/YA/C/2014/000028,000037,000258 மற்றும் 000259 நாள்:22-07-2015)

# பொதுதகவல் அலுவலர், மனுதாரர் கோரிய தகலல்தானா என்பதனை நன்கு உறுதி செய்தபின் அதனை மனுதாரருக்கு அனுப்ப வேண்டும்.தவறுதலான தகவலை அனுப்பினால், பொதுதகவல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கலாம். ( மத்திய தகவல் ஆணையம் CIC /MP/CI 2014/000138 நாள்:08-04-2015)

# அலுவலரின் நியமன விவரம் மற்றும் நியமனம் செய்த காலம் ( Place of Postings and Period of Posting)  விவரம் வழங்க வேண்டும்.
( மத்திய தகவல் ஆணையம் CIC /AD/A/2013/00668/VS/07912 நாள்: 15-10-2014)

# மனுதாரர் ஆணையத்திற்கு பொதுதகவல் அலுவலர் மீது புகார் மனு சமர்ப்பித்தால், மத்திய தகவல் ஆணையம் அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து விசாரித்து முடிவு எடுக்க வேண்டும்.அந்த மனுவினை பொதுதகவல் அலுவலருக்கே உரிய தகவல் வழங்கும்படி அறிவுரை வழங்கி அனுப்பக் கூடாது.
( டெல்லி உயர்நீதிமன்றம் WP(C) No.6755/2012 நாள்:28-10-2013) .

# பொதுத்தகவல் அலுவலர்,  மனுமீது நடவடிக்கை எடுக்காமல், முதல் மேல்முறையீட்டு அலுவலருக்கு மனுதாரர் விண்ணப்பித்து அதன் அடிப்படையில் மேல்முறையீட்டு அலுவலர் உத்தரவின் பேரில் தகவலை பொதுத்தகவல் அலுவலர் தகவல் வழங்கினால், பொதுத்தகவல் அலுவலருக்கு அபராதம் விதிக்கலாம்.
( மும்பை உயர்நீதிமன்ற கோவா அமர்வு WP No.304/2011 நாள்:09-06-2011 ) .

# தமிழ்நாடு தகவல் ஆணையம் பொதுதகவல் அலுவலர் மற்றும் மனுதாரருக்கு சம்மன் அனுப்பும்போது குறைந்தது 7 நாட்களுக்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும்.
( தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறை அரசாணை எண்:137 நாள்: 03-09-2012)  .

# ஒழுங்கு நடவடிக்கை எடுத்த விவரத்தை பாதிக்கப்பட்டவருக்கு பிரிவு 8(1)(e),(g) மற்றும் ( j ) களை சுட்டிக்காட்டி வழங்காமல் இருக்கக்கூடாது.
( டெல்லி உயர்நீதிமன்றம் WP(C) 9355/2009 & CM No.7144/2009 ) .

# முதல் மேல்முறையீட்டு அலுவலர் மனுதாரரை அழைத்து விசாரிக்காமல் முடிவு எடுப்பது தவறு.
( மத்திய தகவல் ஆணையம் : ( CIC/SA/A/2014/000254 நாள்:12.11.2015 ) .

No comments:

Post a Comment