Tuesday, November 28, 2017

தகவல் சட்டத்தில் மட்டும் தான் தகவல் கேட்க முடியுமா ,இல்லை இந்திய சாட்சிய சட்டம் 1872 .,

தகவல் சட்டத்தில் மட்டும் தான் தகவல் கேட்க முடியுமா ,இல்லை தகவல் சட்டம் இயற்றப்படும் முன்பே சாட்சிய சட்டத்தில் பொது ஆவணங்களை கேட்கவும் / ஆய்வும் செய்யவும் மக்களுக்கு உரிமை தந்துள்ளது.

இந்திய சாட்சிய சட்டம் 1872 .,

சட்டப்பிரிவு 74 என்பது பொது ஆவணங்கள், எவையெல்லாம் பொது ஆவணங்கள் என்பதை தெளிவாக இச்சட்டப்பிரிவு நமக்கு வலியுறுத்துகிறது.

சட்டப்பிரிவு 75 என்பது தனியார் ஆவணங்கள்,எவையெல்லாம் தனியார் ஆவணங்கள் என்பதை தெளிவாக இச்சட்டப்பிரிவு நமக்கு வலியுறுத்துகிறது.

சட்டப்பிரிவு 76 என்பது ஒரு பொது ஊழியர் வசம் உள்ள பொது ஆவணங்களை ஆய்வு செய்யவும் / அதனை சான்றொப்பமிட்ட ஆவண நகலாக சட்டத்தில் வரையறை செய்துள்ள கட்டணம் செலுத்தி பெற பொது மக்களுக்கு பிரத்தேகமான உரிமை அளித்துள்ளது.சான்றோப்பம் இட்டு அளிக்க இயலாமல் போனால் அந்த ஆவணங்களில் கடைசி இடத்தில் உண்மை நகல் என்று கையொப்பம் இட்டு அதனை பொது ஊழியர் வழங்க வேண்டும்.

####இந்த சட்டத்தில் ஆய்வும் மேற்கொள்ளலாம்### என்பது சிறப்பம்சம்.

எவ்வாறு இந்த சட்டம் மூலம் ஆவணங்களை பெறலாம்.
இந்த சட்டத்தில் விண்ணப்பம் எழுதி உங்களுக்கு தேவையான ஆவணங்களை வரிசைப்படுத்தி,விண்ணப்பத்தில் மேல் புறம் முதல் பக்கத்தில் தலைப்புக்கு கீழ் குறைந்தது இரண்டு ரூபாய் மதிப்புள்ள நீதிமன்ற கட்டண வில்லை ஒட்ட வேண்டும்.
இந்த விண்ணப்பத்தை உங்களுக்கு வேண்டுமென நினைக்கிற ஆவணங்கள் உள்ள அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.30 நாட்கள் கடந்த விட்ட நிலையில் உங்களுக்கு எவ்வித பதிலும் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து வரவில்லை என்றால் நினைவூட்டல் கடிதம் ஒன்றை அனுப்ப வேண்டும்.அதன் பிறகு 15 நாட்கள் ஆன பிறகும் உங்களுக்கு பதில் வரவில்லை என்றால் சட்டப்படியான அறிவிப்பை அனுப்ப வேண்டும் ,அதன் பிறகு 15 நாட்கள் கடந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர செய்ய வேண்டும்.குற்ற விசாரணை முறை சட்டம் 1973 சட்டப்பிரிவு 2(4) இன் கீழ் பிராது / பெட்டிஷனை நீதிபதி அவர்களிடம் கொடுக்கலாம்,இல்லையெனில் சட்டப்பிரிவு 190(1)இ இன் கீழ் தபால் மூலமாகவும் முறையீடு செய்யலாம்.இல்லையெனில் சட்டப்பிரிவு 200 இன் கீழ் தனி நபர் புகார் மூலம் வழக்கு தொடுக்கலாம்.

கால அவகாசம் என்பது இந்த சட்டத்தில் முக்கியம் வாய்ந்ததாக நிலைக்கிறது.

கால அவகாசத்தில் சிக்கல் ஏற்ப்பட்டால் ,அது சட்ட சிக்கலில் தான் முடியும்.ஆதலால் தான் உங்களுக்கு ஒரு சட்டம் நன்றாக தெரிந்தால் மட்டுமே அந்த சட்டத்தை பயன்படுத்துங்கள். இல்லையெனில் ,சட்டம் என்றுமே சிக்கலாக தான் தெரியும்.

No comments:

Post a Comment