Tuesday, November 28, 2017

IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும்.


CRPC  என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம் ஆகும்.

1,  ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)

2,  நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை.  IPC-217

3,  நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம்.  CRPC 404

4,  அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166

5,  எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.

6,  சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம்.  Article 19(1) , CRPC 303,302(2)

7,  வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.

8,  இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ்
எவர் ஒருவரும் பார்வையிடலாம்.

9,  இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43

10,   ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.

11,  காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம்.  செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)

12,  கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 50 லிருந்து 100 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும்.  மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.

13,  தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற செலவு ரூபாய் 25 மட்டுமே. அதற்காக RIOffice-லும் VAO ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.

14,  காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)

15,  அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று Article 21(14)

16. புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் Article 32(8)

17,  பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம்.

18,  பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.

19,  முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267

20,  அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403

21, குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.

22,  தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96

23,  பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை.  IPC-295

24,  மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295

25,  ஆள்மாராட்டம் செய்து ஏமாற்றுதல்.  3 ஆண்டு சிறை IPC-419

26,  ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. IPC-468.

27,  சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை IPC-484

28,  கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. IPC-494

29,  முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை.  IPC-495

30,  IPC-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம்.
நீதிபதியையும் கூட உரிமைச் சட்டம்

மனிதஉரிமைகள் பாதுகாப்புச் சட்டம்,1993 •

தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 .

இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986.


இதர பாதுகாப்புச சட்டங்கள்

மிசா • தடா •பொடா


மாநிலச் சட்டங்கள்

தமிழ்நாடு குண்டர் தடுப்புச் சட்டம்


குற்றங்களின் வகைப்பாடு


இந்திய தண்டனைச் சட்டம், 1860, கீழ்க்கண்ட குற்றங்களை உள்ளடக்கியுள்ளது.அவை பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன:


பகுதி 1 முதல் 5 :                           அறிமுகம்

பகுதி 6 முதல் 52 :                         பொது விளக்கங்கள்

பகுதி 53 முதல் 75 :                      தண்டனைகள்

பகுதி 76 முதல் 106 :                    தனியார் பாதுகாப்பு உரிமைகளின் பொது விதிவிலக்குகள்

பகுதி 107 முதல் 120 :                  உடந்தை

பகுதி 120எ முதல் 120பி :        குற்றவியல் சதி

பகுதி 131 முதல் 140 :                  இராணுவம் கடற்படை மற்றும் விமானப்படை தொடர்பான
                         குற்றங்கள்

பகுதி 141 முதல் 160 :                  பொதுமக்களின் அமைதிக்கு எதிரான குற்றங்கள்

பகுதி 161 முதல் 171 :                  அரசாங்க ஊழியர்கள் தொடர்பான குற்றங்கள்

பகுதி 172 முதல் 190 :                  அரசாங்க ஊழியர்களின் சட்டப்பூர்வ ஆணையம் தொடர்பான அவமதிப்புகள்

பகுதி 191 முதல் 229 :                  பொது நீதிக்கு எதிரான பொய்யான ஆதாரங்கள் மற்றும்
                         குற்றங்கள்

பகுதி 230 முதல் 263 :                  நாணயம் மற்றும் அரசு அஞ்சல்தலைகள் தொடர்பான
                         குற்றங்கள்

பகுதி 264 முதல் 267 :                  எடை மற்றும் அளவுகள் தொடர்பான குற்றங்கள்

பகுதி 268 முதல் 294 :                  பொது சுகாதாரம்,பாதுகாப்பு, வசதி, நாகரிகம் மற்றும் ஒழுக்கம் பாதிக்கும் குற்றங்கள்

பகுதி 295 முதல் 298 :                  மதம் தொடர்பான குற்றங்கள்


பகுதி 299 முதல் 377 :               மனித உடல் பாதிக்கும் குற்றங்கள் பற்றி


1.  கொலை, குற்றத்துக்குரிய படுகொலை (பிரிவு 299 முதல் 311) உள்ளிட்ட வாழ்க்கை  

      பாதிக்கச்செய்கின்ற குற்றங்கள் பற்றி

   2. கருச்சிதைவு தொடர்பான குற்றங்கள்(பிரிவு312 முதல் 318)

   3. காயப்படுத்துதல் (பிரிவு 319 முதல் 338)

   4. தவறான கட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை (பிரிவு 339 348 போன்ற)

   5. குற்றவியல் தாக்குதல் (பிரிவு 349 முதல் 358)

   6. கடத்தல்,அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய தொழில் செய்ய வலியுறுத்தல்

      (பிரிவு 359 முதல் 374)

   7. கற்பழிப்பு  உள்ளிட்ட பாலியல் குற்றங்கள்(பிரிவு 375 முதல் 376)

   8. செயற்கை குற்றங்கள் என்ற (பிரிவு 377) ||


பகுதி 378 முதல் 462 :  சொத்து தொடர்பான குற்றங்கள் பற்றி


      1. திருட்டு (பிரிவு 378 முதல் 382)

   2. பலாத்காரம் (பிரிவு 383 முதல் 389)

   3. திருட்டு மற்றும் கொள்ளை என்ற (பிரிவு 390முதல் 402)

   4. சொத்து குற்றவியல் மோசடி செய்ததற்காக (பிரிவு 403 முதல் 404)

   5. குற்றவியல் நம்பிக்கை துரோகம் (பிரிவு 405 409)

   6. திருடிய சொத்து பெறுகிறார் (பிரிவு 410முதல் 414)

   7. ஏமாற்றுதல் (பிரிவு 415 முதல் 420)

   8. மோசடி செயல்கள் மற்றும் சொத்து அபகரித்தல் (பிரிவு 421 முதல் 424)

   9. குறும்புகள் (பிரிவு 425 முதல் 440)

  10. குற்ற மீறல் பற்றிய (பிரிவு 441 முதல் 462) ||


பகுதி 463 முதல் 489 :  ஆவணங்கள் மற்றும் சொத்து தொடர்பான குற்றங்கள் பற்றி


   1. சொத்து (பிரிவு 478 முதல் 489)

   2. நாணய குறிப்புகள் மற்றும் வங்கி அறிக்கை (பிரிவு 489எ வேண்டும் 489இ)


பகுதி 490 முதல் 492  :சேவை ஒப்பந்தங்கள் குறித்த சட்ட மீறல்கள்


பகுதி 498எ                        :கணவன் அல்லது கணவனின் உறவினரால் துன்புறுத்தல்


பகுதி 499 முதல் 502 :மான நஷ்ட வழக்குகள்


பகுதி 503 முதல் 510  :சட்ட விரோத மிரட்டல்,அவமதிப்பு குறித்து


பகுதி 511                            :குற்றம் செய்ய முயல்வது


இந்திய தண்டனைச் சட்டத்தின் 320ஆவது பிரிவு(I.P.C 320) கடுங்காயத்தை அல்லது கொடுங்காயத்தை (grievous hurt) வரையறுக்கிறது.


கீழ்க்கண்ட எட்டுள் ஏதேனும் ஒன்றோ அல்லது பலவோ இருப்பின் அது கடுங்காயமாகும்.


1. ஆண்மையிழக்கச் செய்தல் (Emasculation)

2. ஏதேனும் ஒரு கண்ணின் பார்வையை நிரந்தரமாக இழக்கச் செய்தல்

3. ஏதேனும் ஒரு செவியின் கேட்கும் தன்மையை நிரந்தரமாக இழக்கச் செய்தல்

4. ஏதேனும் ஓர் உடல் உறுப்பையோ அல்லது மூட்டுஇணைப்பையோ இழக்கச் செய்தல்

5. ஏதேனும் ஓர் உடல் உறுப்பையோ அல்லது மூட்டு இணைப்பையோ சிதைத்தல் அல்து
  வலுவிழக்கச் செய்தல்

6. தலை, முகம் ஆகியவற்றை உருக்குலைத்தல்

7. பல், எலும்பு ஆகியவற்றில் முறிவு ஏற்படும் படியோ அல்லது அவை
  விலகிப்போகும்படியோ செய்தல்

8. உயிருக்கே ஆபத்து , இருபது நாட்களுக்கும் மேலாக வலி அல்லது அன்றாடக்
  கடமைகளைச் செய்ய முடியாமல் முடக்குதல் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை
  ஏற்படுத்தும் வகையில் காயமுண்டாக்குதல்


சீர்திருத்தங்கள் :


1. பிரிவு 309 தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்தவர்களை தண்டனை  வழங்குகிறது. மாறாக பொருத்தமான ஆலோசனை வழங்குவதே சிறந்தது என்பதே பலரின் கருத்து.

2. பிரிவு 497ன் கீழ் மற்றொரு நபர்கள் மனைவியுடன் ஒப்புதலுள்ள உடலுறவு வைத்துக்கொள்ளும் ஆண்களை தண்டிக்கிறது.

3.  இ. பி கோ. 377 : ஆண்கள், பெண்கள் அல்லது மிருகங்களுடன், யாரேனும் சுயமாக(கட்டாயப்படுத்தப்படாமல்) இயற்கைக்குப் புறம்பான பாலுறவு கொண்டால், அவருக்கு பத்தாண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது ஆயுள் சிறை தண்டனையோ விதிக்கலாம். அவருக்கு அபராதமும் விதிக்கலாம்.


பிரிவு 377 இந்தியாவில் பாலியல் சிறுபான்மையினரின் நியாயமான உரிமைகள் எதிராக பயன்படுத்தப்பட்டு வந்தன. இப்பகுதிஎயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டை கையாள்வதில் மிக பெரிய தடையாக இருந்து வந்தது. ஆனால் ஜூலை 2,2009 அன்று தில்லி உயர் நீதிமன்றம் இப்பகுதியில் ஒரு முற்போக்கான விளக்கம் கொடுத்தது.இந்த பிரிவில் இரண்டு ஆண்கள் இடையே பரஸ்பர ஒப்புதலுள்ள பாலியல் உடலுறவு சட்டம் தண்டிக்க பயன்படுத்த முடியாது என்றது.


இந்தியாவிலும் 377 ஆவது பிரிவை விலக்கிக் கொள்ள ஓரினச் சேர்க்கையாளர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். 2001 ஆம் ஆண்டு நாஸ் ஃபவுண்டேஷன் என்ற பொது நல அமைப்பு டெல்லிஉயர் நீதிமன்றத்தில் இதற்காக பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. 2003 இல் அந்த மனுவை தாக்கல் செய்ய நாஸுக்கு உரிமையில்லை எனக் கூறி டெல்லி உயர் நீதி மன்றம் அதைத் தள்ளுபடி செய்தது.


பின்னர் இந்திய உச்ச நீதிமன்றத்தின்பரிந்துரையின் பேரில் மீண்டும் 2008 இல் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கைப் பொறுத்த மட்டில் இந்திய அரசாங்கத்தின் நிலை முரண்பாடுகள் நிறைந்ததாக இருந்தது. அமைச்சர் அன்புமணி ராமதாசின் கீழ் செயல்பட்ட மத்திய சுகாதார அமைச்சகம் 377 சட்டப்பிரிவினை நீக்குவதற்கு ஆதரவாகவும், சிவராஜ் பாட்டிலின்பொறுப்பிலிருந்த உள்துறை அமைச்சகம்எதிராகவும் நிலையெடுத்தன. 14 ஜூலை 2009 இல் இந்த மனுவின் மீது இறுதி தீர்ப்பளிக்கப்பட்டது,நீதிபதி அஜீத் பிரகாஷ் ஷா மற்றும் நீதிபதி முரளீதர்ஆகியோர் கொண்ட இரு நபர் பெஞ்சு, 377 பிரிவின் சில அம்சங்கள் இந்திய அரசியலமைப்பில் இந்திய அரசியலமைப்பில் உள்ள சில அடிப்படை உரிமைகளை மறுப்பதாக உள்ளதால், அப்பிரிவு 18வயதுக்கு மேற்பட்ட ஒப்புதலோடு பாலுறவு கொள்பவருக்கு பொருந்தாது என்று தீர்ப்பளித்தது. ஆனால் 18 வயதுக்கு உட்பட்டோருக்கும்,ஒப்புதலின்றி வன்புணருவோருக்கும் இது பொருந்தும் என்றும் நீதிபதிகள் கூறினர். தீர்ப்பிர்க்கேற்றவாறு சட்டத்தை திருத்த இந்தியநாடாளுமன்றத்திற்கு பரிந்துரைத்தனர். இத்தீர்ப்பு ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகளின் நல உரிமை அமைப்புகளாலும், எய்ட்சு நோய் கட்டுப்பாட்டு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்களாலும் வரவேற்கப்பட்டது.


இந்து, இஸ்லாமிய, கிருத்தவ மதத்தலைவர்களால் கடும் கண்டனத்துக்குள்ளானது. இந்திய அரசு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய மறுத்து விட்டது. தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து மத அமைப்புகள் செய்த மேல் முறையீட்டு மனு, இந்தியஉச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

No comments:

Post a Comment