Wednesday, November 29, 2017

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆண்களும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம்.


கர்நாடகா உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு :

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆண்களும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியுமா? என்பது குறித்து உச்சநீதிமன்றம் "ஹிரால் P. ஹர்சோனா Vs குஷம் நரோட்டாம் தாஸ் ஹர்சோரா (2016-10-SCC-165)" என்ற வழக்கில் பரிசீலித்துள்ளது.

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 2(Q) விலுள்ள ஒரு பகுதி இந்திய அரசியலமைப்புச் சட்டம் கட்டளை 14 ல் கூறப்பட்டுள்ளவற்றிற்கு முரணானது என்று குறிப்பிட்டு பிரிவு 2(Q) இல் இருந்த வயதுடைய ஆண் (Adult Male) என்கிற வார்த்தையை நீக்கியுள்ளது. வயது வந்த ஆண் என்கிற வார்த்தையை நீக்கிவிட்டு அந்தப் பிரிவினை படித்துப் பார்த்தால் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் ஆண் அல்லது பெண் ஆகிய இருவரும் அந்த சட்டத்தின் மூலம் நிவாரணம் பெறலாம் என்பது தெரியவரும்.

எனவே குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம், பெண்களுக்கு மட்டும் உரித்தான சட்டம் இல்லை. அந்த சட்டத்தின் மூலம் ஆண்களும் மனுத்தாக்கல் செய்து நிவாரணங்களை பெறலாம் என கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

Criminal Petition No - 2351/2017

Dt - 18.4.2017

முகம்மது ஜாகீர் Vs ஷபானா மற்றுமொருவர்

2017-2-CRIMES-680

No comments:

Post a Comment