Wednesday, November 29, 2017

கேவியேட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில்

கேவியேட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் இடைக்கால உத்தரவுகளை விசாரணை நீதிமன்றம் பிறப்பிக்க ஏதேனும் தடை உள்ளதா?


உ. வி. மு. ச பிரிவு 148-A ன் கீழ் முன்னெச்சரிக்கை மனுத்தாக்கல் செய்வது, அந்த வழக்கின் பிரதிவாதிகளுக்கு அறிவிப்பு ஏதும் கொடுக்காமல் இடைக்கால உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்க கூடாது என்பதற்காகத் தானே தவிர, ஒரு முன்னெச்சரிக்கை மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்ற ஒரே காரணத்திற்காக நீதிமன்றம் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்பதற்காக அல்ல. நீதிமன்றம் தனது உளத்தேர்வு அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு கேவியேட் மனு ஒரு தடையை ஏற்படுத்தாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRP. NO - 2925&2926/2015, DT - 22.7.2015

J. B. மல்கோத்ரா மற்றும் பலர் Vs சங்கர் மோகன் மற்றும் பலர்

2015-2-MWN-CIVIL-708

No comments:

Post a Comment