உச்சநீதிமன்றம் "இராம்பிரகாஷ் Vs அரியானா மாநில அரசு (AIR-1978-SC-1282)" என்ற வழக்கில், ஒரு வழக்கில் கைப்பற்றப்பட்ட பொருட்களை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 457 ன் கீழ் திரும்ப ஒப்படைப்பது நீதியின் பால் செயல்படுத்த வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்று தீர்ப்பு கூறியுள்ளது.
அதேபோல் டெல்லி உயர்நீதிமன்றம், CRL. M. C. NO - 4485/2013, மற்றும் CRL. M. A. NO - 16055/2013 - Manu/De/2131/2014 =2014-DLT-646" என்ற வழக்கில் பத்தி 59 முதல் 64 வரையில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளது.
அதேபோல் டெல்லி உயர்நீதிமன்றம், CRL. M. C. NO - 4485/2013, மற்றும் CRL. M. A. NO - 16055/2013 - Manu/De/2131/2014 =2014-DLT-646" என்ற வழக்கில் பத்தி 59 முதல் 64 வரையில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளது.
59. யாருடைய வீட்டிலிருந்து திருடப்பட்டதாகவோ, கொள்ளையடிக்கப்பட்டதாகவோ குறிப்பிட்டு கைப்பற்றப்பட்ட மதிப்புமிக்க பொருட்களை, அந்த பொருட்களுக்கு சட்டப்படி உரிமை கோருகிற நபருக்கு நீதிமன்றம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். அந்த பொருட்கள் குறித்து விரிவான அறிக்கை தயார் செய்வதோடு, அவற்றை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, ஒரு பிணையப் பத்திரத்தையும் பெற்றுக் கொண்டு, அந்த பொருட்களை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
60. அந்த பொருட்களை புகைப்படமாக எடுத்ததற்கு பிறகு அந்த புகைப்படத்தில் புகார்தாரர், எதிரி மற்றும் எந்த நபரிடம் ஒப்படைக்கப்படுகிறதோ ஆகியோர்களின் கையொப்பங்களையும் அந்த புகைப்படத்தில் பெற வேண்டும். தேவைப்பட்டால் அரசு அங்கீகாரம் பெற்ற தங்க நகை மதிப்பீட்டாளரிடமிருந்து அந்த நகை ஆபரணங்கள் குறித்த மதிப்பீட்டை நீதிமன்றம் பெறலாம்.
61. அந்த வழக்கு விசாரணையின் போது ஏற்கனவே திருப்பி ஒப்படைக்கப்பட்ட மதிப்பு மிக்க பொருட்களை மீண்டும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் படி வற்புறுத்தாமல் புகைப்படம் மற்றும் அந்த மதிப்புமிக்க பொருட்கள் குறித்த விவரக் குறிப்பு ஆகியவை குறித்து சாட்சி விசாரணையின் மூலம் அந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
62. அந்த பொருட்கள் புகார்தாரர் அல்லது அந்த பொருட்கள் யாரிடமிருந்து கைப்பற்றப்பட்டதோ அந்த நபர் யாரும் அந்த பொருட்களுக்கு உரிமை கோராத நிலையில், அவற்றை பெட்டகத்தில் வைத்திருக்கும் படி நீதிமன்றம் உத்தரவிடலாம்.
63. ஒரு வழக்கில் மேற்கொண்டு புலன் விசாரணை செய்வதற்கு அல்லது அடையாளம் காட்டப்படுவதற்கு அந்த பொருட்கள் தேவைப்படுமேயானால், அவற்றை மீண்டும் புலன் விசாரணை அதிகாரியிடம் நீதிமன்றம் ஒப்படைக்கலாம். இருந்தாலும் அந்த பொருட்களை புலன் விசாரணைக்காக மற்றும் அடையாளம் காண்பதற்காக நீண்ட நாட்கள் புலன் விசாரணை அதிகாரி அவருடைய பாதுகாப்பில் வைத்திருக்க அனுமதிக்கக்கூடாது.
64. அந்த பொருட்கள் காவல்துறையினரின் பாதுகாப்பில் வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அந்த பொருட்கள் குறித்து ஒரு விபரக் குறிப்பினை தயாரித்ததற்கு பிறகு அவற்றை ஒரு பெட்டகத்தில் வைக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.
அதேபோல் சென்னை உயர்நீதிமன்றம் "B. லலித்சந்த் நாடார் Vs மாநில அரசு (1990-2-MWN-CRL-23)" என்ற வழக்கில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 451 ன் கீழ் பொருட்களை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தாலும் அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட அந்த பொருட்களுக்கு அவர் உரிமையாளராக இருந்தாலும், அந்த பொருட்களை நீதிமன்றத்தின் பிரதிநிதி என்கிற வகையில் அவரிடம் அவருடைய பாதுகாப்பில் வைத்திருக்கும்படி இடைக்காலமாக ஒப்படைக்கப்பட்டுள்ளதே தவிர அந்த பொருட்களின் மீது அவருக்கு தனிப்பட்ட எந்த உரிமையும் கிடையாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
எனவே பொருட்களை அதன் உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்கும் போது நீதிமன்றங்கள் கு. வி. மு. ச பிரிவுகள் 451 மற்றும் 457 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள சட்ட நெறிமுறைகளை கருத்தில் கொண்டு நியாயமான, தேவையான, நடைமுறைகடுத்தக்கூடிய நிபந்தனைகளை மட்டுமே விதித்து உத்தரவிட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது
.
CRL. RC. NO - 6/2016, DT - 11.6.2016
(2016-2-MLJ-CRL-98)
CRL. RC. NO - 6/2016, DT - 11.6.2016
(2016-2-MLJ-CRL-98)
No comments:
Post a Comment