Tuesday, November 28, 2017

பாகப்பிரிவினை வழக்கு திருத்தம் செய்ய தீர்வு

பாகப்பிரிவினை வழக்கு

                                             CPC - Order 6 Rule 17 - பாகப்பிரிவினை வழக்கு - ஒரு பாகம் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரதிவாதி, மேலும் சில சொத்துக்களை வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கூறி வழக்குரையை (Plaint) திருத்தம் செய்ய மனுதாக்கல் செய்ய முடியும். வழக்குரையை (Plaint) திருத்தம் செய்ய வேண்டும் என்று பிரதிவாதி கோருவதற்கு சட்டத்தில் இடமில்லை என்று கூறி விசாரணை நீதிமன்றங்கள் பிரதிவாதியின் மனுவை தள்ளுபடி செய்வது தவறாகும். வழக்குரையில் திருத்தம் செய்ய பிரதிவாதி மனுத்தாக்கல் செய்ய முடியுமா? என்று பார்க்கும் போது, இதுபோன்ற வினாவோடு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்குகளில் இரண்டு வேறு வகையான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

                           Ramasamy Vs P Marappan (2005-3-MLJ-663) என்ற வழக்கில் நீதிபதி R. பானுமதி அவர்கள் CPC, Order 6 Rule 17 ன்படி தன்னுடைய வழக்குரை அல்லது எதிருரையில் மட்டுமே ஒருவர் திருத்தம் செய்ய முடியும். வாதி தாக்கல் செய்துள்ள வழக்குரையில் மேலும் சில சொத்துக்களை சேர்க்கும் படி பிரதிவாதி கட்டாயப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார். அதேபோல் மற்றொரு வழக்கில் நீதிபதி R. S. ராமநாதன், பாகம் கோரி தாக்கல் செய்யும் வழக்கில் பிரதிவாதி வழக்குரையை திருத்தம் செய்ய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியும் எனவும் விடுபட்ட சொத்துக்களை அத்திருத்தத்தின் மூலம் வழக்குரையில் சேர்க்க முடியும் என்று கூறியுள்ளார்.
   
                                     மேலும் வாதி, பிரதிவாதிகளுக்கிடையே ஒரு முழுமையான தீர்வு ஏற்படுவதற்காகவும், மேலும் புதிய வழக்குகள் ஏற்படாமல் தவிர்ப்பதற்காகவும் பிரதிவாதி தாக்கல் செய்த மனுவை அனுமதிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

 "ரேவஜிதா பில்டர்ஸ் Vs நாராயணசாமி (2009- 10-SCC-84) என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 6 விதி 17ன் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் குறித்து ஆங்கில மற்றும் இந்திய வழக்குகளின் அடிப்படையில் அலசி சில அடிப்படை விதிகளை வகுத்து தீர்ப்பு கூறியுள்ளது. அந்த தீர்ப்பை கீழமை நீதிமன்றங்கள் Order 6 Rule 17 மனுக்களை விசாரிக்கும் போது கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

"வித்யாபட் Vs பத்மலதா (2009-2-SCC-409) என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் வழக்குரையில் திருத்தம் கோரி தாக்கல் செய்யப்படும் மனுவானது வாதி, பிரதிவாதிக்கிடையே உள்ள பிரச்சினையை முழுமையாக தீர்க்கும் பட்சத்தில் அத்தகைய மனுக்களை அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

அதேபோல் B. K. Narayanapillai Vs Parameshwaran pillai (2000-1-SCC-712) என்ற வழக்கில் உச்சநீதிமன்றம், உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 6 விதி 17ன் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுக்களை நியாயத்தின் அடிப்படையில் திருத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

                       இதே கருத்தை உச்சநீதிமன்றம் "North Eastern Railway Administration, Korappur Vs Bagavandas (2008-8-SCC-511) என்ற வழக்கிலும் கூறியுள்ளது." T. R. பழனிச்சாமி Vs தெய்வானை (1996-LW-560) என்ற வழக்கில் உச்சநீதிமன்றம், ஒரு வழக்கில் திருத்தம் செய்வதற்கான மனுவை தாக்கல் செய்துள்ள மனுதாரர் அந்த மனுவினை காலதாமதமாக தாக்கல் செய்தார். வேண்டுமென்றே தாக்கல் செய்கிறார் என்கிற காரணங்களை பார்க்காமல் வழக்கு பிரச்சினையை தீர்க்க அந்த மனுவை அனுமதிக்க வேண்டுமா? என்பதை மட்டுமே நீதிமன்றம் தன்னுடைய கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது
.
                        பாகப்பிரிவினை வழக்கில் வாதியால் வழக்கில் சேர்க்காமல் விடப்பட்ட சொத்துக்களை வழக்கில் சேர்க்க கோரி அதற்காக வழக்குரையில் திருத்தம் செய்யும்படி பிரதிவாதி மனுத்தாக்கல் செய்ய உரிமை உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. CRP. NO - 3006/2010, சொலவம்மாள் மற்றும் பலர் Vs ஏழுமலை கவுண்டர் (2011-5-LW-CIVIL-859


யாரெல்லாம் சொத்துக்கு உரிமையாளர்?
இந்து வாரிசுரிமை சட்டத்தின்படி, இது இந்துக் களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற மதத்தினருக்கு வித்தியாசப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
∆ திருமணமான ஆணின் சொத்துக்கு உரிமை: மனைவி, மக்கள் – தாய்
∆ திருமணமான பெண்ணின் சொத்துக்கு உரிமை: கணவன் – பிள்ளைகள்.
∆ திருமணமாகாத ஆணின் சொத்துக்கு உரிமை: – பெற்றோர்
∆ திருமணமாகாத பெண்ணின் சொத்துக்கு உரிமை: – பெற்றோர்.
∆ பெற்றோர்கள் இல்லையென்றால் இருதரப்புக்குமே சகோதர சகோதரிகள் சொத்துக்கு உரிமை கொண்டாடலாம்.
∆ திருமணம் ஆகிவிட்ட ஓர் ஆணின் மனைவி, மக்கள் இறந்து விட்டால், அவருடைய மகன் அல்லது மகள் வயிற்று வாரிசுகளுக்கு நேரடியாக சொத்துப் போக நேரிடும்.
∆ கணவர் இறப்பிற்கு அவரது மனைவியே காரணம் என்று சட்டத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டாலோ அல்லது கணவரது மரண வழக்கில் மனைவி சம்பந்தப்பட்டு இருந்தாலோ மனைவி கணவரது சொத்தில் பங்கு கேட்க முடியாது.
∆ தாத்தா மற்றும் தந்தை சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு இணையாக பெண்ணுக்கும் உரிமை இருக்கிறது. நிலம், வயல் மற்றும் அசையா சொத்துகளை பெண்களும் பிரித்து கொள்ளலாம். ஆனாலும் பாரம்பரியமாக இருக்கும் வீட்டை சகோதரன் விரும்பும் வரை அவரின் சம்மதமில்லாமல் அதை விற்கவோ, விற்பனை செய்து பணம் கொடுக்க வேண்டும் என்றோ அடம் பிடிக்க முடியாது.
இந்த உரிமைகள் எல்லாம் தனிப்பட்ட முறையில் யாருக்குமே உயிலோ அல்லது பாகப்பிரிவினை செய்து வைக்காமல் இருந்தால் மட்டுமே பொருந்தும். உயில் எழுதி வைத்து விட்டால் உயிலின் தன்மையை பொறுத்துதான் அந்த சொத்துக்களை பிரிக்க முடியும். முன்பே சொன்னது போல உயிலை எத்தனை முறையும் எழுதலாம். மாற்றி அமைக்கலாம். கடைசியாக எழுதிய உயிலே செல்லுபடியாகும். எனவே காலம் கடத்தாது உயில் எழுதுங்கள்.

No comments:

Post a Comment