Tuesday, November 28, 2017

கிராம கணக்குகளை ( குடி மக்கள்) சமூக தணிக்கை செய்யலாம்.

கிராம கணக்குகளை ரயத்துகள்(குடி மக்கள்) தணிக்கை செய்யலாம்.
கிராமக் கணக்குகள் சரிவர எழுதப் படுவதில்லை தனது பட்டா சம்பந்தபட்ட விவரங்கள் பதிவு செய்வதில் சந்தேகம் உள்ளது எனக் கருதும் ரயத்துகள்(வரி செலுத்தும் குடி மக்கள்) தங்கள் கிராமத்தின் பின்வரும் கணக்குகளை எவ்விதக் கட்டணமும் இல்லாமல் சமூக தணிக்கை எனும் அடிப்படையில் பார்வையிடலாம், தகவல்களை சேகரிக்கலாம் என அரசு ஆணை நில எண்/329/வருவாய்துறை/நாள் 12-07-2004 இன் வழிகாட்டுதலின் பேரில் வருவாய் நிர்வாக ஆணையர் அவர்கள் தனது சுற்றறிக்கை எண்/வ.நி/6(1)84991/02 நாள் 20-08-2004 இல் ஆணையிட்டுள்ளார்.
பார்வையிட அனுமதிக்கபட்ட பதிவேடுகள்
1) கிராம '' பதிவேடு
2) கிராமக் கணக்கு
3) கிராமக் கணக்கு 1 & 1 A
4) கிராமக் கணக்கு எண் 6 தண்ணீர் தீர்வை
5) கிராமக் கணக்கு எண் 7(1) ஆக்கிரமனம் மற்றும் வருவாய்க் கணக்கு
6) கிராமக் கணக்கு எண் 10(1), சிட்டா 10(2) அந்த கிராமத்தின் எல்லா கணக்குகளிலும் குறிப்பிட்டுள்ள வருவாய் மற்றும் கழிவு ஆகியவற்றை ஒவ்வொரு புல எண் வாரியாக காட்டும், ஜமாபந்தியில் பிரதானமாக பார்க்கப்படும்(பட்டா) பட்டாவாரி கேட்பு(டிமாண்டு) வசூல் பாக்கிப் பதிவேடு.
7) கிராமக் கணக்கு 13 தண்டல் ரொக்க வசூல் பதிவேடு
8) கிராமக் கணக்கு எண் 14, 16 பட்டா வாரியான கேட்பு, வசூல், பாக்கி ஆகிய விவரங்களைக் காட்டும் பதிவேடு.
9) நில அளவு அமைப்பு வரைபடங்கள்

10) புல வரைபடங்கள் புத்தகங்கள்

No comments:

Post a Comment