Wednesday, November 29, 2017

நத்தம் நிலம் என்கிற வகைபாட்டிற்குள் வருகிற நிலையில் யார் பெயருக்கு ஒரு சொத்திற்கான பட்டா உள்ளதோ அவரே உரிமையாளராக கருதப்படுவார்.

 ஒரு நிலம் நத்தம் நிலம் என்கிற வகைபாட்டிற்குள் வருகிற நிலையில், அந்த இடம் யாருடைய சுவாதீனத்தில் உள்ளதோ அவரையே அந்த சொத்தின் உரிமையாளராக கருத வேண்டும். மேற்படி நிலம் குறித்து ஒருவருடைய பெயரில் பட்டா வழங்கப்படவில்லை என்றாலும், நீண்ட நாட்களாக யாருடைய சுவாதீனத்தில் அந்த சொத்து உள்ளதோ அவருக்கு அந்த சொத்தில் ஓர் உரிமை மூலம் ஏற்பட்டு விடுகிறது. இது தான் சட்டத்தின் நிலைப்பாடாகும். யார் பெயருக்கு ஒரு சொத்திற்கான பட்டா உள்ளதோ அவரே உரிமையாளராக கருதப்படுவார்.
 (நத்தம் நிலத்தை பொறுத்தவரை)

                               ஓர் இந்துப் பெண் அவருடைய மூதாதையர் வழி சொத்தை வாரிசுரிமை அடிப்படையில் பெறுவது அல்லது திருமணத்தின் போது அவருக்கு அளிக்கப்படும் சொத்துக்கள் ஆகியவற்றை மட்டுமே சீதனச் சொத்தாக கருத முடியும் என்ற கருத்து பெரும்பாலான மக்களிடம் நிலவி வருகிறது.

                                                                   சென்னை உயர்நீதிமன்றம் " K. Natarajan Vs Sundari and Others (2012-1-MWN-CIVIL-1),(2011-5-LW-341)" என்ற வழக்கில், ஒரு சொத்தை ஓர் இந்துப் பெண் தன்னுடைய சுய சம்பாத்தியத்தின் மூலம் பெற்றிருந்தாலும்கூட அதனை அவருடைய சீதனச் சொத்தாக மித்தாக்சாரா இந்து சட்டப்படி கருதப்பட வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

மித்தாக்சாரா இந்துச் சட்டப்படி, ஓர் இந்துப் பெண் ஒருவர் பல வகையில் சொத்துக்களை பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கீழ்க்கண்ட வகையில் ஓர் இந்துப் பெண் சட்ட ரீதியாக சொத்துக்களை பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
1. உறவினர்களிடமிருந்து கொடையாகவோ, உயில் ஆவணத்தின் மூலமோ பெறலாம்
2. 3 ஆம் நபர்களிடமிருந்து கொடையாகவோ, உயில் ஆவணத்தின் மூலமோ பெறலாம்
3. பாகப்பிரிவினைபடி சொத்தை பெறலாம்
4. வாழ்க்கை பொருளுதவி தொகைக்காக ஒரு சொத்து அளிக்கப்பட்டிருக்கலாம்.
5. வாரிசுரிமை அடிப்படையில் சொத்தை பெற்றிருக்கலாம்
6. தொழிலின் மூலம் சொத்தை பெற்றிருக்கலாம்
7. சமரச உடன்படிக்கையின் அடிப்படையில் சொத்தை பெற்றிருக்கலாம்
8. எதிரிடை உரிமை மூலமாக சொத்தை பெற்றிருக்கலாம்
9. சீதனப் பணத்தின் மூலம் சொத்தை வாங்கியிருக்கலாம். அல்லது சீதனப் பணத்தை சேமித்து வைத்ததில் வந்த வருமானத்தை கொண்டு சொத்தை வாங்கியிருக்கலாம்
10. மேலே குறிப்பிட்டுள்ள வகைமுறைகளின் கீழ் அல்லாமல் உயில் ஆவணங்களின் மூலம் பெறப்பட்ட சொத்துக்களுக்கு கொடையாக அளிக்கப்பட்ட சொத்துக்களாக கருதப்படும்
.
எனவே ஓர் இந்துப் பெண் ஒரு சொத்தை சுயமாக சம்பாதித்திருந்தாலும் கூட அதனை அவருடைய சீதன சொத்தாக தான் இந்து மித்தாக்சாரா சட்டப்படி கருத வேண்டும் என்றும் அந்த பெண்ணின் இறப்பிற்கு பின் இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 14 ன்படி அவருடைய வாரிசுகளுக்கு அந்த சொத்தில் முழு உரிமை ஏற்பட்டு விடும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
S. A. NO - 1308/2014,DT - 17.3.2015
Muthusamy and Others Vs A. Marusamy and Tulasiyammal
(2016-3-MWN-CIVIL-487)
 சென்னை உயர்நீதிமன்றம் " வள்ளியம்மாள் Vs S. ஆறுமுக கவுண்டர் (2001-1-CTC-708)" என்ற வழக்கில், வாதியின் குடும்பத்திற்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத வேற்று மனிதராக பிரதிவாதி உள்ள நிலையில், அந்த உயில் எழுதப்பட்டது குறித்து சந்தேகம் உள்ளது என்கிற ஒரு கோரிக்கையை முன்வைப்பதற்கு பிரதிவாதி தகுதி உடைய நபராக கருத முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.

அதேபோல் சென்னை உயர்நீதிமன்றம் " S. கணேசன் Vs S. குப்புசாமி (2002-2-LW-636)" என்ற வழக்கிலும், உயிலை எழுதி வைத்தவரோடு எந்த வகையிலும் உறவு முறையில் சம்மதம் இல்லாத ஒருவர் ஒர் உயிலை மெய்பிக்க வேண்டும் என்று கோர முடியாது என்றும் இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 68 ன் கீழ் அந்த உயிலை மெய்பிக்கும்படி கோர முடியாது என்றும் தீர்ப்பு கூறியுள்ளது.

எனவே ஓர் உயிலின் உண்மைத்தன்மை குறித்து, அந்த உயிலை எழுதி வைத்தவருக்கு எந்த வகையிலும் உறவினரல்லாத மூன்றாம் நபர் ஒருவர் எந்த ஒரு வினாவையும் எழுப்ப முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
S. A. NO - 1515/1999,DT - 26.4.2016
பாக்கியம்மா Vs இராமசந்திரப்பா
(2016-3-TLNJ-CIVIL-352)

No comments:

Post a Comment