Thursday, November 30, 2017

விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய முடியுமா?

வாகன விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் ஒருவர் மீது இ. த. ச பிரிவு 304(A) ன் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவரின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய முடியுமா?


சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு " P. சேதுராம் Vs வட்டார போக்குவரத்து அலுவலர், திண்டுக்கல் (2010-W.L.R.-100)" என்ற வழக்கில், வாகன விபத்து சம்பந்தப்பட்ட குற்றவியல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது வட்டார போக்குவரத்து அலுவலருக்கு அதிகாரம் இல்லை, அந்த குற்ற வழக்கில் விசாரணை முடிவுற்று தீர்ப்பு அளிக்கப்படும் வரை பொறுமையாக அதிகாரிகள் காத்திருக்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 19(1)ன்படி காவல்துறையினர், எதிரி பிடியாணை வேண்டா குற்றமாக புரிந்துள்ளார் என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்து அதன்பிறகே அவருடைய ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

ஒருவர் மீது இ. த. ச பிரிவு 304(A) ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற ஒரே காரணத்திற்காக அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதற்கு அதிகாரிகளுக்கு அதிகாரமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

W. P. NO - 16958/2013

S. துரைவேலு Vs வட்டார போக்குவரத்து அலுவலர், மேற்கு மாம்பலம், சென்னை

2013-W.L.R.-843

No comments:

Post a Comment