Monday, November 27, 2017

சட்டபிரச்சினை குறித்து தக்க நடவடிக்கை எடுக்ககோரும் புகார் மனு...

மாண்புமிகு. தலைமை நீதியரசர்  அவர்கள்
(மெட்ராஸ் உயர் நீதிமன்றம் சென்னைமுன்னிலையில்

Writ Petition No - ………………./2015
S.ராஜசேகரன் (வயது 40), /பெ.V.சிவனாண்டி
மாநிலதுணைத்தலைவர் Law Foundation Reg. No -26/2010
மாவட்டநிருபர் அரசியல் ரிப்போர்ட்டர்,
68,பிள்ளையார் கோவில் தெரு,
குப்பிநாயக்கன்பட்டி,
போடிநாயக்கனூர்-625513,
தேனி மாவட்டம்.                        –                                             மனுதாரர்
              
எதிர்

திருமிகு அன்பழகன் அவர்கள்,பிரின்ஸ்பில் மாவட்ட முனுசீப் நீதிபதி,
பிரின்ஸ்பில் மாவட்ட முனுசீப் நீதிமன்றம்,
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்,
கோயம்புத்தூர்   -                                                         எதிர்மனுதாரர்-1

ஆருத்ரா டெக்ஸ்டயில்ஸ் அதன் உரிமையாளார் தியாகராஜன் (வயது 51/2015)
மனுதாரர் O.S. NO-1379
கோயம்புத்தூர்   -                                               எதிர்மனுதாரர்-2



பொருள்: இந்திய அரசமைப்பு 1950 – இன் கோட்பாடு 19(1), 21 மற்றும் 226, 227 செயலுறுத்து கட்டளைமற்றும் உரிமையியல் விசாரணை முறை சட்டம் 1908 விதி 113 கட்டளை46 –இன் கீழ் சட்டபிரச்சினை குறித்து தக்க  நடவடிக்கை எடுக்ககோரும் புகார் மனு...

        தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகா, போடிநாயக்கனூர் அஞ்சல், குப்பிநாயக்கன்பட்டி, 68, பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் S.ராஜசேகரன் /பெ. V.சிவனாண்டி, (வயது 40), இந்து, ஆகிய நான்  இந்திய சாட்சிய சட்டம் 1872 – இன் பிரிவு 70 - இன் கீழ் ஏற்புரை செய்து, இந்திய சாட்சிய சட்டம் 1872 – இன் பிரிவு 57(1) படி நாட்டில் அமலிலுள்ள சட்டங்களை நீதிமுறையில் கவனத்தில் எந்த வழக்கிற்கும் குந்தகமின்றி தகவலாக இம்மனு தாக்கல் செய்வது யாதெனில்

1.நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். இந்திய அரசமைப்பு 1950 கோட்பாடு 51()-இன் கடமையாக இம் மனு சமர்பிக்கப்படுகிறது.

2.ஒரு குற்றம் நடக்க இருக்கிறது என்பதை தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பும் அதற்கான சட்டபடியான வழிகளை கையாள வேண்டிய கடமையும்,அதுபற்றி தகவல் தெரிந்தவர்கள் சட்டபடி செயல்படாமல் இருப்பது இந்திய தண்டனைச் சட்டம் 1860-இன் பிரிவு 2-இன் கீழ் குற்றமாகும் அதன் அடிப்படையில் இப்புகார் மனு சமர்பிக்கப்படுகிறது.

3.இந்திய அரசமைப்பு 1950 - இன் கோட்பாடு 375-இன் படிஇந்திய அரசமைப்பில் விதிக்கப்பட்டுள்ள கோட்பாடுகளுக்கு கட்டுபட்டு உரிமையியல் குற்றவியல் மற்றும் வருவாய்த்துறை ஆகிவற்றிற்கான அதிகாரவரம்புள்ள நீதிமன்றங்களும் மற்றும் நீதித்துறை செயல்துறை நிர்வாகத்துறை அலுவலர்களும் அவர்களுடைய அலுவல்களைத் தொடர்ந்து நடத்தி வரவேண்டும் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

4.உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில்நீதிபதிகள் இடமாற்ற வழக்கின், ஏழு நீதிபதிகள் குழுவின் தீர்ப்பு, வறுமை அல்லது வேறு ஏதாவது காரணத்தால் நீதி மன்றத்தை அணுக முடியாதவரது குறையை களையைக்கோரி, நேரடியான பாதிப்புக்கு ஆளாகாதாவர் நீதிமன்றத்தை அணுக முடியுமா என்ற விவாதத்தை தீர்த்துவைத்தது. இத்தகையோரது அடிப்படை சட்டபூர்வமான அல்லது அரசமைப்பு சட்ட உரிமைகளை நிலை நாட்டும் பொருட்டு போதுமான ஈடுபாடு கொண்ட எந்த ஒரு பொது மனிதனும்  ஒரு அஞ்சல் அட்டையின் மூலமாக கூட நீதிமன்றத்தை நாடலாம் ‘(எஸ்.பி.குப்தா மற்றும் ஏனையோர் எதிர் குடியரசுத்தலைவர் மற்றும் ஏனையோர்,AIR 1982 SC 149) என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் இம்மனு பணிவுடன் சமர்பிக்கப்படுகிறது.

5. கோயம்புத்தூர் மாவட்ட முனுசீப்  நீதிமன்றத்தில் அசல் வழக்கு எண்  1379/2014 இன் கீழ் தாக்கல் செய்து அந்த மனுவின் விசாரணையின் மீது  இடை மனுவின் மீது தற்காலிக தடையுத்தரவு I.A.NO-1540/2014  இன் கீழ் மாவட்ட முனுசீப் நீதிபதியால் உத்தரவு பிறப்பிக்கப்ட்டுள்ளது என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

6.மேற்படி அசல் மனுவில் எதிர்மனுதாரர் வழக்கு மூல ஆவணமாக பதிவு பெறாத ஆவணத்தை தாக்கல் செய்திருக்கிறார். அந்த ஆவணம் போலியாக தயாரிக்கப்பட்டதாகும் மேலும் அசல் மனுவில் மனுதாரர் வழக்கு மூலமான  குத்தகை சொத்தில் அட்வான்ஸாக ரூபாய் ஆறு லட்சம் மற்றும் மிசின்கள் மதிப்பு சுமார் 40 லட்சம்  மாத வாடகையாக ரூபாய் 72000  ஆக மொத்தம் வழக்கிடை சொத்து மதிப்பு சுமார் 50 லட்சம் ஆகும். மேற்படி வழக்கில் வழக்கு கட்டணமாக நீதிமன்றத்தில் ரூபாய் 1000 மட்டும் எதிர்மனுதாரர்-2 ஆல் செலுத்தப்பட்டுள்ளது. மேற்படி வழக்கில் தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் வழக்குகள் மதிப்பீட்டு சட்டம் 1955 பிரிவு 25 உட்பிரிவு C –இன் படி வழக்கின் உண்மையான சொத்து மதிப்பான 50 லட்சத்திற்கு  பாதி மதிப்பான நீதிமன்ற கட்டணமாக  250000 லட்சம் செலுத்த வேண்டியதை மறைத்து மாண்பமை நீதிமன்றத்தை ஏமாற்றி இருக்கிறார்கள் என்பதையும் அவர்களின் செயலை மாவட்ட முனுசீப் நீதிபதி அவர்கள் கவனிக்க தவறிவிட்டார் என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

7. மேற்படி வழக்கு உண்மையில் மில் உரிமையாளர் மற்றும் வாடகைக்கு இருப்போர் இருவருக்கிடையே  உள்ள  பிரச்சினைகள்ஆகும். இந்த பிரச்சினைகள் அனைத்தும் தமிழ்நாடு கட்டிடங்கள் (வாடகை மற்றும் குத்தகை கட்டுபாடு) சட்டம் 1960 பிரிவு 10 –இன்கீழ் வாடகை கட்டுபாட்டு நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடுத்து நிவாரணம் பெறமுடியுமே தவிர நேரடியாக உரிமையில் வழக்கு தொடுக்கமுடியாது என்பதை மாண்பமை மாவட்ட முனுசீப் நீதிபதி அவர்கள் கவனத்தில் கொள்ள தவறிவிட்டார் என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

8.Amended as per TN Civil Courts and the Chennai City Civil Court (Amendment)Act 2010  -இன்படி மாவட்ட முனுசீப் நீதிமன்றம் வழக்கு மதிப்பு 20000 (ரூபாய் இருபதாயிரம்) மட்டும் விசாரிக்கமுடியும் என்பதையும் கோயம்புத்தூர் மாவட்ட முனுசீப் நீதிமன்றத்தின் ஆள்வரையரைக்கு உட்படாத வழக்கு மதிப்புக்கு அதிகமான மேற்படி அசல் வழக்கு எண்: 1379/2014 விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது மேற்படி சட்டத்திற்கு எதிரானதாகும் என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

9.சொத்துரிமை மாற்றுச் சட்டம் 1882 பிரிவு 107-இன் கீழ் ஓராண்டுக்கு மேற்பட்ட காலம் எதற்குமான அல்லது ஓராண்டு வாடகைகள் செய்கிற அசையா சொத்தின் குத்தகை , வாடகை ஆகியவை பதிவு செய்யப்பட்ட பத்திரத்தின் மூலமாக செய்யப்படமுடியும் என்பதற்கு எதிராக மனுதாரர் பதிவு செய்யப்படாத ஆவணத்தின் மூலமாக வழக்கு தொடுத்திருப்பது இப்பிரிவுக்கு எதிரனாதாகும் என்பதை தங்களின் மேலான கவனத்திருக்கு கொண்டுவருகிறேன்.

10.சொத்துரிமை மாற்றுச் சட்டம் 1882 பிரிவு 108 உட்பிரிவு ()-இன் படி அசையா சொத்தினை குத்தகை எடுத்தவர் குத்தகை காலம் முடிவடைந்தபின் குத்தகைக்கு விடுபவருக்கு சொந்தமான குத்தகை சொத்தினை சுவாதீனத்தை விடுவது குத்தகை எடுத்தவரின் கடமையாகும்.

11.மெட்ராஸ் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் KONDI VS SELLAMUTHU 2013(2) CTC 510 (Mad)100ரூபாய்க்கு மேல் விலை உள்ள ஒரு அசையும் மற்றும் அசையா சொத்தை உடன்படிக்கை ஏற்படுத்தும்போது அந்த ஆவணம் கட்டாயமாக பதிவு செய்யப்பட்டிருக்கவேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது என்பதையும் இந்த உத்திரவுக்கு எதிராக கோயம்புத்தூர்  மாவட்ட முனுசீப் நீதிமன்றத்தில் அசல் வழக்கு எண்;1379/2014 விசாரணை நடந்து வருகிறது என்பதையும் தங்களின்  கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

12.AIR1995 DEL 105(DB) டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படிசட்டத்தைமீறிய செயலால் ஒருவர் அடைந்த ஆதாயத்தை தக்க வைக்க அவர் நீடிமன்றத்தை அனுகினால் , இடைக்கால தடை ஆணையை வழங்க முடியாது என்று ராவட்மல் ஜெயின் எதிர் டெல்லி வளர்ச்சி குழுமம் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது என்பதை மாண்பமை  நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவருகிரேன்

13.1991 3 Andh LT14(16) – இன் வழக்கு தீர்ப்பில்வழக்கு சொத்தில் அத்துமீறியிருக்கும் நபர் ஒருவர் அந்த சொத்து சம்பந்தமாக உறுத்துகட்டளை  கோரமுடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது என்பதை மாண்பமை  நீதியரசரின்  கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

14. 1996 AIHC 4550 (4558)(P&H) –இன் வழக்கில்வாதிகள் அதிகாரமில்லாத நிலையில் சொத்தொன்றைத் தன் வசத்தில் வைத்திருப்பது கண்டறியப்பட்டிருக்கும் போது, அதில் அவர்களுக்கு உறுதுணையாக உறுத்துக்கட்டளை வழங்கமுடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது என்பதை மாண்பமை நீதியரசரின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்

15.BASKAR VS KUNJAJAMANAR MOHAN (SC) 2014(1) MWW(CIVIL) 103   வழக்கில் கட்டாயமாக பதிவு செய்யப்படவேண்டிய ஆவணத்தை பதிவு செய்யாமல் நீதிமன்றத்தில் ஆவணமாக தாக்கல் செய்ய இயலாது. என்று தீர்ப்பளிக்கப்பட்டது என்பதை மாண்பமை  நீதியரசரின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

16..SIVANANTHAM VS MARAGATHAMMAL 2013 (1) MWN(CIVIL) 541  என்ற வழக்கில் . “ஒரு நபர் தான் அனுபோகத்தில் உள்ள சொத்திற்கு உரிமை மூலம்  இல்லாதபோது உண்மையான உரிமையாளருக்கு எதிராக தடை உத்திரவு கோரமுடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது என்பதை மாண்பமை  நீதியரசரின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

17.PALANIYAMMAL VS ANBALAGAN 2013(1)LW998, 2013 (3) CTC 477  என்ற வழக்கில் , “ பதிவு செய்யப்படாத ஆவணத்தின் பேரில் ஒரு விளம்புகை பரிகாரம் கோரமுடியாது பிரிவு 53 சொத்துரிமை மாற்று சட்டம் 1882 இன் படி விதிவிலக்கு கோரமுடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது என்பதை மாண்பமை நீதியரசரின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

18.LAKSHMANAN VS MUNIYAPPAN 2013 (2) CTC 89(MAD) என்ற வழக்கில் , “ ஒரு ஆவணம் கண்டிப்பாக பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும் என்று ஆவணங்கள் பதிவு சட்டத்தின்படி கூறியுள்ளபடி ஒரு ஆவணத்தை பதிவு செய்யாமல் அந்த ஆவணத்தை சாட்சியமாக நீதிமன்றம் ஏற்கமுடியாது, என்று தீர்ப்பளிக்கப்பட்டது என்பதையும் இந்த உத்திரவுக்கு எதிராக பதிவு செய்யாத போலியாக தயாரித்த வாடகை ஒப்பந்த பத்திரம் மூலமாக  கோயம்புத்தூர்  மாவட்ட முனுசீப் நீதிமன்றத்தில் அசல் வழக்கு எண்;1379 ஏற்கப்பட்டு தற்போது விசாரணையும் நடந்து வருகிறது என்பதையும் தங்களின் மாண்பமை  நீதியரசரின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

19.CONTEMPT PETITION(C) NOS.140-144/2011 IN S.L.P.(C) NOS.27755-27759 OF 2010 M/s Atma Ram Builders P. Ltd. & ..Petitioner

Versus A.K.Tuli & Others ..Respondents என்ற வழக்கில் சட்டத்திற்கு விரோதமாகவும்,உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களுக்கு விரோதாமகவும்,   கீழ்நீதிமன்ற நீதிபதிகள்   வழக்கில் தடை விதிக்கின்றனர் இது ஒட்டுமொத்த நீதித்துறையை கேள்விக்கு ஆளாக்குகிறது இத்தகைய செயலில் ஈடுபடும் நீதிபதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்என்று தெரிவித்து டெல்லி கூடுதல் மாவட்ட நீதிபதி அர்ச்னா சின்ஹா அவர்களை தற்காலிக பணி நீக்கம் செய்ய உத்திரவிட்டது  என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்
Page…4……..The petitioner in these contempt petitions is allowed to implead Archna Sinha, Additional District Judge Central, Delhi. Issue notice to her also. She is directed to remain present in the Court on 10th May, 2011 to explain to this Court how and why she had passed the order dated 23.04.2011 in total defiance of the Order passed by this Court on 06.10.2010. She is also directed to file a personal affidavit before the next date of hearing. She shall also show cause why contempt proceedings be not taken against her and a recommendation be made by this Court for her immediate suspension. Notice may be served dasti to Mr. Ashwani Kumar, Advocate-on-Record for the petitioner in the original Special Leave Petitions Nos. 27755-27759 of 2010. Copy of this Order shall be given to the alleged contemnors and Archna Sinha, Additional District Judge Central, Delhi, forthwith. “………………
Page 5 ………“We are constrained to say that a certain section of the subordinate judiciary in this country is bringing the whole judiciary of India into disrepute by passing orders on extraneous considerations. We do not wish to comment on the various allegations which are often made to us about what
certain members of the subordinate judiciary are doing, but we do want to say that these kind of malpractices have to be totally weeded out. Such subordinate judiciary Judges are bringing a bad name to the whole institution and must
be thrown out of the judiciary.”…..
Hon’ble judge MARKANDEY KATJU,  Hon’ble judge GYAN SUDHA MISRA

SUPREME COURT OF INDIA CIVIL ORIGINAL JURISDICTION
NEW DELHI
MAY 10, 2011

                

       எனவே மாண்புமிகு நீதியரசர் அவர்கள் இப்புகார் மனு மீது பரிசீலனை செய்து,

1. சட்டத்திற்கு விரோதமாகவும், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு மற்றும் பதிவு சட்டம் 1908 பிரிவு 49,சொத்துரிமை மாற்று சட்டம் 1882 பிரிவு 107  விரோதமாகவும்  கோயம்புத்தூர் பிரின்ஸ்பில் மாவட்ட முனுசீப் நீதிமனறத்திலுள்ள அசல் வழக்கு எண்-1379/2014 வழக்கை இந்திய அரசமைப்பு 1950 கோட்பாடு 13(2)-மற்றும் உரிமையியல் விசாரணை முறை சட்டம் 1908 பிரிவு 151-இன் படி ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறும்  மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.



இப்படிக்கு,
தங்களின் உண்மையுள்ள,
                                                                                                                                     

தக்க நடவடிக்கை எடுக்கவும்,பதிலுக்காகவும் நகல் சமர்பிக்கப்படுகிறது :

1.  இந்திய அரசமைப்பு 1950 கோட்பாடு 32 –இன் கீழ் நடவடிக்கைக்காக மாண்புமிகு.தலைமை நீதியரசர் அவர்கள் உச்ச நீதிமன்றம் புது டெல்லி                                                                                               
நுகர்வோர் குறைத்தீர் மன்றம் பற்றிய தகவல்கள் 👆                       
 இழப்பீடு வழக்குகள் :- ரிட் மனு -  
                 
1)- தோட்டத்திற்கு வரும் மின்சார கம்பி (Electric Wire) அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி இறந்த பெண்ணிற்கு மின்சார வாரியம் இழப்பீடு வழங்க வேண்டும். W. P. NO - 17691/2009, K. Sampath@Chidhampara Nathan Vs Supertendent of Engineer, Electricity  Board, Puthuseri (2013-WLR-176).          
              
2)-  தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் இறந்து போன இரண்டு மாணவர்களுக்கு தலா ரூ. 1,50,000/-லட்சத்தை 12% வட்டியுடன் தர வேண்டும், Chinna Thampi Vs State of Tamilnadu (2001-WLR-174).      
                           
3)-  அடைப்பு காவலில் இருந்த ஒருவர் மரணமடைந்ததால் அவருடைய குடும்பத்திற்கு ரூ. 9,00,000/- இழப்பீடு வழங்கி உத்தரவு. Dhanalakshmi Vs State of Tamilnadu (2004-WLR-346).
                              
4)-   அரசு மருத்துவ கல்லூரி விடுதியில் வைத்து கொலை செய்யப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவரின் குடும்பத்தினருக்கு மாநில அரசு ரூ. 5,00,000/- லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். Tmt. R. Selvam Vs State of Tamilnadu (2004-WLR-611).
                              
5)-  சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைக்கப்பட்டு கற்பழிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ. 7,50,000/- இழப்பீடு வழங்க வேண்டும். C. Thekkamalai Vs State of Tamilnadu (2006-WLR-13-DB) 
                                                          
6)-  பள்ளி மாணவர் இறந்து போனதற்கு இழப்பீடு வழங்க வேண்டும். P. N. Kanagaraj Vs State of Tamilnadu (2008-6-CTC-144)        

7)-  அரசு பள்ளியில் படித்து வந்த மாணவர் இறந்து போனதற்கு அந்த பள்ளி ஆசிரியர்களின் கவனக்குறைவே காரணம் என்று கூறி இழப்பீடு வழங்க உத்தரவு Subramaniyan Vs State of Tamilnadu, (2009-1-CTC-434)                                                               

8)-    மதுரை மத்திய சிறை பாதுகாப்பு வார்டனால் சுட்டுக் கொல்லப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ. 9,07,000/- இழப்பீடு வழங்க வேண்டும். Sekaran Vs State of Tamilnadu (2010-WLR-851)                                                   

9)-  உயர்நீதிமன்ற வளாகத்தில் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வசதி இல்லாத காரணத்தினால் இறந்து போன ஒரு வழக்கறிஞரின் குடும்பத்திற்கு ரூ. 10,00,000/- இழப்பீடு வழங்க வேண்டும். (Registrar, Madurai High Court Vs State of Tamilnadu (2011-1-CWC-786)                                             

10)-   சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவருக்கு 100% உடல் ஊனம் ஏற்பட்டதற்காக ரூ. 18,00,000/- இழப்பீடு வழங்க வேண்டும்  RAVI CHANDRAN VS State of Tamilnadu (2011-6-CTC-636)                                                        

No comments:

Post a Comment