Monday, November 27, 2017

ஆவணத்தின் உள்ளடக்கத்தை அனுமதிக்கப்படும் சாட்சியத்தால் நிரூபித்தல் வேண்டும்

ஆவணத்தின் உள்ளடக்கத்தை அனுமதிக்கப்படும் சாட்சியத்தால் நிரூபித்தல் வேண்டும்  Ramji Dayawala & Sons (P) Ltd Vs Invest Import  (AIR-1981-SC-2085)
ஆவணத்தின் புகைப்பட நகலை சாட்சியமாக ஏற்றுக் கொள்ள முடியாது.
Ramesh Varma Vs Lajesh Saxena  (AIR-1998-M.P-46)
ஒரு ஆவணத்தை நிரூபிக்க அந்த ஆவணத்தை எழுதிக் கொடுத்தவரை சாட்சியாக விசாரிக்க வேண்டும் அல்லது அவர் உண்மை உறுதி மொழி ஆவணத்தை (Affidavit) தாக்கல் செய்தல் வேண்டும். (Smt) Ram Janaki Vs Shakuntala Devi
(AIR-1983-Del-330)
இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 65ன் கீழ் உள்ளடங்கி வந்தாலன்றி, மற்றபடி ஒரு ஆவணத்தை முதனிலை சாட்சியத்தை (Primary Evidence) கொண்டு தான் நிரூபிக்க வேண்டும். இரண்டாம் நிலை சாட்சியத்தை (Secondary Evidence) கொண்டு நிரூபிக்க முடியாது. Niloba Gunda Madane Vs Rukhminibai Vithalrao Kulkarani  (2003-1-All - MR-1052)
Dayamathibai Vs K. M. Shaffi (AIR-2004-SC-4082)
பொதுவாக நீதிமன்றம், பிரச்சினைக்குரிய கையொப்பத்துடன் வழக்கு தரப்பினரால் ஒப்புக் கொள்ளப்பட்ட கையொப்பத்தை ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 73ன் கீழ் அவ்வாறு ஒப்பிட்டு பார்ப்பதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்ற போதிலும், அதில் நீதிமன்றத்திற்கு சந்தேகம் ஏற்பட்டால், அதனை கையெழுத்து வல்லுனருக்கு அனுப்பி வைத்தல் வேண்டும். D. Pandi Vs Dhanalakshmi Bank Ltd (2001-2-LW-334)
ஒரு நபருக்கு கையெழுத்து போடத் தெரியும் போது, அவர் ஒரு ஆவணத்தில் கைரேகை இட்டிருந்தால், அந்த ஆவணமும் செல்லக்கூடியதே ஆகும்.
Gangadhar Vs Gangadhar Das (AIR-1986-Ori-173)
அஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட பதிவஞ்சலை பெற்றுக் கொள்ள மறுப்பவர், அதன் உள்ளடக்கத்தை தான் அறிந்திருக்கவில்லை என்று பின்னர் வாதிட முடியாது. Budha Vs Bedriya (AIR-1981-MP-76)

No comments:

Post a Comment