Monday, November 27, 2017

முக்கிய தீர்ப்புகள் உயில், ஜீவனாம்சத்திற்கான உரிமை

1) Hindu Succession Act - sec 63 - உயில் எழுதி வைக்கப்படும்போது உயிலை எழுதி வைக்கும் பெண் மற்றும் உயிலில் கையொப்பமிட்ட சாட்சிகள் அனைவரும் உடன் இருந்தார்கள் என்பதையும், சாட்சிகள் உயிலில் கையொப்பமிடுவதை உயிலை எழுதி வைத்த பெண் பார்த்தார் என்பதையும் நிரூபிக்க வேண்டும்.
(2000-3-MLJ-46)
2)-    தனது விதவை மகளுக்கு அவளது வாழ்நாள் வரையில் ஜீவனாம்சத்திற்கான உரிமை அளித்து ஒரு உயில் எழுதி வைக்கப்பட்டது. அந்த உயில் இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 14(1)ன்படி முழுமையான ஒன்றாகும்.
(2000-3-MLJ-SC-60)&(AIR-2000-SC-1908)
3)-    முஸ்லீம் சட்டம் - வாய்மொழி கொடை செல்லத்தக்கதாகும்.
(AIR-2000-KAR-318)
4)-    முஸ்லீம் சட்டம் - கொடை - முஸ்லீம் கொடையில் 3 கூறுகள் முக்கியமானதாகும். அதாவது கொடை கொடுப்பதற்கான அறிவிப்பு இருக்க வேண்டும். அந்த கொடை யாருக்கு கொடுக்க அறிவிக்கப்படுகிறதோ அவர் அதனை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொள்ள வேண்டும். அந்த கொடையை அவரிடம் ஒப்படைத்தல் வேண்டும்.
(2001-1-MLJ-307)

5)-    சென்னை, பம்பாய் போன்ற மாநகரங்களின் பகுதிகளுக்குள் எழுதி கொடுக்கப்பட்ட உயில் இணைப்புகளுக்குத்தான் உயில் மெய்ப்பிதழ் நடைமுறை பொருந்தும். (AIR-2001-A. P - 326)
6)-     உயில் பதிவு செய்யப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்தாது.
(AIR-2002-Oris-101)
7)-     Hindu Succession Act - sec 61 - Evidence Act - sec 100&101 - உயில் போலியானது என்று யார் கூறுகிறாரோ அவரே அதனை நிரூபிக்க வேண்டும். (AIR-2005-SC-233)

8)-    பிரதிவாதி தரப்பு சாட்சி - 2 ஆல் கருப்பு மையில் உயில் ஆவணம் எழுதப்பட்டது. அந்த உயில் ஆவணத்தில் வேறு மையால் உயிலை எழுதி வைத்தவர் கையெழுத்து போட்டுள்ளார்  இது போலியான உயிலாகும்.
(2005-2-LW-734)

9)-     உயில் பற்றியோ அல்லது உயிலில் இடப்பட்ட சாட்சிக் கையொப்பம் பற்றியோ பிரச்சினை எழாதபோது உயிலில் சாட்சிக் கையொப்பமிட்டுள்ள சாட்சிகளை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
(AIR-1990-KER-226)

10)-    உயிலில் சான்றொப்பமிட்டதை நிரூபிப்பதற்கு உயிலை எழுதி வைத்தவர் முன்னிலையில் சான்றொப்பமிட்டவர் கையெழுத்து செய்தார் என்பதை நிரூபிக்க வேண்டும். (1975-1-Cuttack-WR-512)                       
 தோழர்களே! ஒரு அரசு ஊழியர்
தனது வருவாய்க்கு மேல்தனது குடும்பஉறுப்பினர்களின்

பெயர்களில் சொத்துக்கள் வாங்கி வருகிறார்.

No comments:

Post a Comment