Monday, November 27, 2017

ஆவணங்கள் அனைத்தும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.

வாய்மொழி கொடையின் மூலம் தந்தையால் மகளுக்கு சீதனம் கொடுக்கப்பட்டது செல்லாது. அது உரிமையை வழங்காது. (2008-1-MLJ-743)
கொடை மனைவிக்கே கொடுக்கப்பட்டாலும், அது அசையா சொத்து என்றால், அந்த கொடை ஆவணத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். (AIR-2001-SC-3468)
கொடையாக கொடுக்கப்பட்ட சொத்தின் மதிப்பு ரூ. 100/-க்கு மேல் இருந்தால் அதனை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். Mahavirpal Vs Das Raj (1998-3-LJ-CIVIL-905-HP)
அடமான ஆவணத்தில் ரசீது கொடுக்கப்படும் போது அதனை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். Talajappa Vs Subhas (AIR-2003-KANT-118)
11 மாதங்களுக்கு மேற்பட்ட அசையாச் சொத்தின் குத்தகை பதிவுச் சட்டம் பிரிவு 17(1)()ன் கீழ் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். (AIR-1995-Mad-146)
ரூ. 100/-க்கு மேல் மதிப்பு கொண்ட ஆவணங்கள் அனைத்தும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். G. D. Subramaniyan Vs The Sub Registrar (2009-1-CTC-709)                       


No comments:

Post a Comment