திருமணத்திற்கு பிறகு மனைவியை பராமரிக்க வேண்டியது கணவருடைய கடமையாகும். அவ்வாறு பராமரிக்காமல் மனைவியை நிராகரிக்கும் போது தன்னுடைய கணவனிடமிருந்து ஜீவனாம்சம் கோரி மனைவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் சுருக்க விசாரணை முறையில் (Summary in Nature) விசாரிக்கப்படும் தன்மை கொண்டதாகும். உடனடியாக நிவாரணம் அளிப்பதற்கான சமூக நலனில் கொண்டுள்ள அக்கறையின் காரணமாக அந்த பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் சுருக்கமாகவும், விரைவாகவும் விசாரித்து முடிக்கப்படுகின்றன. இந்த பிரிவின் கீழ் பிறப்பிக்கப்படும் உத்தரவானது இடைக்கால நிவாரணத்தை மட்டுமே அளிக்கிறது. உரிமையியல் நீதிமன்றத்தால் வழங்கப்படும் இறுதி தீர்ப்பினை பொறுத்து, அந்த இடைக்கால நிவாரணத்தில் மாறுதல் ஏற்படலாம்.
பிறன்மனைப் புணர்தல் என்பதை நீதிமன்றம் உளநிறைவு அடையும் வகையில், திருமணம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் மெய்பிக்கப்பட வேண்டும். அந்த காரணத்தின் அடிப்படையில் விவாகரத்து கோரி கணவர் மனுத்தாக்கல் செய்தால் அவர் தான் கள்ளத்தொடர்பை நிரூபிக்க வேண்டும் அவ்வாறு நிரூபிக்கும் வரை மனைவி குற்றமற்றவர் என்ற அனுமானம் மனைவிக்கு சாதகமாக இருக்கும். கள்ளத்தொடர்பு என்ற குற்றச்சாட்டினை நேரடியாக சாட்சிகளை கொண்டு நிரூபிப்பது கடினமானது. சூழ்நிலை சாட்சியங்களின் அடிப்படையில் தான் கள்ளத்தொடர்பை நிரூபிக்க வேண்டும்.
முல்லர் Vs மினிஸ்டர் ஆப் பென்சன்ஸ் (1947-2-ALL.E. R - 372)" என்ற வழக்கில், கள்ளத்தொடர்பு என்பதை சில சந்தர்ப்பங்களின் அடிப்படையில் ஏற்பட்ட சம்பவங்களை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்க கூடாது. மிகவும் தெளிவான, ஏற்றுக்கொள்ளதக்க ஆதாரங்கள் அந்த செயலை நிரூபிக்க தேவை என்றும் கள்ளத்தொடர்பு என்ற குற்றச்சாட்டு மிக கடுமையான குற்றச்சாட்டு என்பதால் அதனை ஒரு குற்றவியல் வழக்கில் சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டினை போல் அதனை விசாரிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறியுள்ளது.
எனவே மனைவி வேறோரு ஆணுடன் தகாத உறவு வைத்துள்ளார் என்பதை கணவர் நீதிமன்றத்தில் ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால் மட்டுமே மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க மறுக்க முடியும் என்று மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRL. RC. NO - 250/2014, DT - 4.1.2016
சந்திரசேகர் Vs ஈஸ்வரி
(2016-1-TLNJ-CRL-64)

No comments:
Post a Comment