2வது மனைவிக்கு எதுவுமே கிடையாதா? இதற்கு சட்டத்தில் வழியே இல்லையா?
நம் நாட்டில் திருமணம் செய்து வைக்கும் பெற்றோர் சில நேரங்களில் சரியாக விசாரணை நடத்தாமல் திருமணம் செய்து கொடுத்து விடுவார்கள். அதன்பிறகே அந்த மாப்பிள்ளைக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்ற விபரம் தெரிய வந்து மிகவும் அவதிக்கு உள்ளாகி தவிப்பார்கள். பல பேர் இதுபோன்ற சம்பவங்களால் தற்கொலை கூட செய்து கொண்டுள்ளார்கள்.
நம் நாட்டு இந்துக்களை பொறுத்தவரை பாலிகமி (Baigamy) எனப்படும் இருதார மணம் தடை செய்யப்பட்டிருப்பதால் முதல் மனைவி உயிரோடிருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொள்வது சட்டப்படி செல்லாது என்று இந்து திருமணச் சட்டம் பிரிவுகள் 5 மற்றும் 11 ல் கூறப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது இ. த. ச பிரிவு 494 ன்படி குற்றமாகும். இதற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் உண்டு.
முதல் மனைவி உயிருடன் இல்லை என்றாலோ, விவாகரத்து பெற்றிருந்தாலோ, முதல் திருமணத்தை நீதிமன்றம் செல்லாது என்று கூறி தீர்ப்பு வழங்கியிருந்தாலோ, முதல் மனைவி கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்தாலோ இருக்கும் நிலையில் ஒரு நபர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் அந்த இரண்டாவது திருமணம் சட்டப்படி செல்லும். ஆனால் கணவன் தன்னுடைய முதல் திருமணத்தை பற்றி இரண்டாவது மனைவியிடம் கூறியிருக்க வேண்டும்.
முதல் மனைவிக்கு நிவாரணம்?
முதல் மனைவி உயிரோடிருக்கும் போது கணவன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால், முதல் மனைவி காவல்துறையில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கலாம். (வெறும் இருதார மணத்திற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கமுடியாது. கூட இரண்டு பிரிவுகள் சேர்ந்து வருமாறு புகார் கொடுக்க வேண்டும்) இதனால் கணவனுக்கு தண்டனை தான் வாங்கி கொடுக்க முடியுமே தவிர நிவாரணம் ஏதும் கிடைக்காது. இது முதல் வழி.
இரண்டாவது வழி முதல் மனைவி கணவனிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டு மனுத்தாக்கல் செய்யலாம். மேலும் குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழும் மனுத்தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம். உணவு, உடை, உறைவிடம், மருத்துவ செலவு, கல்வி செலவு, சொத்தில் உரிமை, சம்பளம் ஜப்தி என அனைத்து வகையான பரிகாரங்களையும் இந்த சட்டத்தின் கீழ் பெண்கள் கோர முடியும். எப்படி என்றால் முதல் மனைவி உயிரோடிருக்கும் போதே கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் திருமணங்களில், முதல் மனைவி மட்டுமே சட்டப்பூர்வமான மனைவி ஆவார்.
இரண்டாவது மனைவியின் நிலை?
முதல் மனைவி உயிரோடிருக்கும் போதே கணவன் செய்து கொண்ட இரண்டாவது திருமணத்தின் மனைவி (2வது மனைவி) க்கு கணவன் மீதோ, அவனது சொத்துக்களின் மீதோ எந்தவித உரிமையும் கிடையாது. அதாவது அவருக்கு மனைவி என்ற அங்கீகாரம் கிடையாது. சாதாரணமாக இரண்டாவது மனைவிக்கு ஜீவனாம்ச உரிமை கூட கிடையாது. ஆனால் சில நேரங்களில் அவரது சூழ்நிலையை கருத்தில் கொண்டு நீதிமன்றம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடலாம் (சட்டப்பூர்வ உரிமை இல்லை). ஆனால் அந்த இரண்டாவது மனைவிக்கு பிறந்த குழந்தைகள் அந்த கணவனின் சட்டப்பூர்வமான குழந்தைகளாக கருதப்படுவார்கள். அக்குழந்தைகளுக்கு கணவனின் சுய சம்பாத்திய சொத்தில் உரிமை உண்டு. ஆனால் பூர்வீக சொத்துக்களில் உரிமை ஏதும் இல்லை.
ஏதாவது முன் தீர்ப்புகள் உள்ளதா?
Savitaben Somabhai Chatiya Vs State of Gujarat and Others, Dt - 10.3.2005
Appeal No - 399/2005 என்ற வழக்கில் நமது உச்சநீதிமன்றம், Crpc sec 125 முறையற்ற வகையில் பிறந்த குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் வழங்க வகை செய்கிறது. ஆனால் சட்டப்பூர்வமற்ற இரண்டாவது மனைவியை அதில் சேர்க்கவில்லை. இவ்வாறு குறைபாடு உள்ளதாக உள்ள இந்த சட்டம் (In Adequacy Of Law), முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவனுடன் இரண்டாவது மனைவியாக உறவு கொண்ட பெண்ணுக்கு எதிராக கொடூரமாக உள்ளது என்று கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த குறைபாட்டை புதிய சட்டத்தால் மட்டுமே சரிப்படுத்த முடியும் என்று கூறியது.
Crpc sec 125 ன் கீழ் இரண்டாவது மனைவி ஜீவனாம்சம் பெற முடியாது என்றால் வேறு ஏதாவது சட்டங்களின் கீழ் பெற வழி உள்ளதா?
Savitaben Vs State of Gujarat என்ற வழக்கில் Crpc sec 125 ன் கீழ் இரண்டாவது மனைவி ஜீவனாம்சம் பெற முடியாது என்று கூறிய உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதிலும், ஒரு பெண் இந்து மகவேற்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் (The Hindu Adoption and maintenance Act) கீழ் பராமரிப்புத் தொகை பெற தகுதியுடையவர் ஆவார் என "நரேந்திர் கர் சாவ்லா Vs M. S. சாவ்லா" என்ற வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
எந்த ஒரு குறிக்கோளை அடையும் நோக்கத்தில் வீட்டை சார்ந்த வன்முறை தடுப்புச் சட்டம் மற்றும் இந்து மகவேற்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டதோ, அத்தகைய சட்டங்களை இயற்றிய நாடாளுமன்றத்தின் நோக்கம் அல்லது எண்ணத்தை பற்றிய துணிவான விளக்கம் வழங்கப்பட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் மேற்கண்ட வழக்கில் கருத்து தெரிவித்தது. மேலும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் இரண்டாவது மனைவிக்கு ஜீவனாம்சம் பெறத் தகுதி இல்லை என்று கூறுவது, தனது முதல் திருமணத்தை மறைத்து, இன்னொரு பெண்ணை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவனுக்கு வெகுமதி அளிப்பது போலாகும் என்றும் கூறியது.
எனவே இந்த மகவேற்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் பிரிவு 18 ன் கீழ் ஜீவனாம்சம் வழங்கும் போது, மேலே குறிப்பிட்ட தீர்ப்பில் உள்ளது போல் இரண்டாவது மனைவியான பெண்களை சட்டப்பூர்வமான மனைவியாக கருதி ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடலாம் என பல வழக்குகளில் நீதிமன்றங்கள் தீர்ப்புகள் வழங்கி உள்ளது.
இதிலிருந்து தெரிவது என்ன?
Savitaben வழக்கில், கணவன் தனது முதல் திருமணத்தை மறைத்து ஏமாற்றி இரண்டாவதாக சவிதாபென் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட போதிலும், அந்த இரண்டாவது மனைவி சட்டப்பூர்வமான மனைவி அல்ல. அதனால் சவிதாபெனுக்கு Crpc sec 125 ன் கீழ் ஜீவனாம்சம் பெற உரிமை இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறுகிறது. ஆனால் அதற்கு மாறாக டெல்லி உயர்நீதிமன்றம், முதல் திருமணத்தை மறைத்து, கணவனால் ஏமாற்றப்பட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பெண்ணை "இந்து மனைவி" யாக கருதலாம் என்றும், அந்த அடிப்படையில் அந்த இரண்டாவது மனைவி "இந்து மகவேற்பு மற்றும் பராமரிப்புச் சட்டம்" பிரிவு 18 ன் கீழ் கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெற உரிமை உடையவராவார் என்பதும் தெளிவாகும்.

No comments:
Post a Comment