Sunday, November 26, 2017

ஜீவனாம்சம் வழக்கு முக்கிய தீர்ப்புகள் :

ஜீவனாம்சம் வழக்கு முக்கிய தீர்ப்புகள் :


1. மனைவி கணவனிடமிருந்து ஒரு தொகையை ஜீவனாம்சமாக பெற்றிருந்தாலும் கூட, அவர் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மேலும் ஜீவனாம்சம் பெறலாம்.
(1995-1-LW-177)

2. தலாக் சொல்லப்பட்ட முகம்மதிய பெண் இதாத் காலத்திற்கு பிறகும் ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது. முகம்மதிய கணவர் தன்னால் விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு இத்தாத் கால கட்டத்திற்கு பிறகும் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும். முகம்மதிய பெண்கள் ("விவாகரத்தின் பேரில் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1986) பிரிவு 4 ன்படி அப்பெண் தன் உறவினர்கள் மீதோ அல்லது வஃபு வாரியத்தின் மீதோ பிரிவு 4 ன் கீழ் ஜீவனாம்சம் கேட்டு மனு கொடுக்கலாம். எனவே குற்றவியல் நடைமுறைச் சட்டம் முகம்மதிய பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று கூறுவது சரியல்ல.
Danial Latiji Vs UOI (AIR-2001-SC-3958)(2001-2-DMC-714)(2001-CRI-LJ-4660)

3. ஜீவனாம்சம் பெற மனுதாரர் புறக்கணிக்கப்பட்டார் என்பதை நிரூபிக்க வேண்டும்.
Bai Thahina Vs Ali Hussain Fissalli
(AIR-1979-SC-36)

4. பெற்றோர்கள் தங்களை தாங்களே பராமரித்து கொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் தங்களது மகன்கள் மற்றும் மகள்களிடமிருந்து ஜீவனாம்சம் கேட்கலாம்.
Dr. Mrs. Vijaya Manohar Vs Kashirao Rajaman Sawai and another (AIR-1987-SC-1100)
(1987-2-SCC-278)

5. சமரச அடிப்படையில் விவாகரத்து பெற்று தனியாக வாழும் மனைவி ஜீவனாம்சம் கோர முடியாது.
K. Pandian Vs A. Savithiri (1998-1-MLJ-CRL-760)

6. மனைவி என்பவர் சட்டப்படி திருமணம் ஆன பெண் ஆவார். ஏற்கனவே திருமணம் நடைபெற்று கணவன் இருப்பவர் மனைவியாக கருதப்படமாட்டார்.
Yamunapai Anantrao Adhav Vs Anantrao Shivasam Adhav (AIR-1988-SC-644)

7. முதல் மனைவி உயிரோடிருக்கும் போதோ அல்லது விவாகரத்து ஆகாமல் இருந்தாலோ, இரண்டாவது மனைவி ஜீவனாம்சம் கோர இயலாது. ஆனால் அவருக்கு பிறந்த குழந்தைகள் ஜீவனாம்சம் கோர முடியும்.
Khemchand Om Prakash Sharma Vs State of Gujarat and Another (2000-3-SCC-753)

8. கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெறும் ஒரு இந்து மனைவி, வேறு ஒரு மதத்திற்கு மாறினால் அவள் தன் கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெறும் தகுதியை இழந்துவிடுவார்.
Rathina Vs Marcel Fernandos (1992-2-CTC-646)

9. ஜீவனாம்சம் கேட்டு கு. வி. மு. ச பிரிவு 125 ன்படி நடக்கும் விசாரணை சுருக்க விசாரணை ஆகும். எனவே தந்தையை தீர்மானிக்க அந்த விசாரணையில் இரத்தப் பரிசோதனை கேட்க முடியாது.
Venkatachalam Vs Amutha Jothi and Others
(1997-2-CTC-763)

10. மனைவி அசையாச் சொத்துக்கு உரிமையாளராக இருந்தாலோ, போதிய அளவுக்கு வசதியாக இருந்தாலோ ஜீவனாம்சம் கோர முடியாது.
Christy Raj Vs Kanagam @ Gnanaprakasi and Another (1997-2-CTC-138)

11. குற்றவியல் நடுவர் இடைக்கால நிவாரணங்களை வழங்க உத்தரவிடலாம்.
Suresh Vs Jaibir (2009-1-DMC-634)

12. குடும்ப உறவு முறையில் உள்ள எல்லா பெண்களும், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் மனுவை தாக்கல் செய்யலாம்.
M. Palani Vs Meenakshi (2008-3-MLJ-855-Mad)(2008-2-CTC-117)

No comments:

Post a Comment