Saturday, November 25, 2017

வயதானவர்கள், தங்கள் குழந்தைகளிடம் ஜீவனாம்சம் கேட்க முடியுமா?



வயதானவர்கள், தங்கள் குழந்தைகளிடம் ஜீவனாம்சம் கேட்க முடியுமா? சட்டம் என்ன சொல்கிறது?


பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டம், 2007

 பிரிவு 4.: பெற்றோர் மற்றும் முதியோர்களின் பராமரிப்பு :


 1. பெற்றோர் உள்ளிட்ட முதியவர் ஒருவர் தனது சம்பாத்தியத்தில் அல்லது தன்னால் தேடி வைத்திருக்கும் சொத்தால் தன்னை தானே பராமரித்து கொள்ள முடியாதபோது, அவர் ஜீவனாம்ச தொகை வேண்டி, பிரிவு 5 இன் கீழ் மனு தாக்கல் செய்வதற்கு உரிமையுடையவராகிறார்.

(i) பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி தனது பிள்ளைகளில் ஒருவரிடமோ அல்லது பலரிடமோ அல்லது ஒரு பேரனிடமோ, அல்லது பேத்தியிடமோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பேரன், பேத்திகளிடமோ ஜீவனாம்சம் கேட்கலாம். ஆனால், அவர்கள் இளவர்களாக (மைனர்களாக) இருத்தல் கூடாது.

(ii) குழந்தை இல்லாத மூத்த குடிமக்களை பொறுத்த வரையில், மகன், மகள், பேரன், பேத்தி ஆகியோரிடமிருந்து ஜீவனாம்சம் கேட்கலாம்.

2. இந்த சட்டப்படி ஜீவனாம்சம் அளிக்க கட்டுப்பாடுடைய பிள்ளைகள் அல்லது உறவினர், முதியவர் ஒருவர் சாதாரணமாக நல்ல முறையில் வாழ்வதற்கு அவசியபடுபவைகளை அளித்து அவரை பராமரிக்க வேண்டும்.

3. இந்த சட்டப்படி பெற்றோர்களை பராமரிப்பதற்கு கடமைப்பட்ட மகனோ அல்லது மகளோ, பெற்றோர் சாதாரணமாக நல்ல முறையில் வாழ்வதற்கு அவசியபடுபவைகளை அளித்து பராமரிக்க வேண்டும்.

4. முதியவரின் உறவினராக இருப்பவர் போதுமான வசதி வாய்ப்புடன் இருக்கும்போது, அவர் முதியவரின் சொத்தை பெற்றிருந்தாலும், இல்லை என்றாலும் அவர் இறந்த பிறகு அவரது சொத்தை அடைவதற்குரிய வாரிசாக இருந்தால், அவர் அந்த முதியவருக்கு ஜீவனாம்சம் அளித்து பராமரிக்க கடமைப்பட்டவராவார்.

வரம்புரையாக :

முதியவர் ஒருவர் இறந்த பிறகு, அவரது சொத்தை வாரிசு அடிப்படையில் அடையும் உறவினர்கள் ஒருவருக்கு மேற்பட்டவராக இருக்கும்போது அவர்கள் இறந்து போகும் அந்த முதியவரின் சொத்தில் எந்த அளவில் பாகம் பெறுவார்களோ, அந்த விகிதாசாரத்தில் அந்த முதியவருக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment