பெற்றோர்கள்... ஏன், "உயில்" எழுத வேண்டும்..?
பெற்றோர்கள் அவர்களுடைய சொத்துக்கள் அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்கள் விருப்பப்படிய யாருக்குச் சேர வேண்டும் என்பதை மிகச் சரியாகத் தீர்மானிக்க உயில்கள் உதவுகின்றன.
உயில்கள் எழுதப்படாத நிலையில், சொத்துக்கள் சட்டப்படி பகிர்ந்தளிக்கப்படும், மேலும் நீதிமன்றம் அதை கையாளுவதற்கு யாரேனும் ஒரு நபரை நியமிக்கும்.
இது குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படக் காரணமாக இருக்கலாம். உங்கள் சொத்துக்களை உங்களுக்குப் பிரியமானவர்களுக்கு மாற்ற கடினமான நீண்ட கால செயல் முறைகளுக்கு வழிவகுக்கும்.
அவர்கள் நியமனப்பட்டவர்களை ஏற்கனவே நியமித்திருந்தாலும் உயில் எழுதுவது அவசியமானதா?
நியமனப்பட்டவர் சட்டப்பூர்வமான வாரிசாக இல்லாமல் வெறுமனே சொத்துக்களை கவனித்துக் கொள்ளும் நபராக மட்டுமே இருப்பதால் அனைத்துச் சொத்துக்களும் சட்டப்பூர்வமாக வாரிசு தாரருக்கு மாற்றப்படுகிறது. உயில் எழுதப்படாத பட்சத்தில் வாரிசுகளை சட்டம் தீர்மானிக்கிறது. நியமனப்பட்டவர்கள் வாரிசு தாரர்களாக இல்லாத பட்சத்தில் அது தகராறில் முடியும்.
உயில் எப்படி தயாரிக்க வேண்டும்?
உயிலை சாதாரண காகிதத்திலோ இல்லையெனில் முத்திரைத் தாளிலிலோ எழுதலாம். கையிலும் எழுதலாம். அச்சிடப்படலாம். உயில் சாசனம் எழுதுபவர் வெவ்வேறு நிறங்களான மையை பயன்படுத்தக் கூடாது.
உயில் சாசனம் எழுதுபவர் கடைசி வாக்கியத்திற்கு சற்று கீழே கையெழுத்திட வேண்டும். ஏனென்றால் அந்த கையெழுத்திற்கு கீழே உயிலில் எழுதப்படும் எதுவும் உயிலின் ஒரு பகுதியாக கருதப்பட மாட்டாது.
இரண்டு சாட்சிதாரர்களால் கையெழுத்திடப்பட வேண்டும். உயில் சாசனம் எழுதியவர் மற்றும் உயிலின் பயனாளர் இருவரின் பெயர், வயது, முகவரி மற்றும் பல விவரங்கள் விவரமாக எழுதப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு சொத்தின் விவரங்களும் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
No comments:
Post a Comment