வங்கிப் பிரச்னைகளைத் தீர்க்க
நம் பணப்பரிவர்த்தனைகளை எளிதாக்கத்தான் வங்கிகள். ஆனால், அந்த வங்கிகள் தொடர்பான பிரச்னைகளே சில சமயம் நம்மை பெரும் கவலையில் தள்ளி விடுவதுண்டு. கல்விக் கடன் தர மறுப்பது, நம் கிரெடிட் அல்லது டெபிட் கார்டில் இருந்து பணத்தை சல்லிசாக யாரோ சுரண்டிவிடுவது, இன்டர்நெட் பேங்கிங் ஐடியைத் திருடி லட்சக்கணக்கான பணத்தை லபக்கிவிடுவது... என பல்வேறு வங்கிப் பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு காணும் ஆபத்பாந்தவன்தான் ஆம்புட்ஸ்மென் என்றழைக்கப்படும் வங்கிக் குறை தீர்ப்பாயம்!
இந்திய ரிசர்வ் வங்கியால் நடத்தப்படும் இந்த அமைப்பின் தென்மண்டல தலைமை அலுவலகம், சென்னை ரிசர்வ் வங்கியில் இயங்குகிறது. இந்த அமைப்பிடம் எப்படிப்பட்ட பிரச்னைகளை நாம் கொண்டு செல்ல முடியும் என்று விளக்கினார் இதன் தென்மண்டலத் தலைவர் கணேஷ்.
‘‘கடந்த ஆண்டில் மட்டும் சுமார் ஆறாயிரம் புகார்கள் எங்களிடம் வந்தன. ஒருவரின் கிரெடிட் கார்டு மூலம் அவர் வங்கிக் கணக்கிலிருந்து இன்னொருவருக்கு பணம் போன பிரச்னை, ஒருவரின் வங்கிக் கணக்கு எண்ணில் இன்னொருவர் போலியான கணக்கை உருவாக்கி பணம் எடுத்த பிரச்னை என்று பலவற்றை எங்கள் தலையீட்டால் தீர்த்திருக்கிறோம். கிரெடிட் கார்டு மற்றும் இன்டர்நெட் பேங்கிங் முறைகளில்தான் இன்று அதிகப்படியான சிக்கல்கள் ஏற்படுகின்றன.
வங்கி தொடர்பான பிரச்னைகளை எங்களிடம் கொண்டுவருவதற்கு முன், சம்பந்தப்பட்ட வங்கியில் அந்தப் பிரச்னையைத் தீர்க்க முயற்சி செய்திருக்க வேண்டும். ஒரு மாத காலத்துக்குள் பிரச்னை தீர்க்கப்படவில்லை என்றால் எங்களிடம் முறையிடலாம். முறையான ஆதாரங்களுடன் புகார்களைத் தருவது நல்லது. எங்களின் சேவைக்கு எந்த கட்டணமும் கிடையாது.
கல்விக் கடனைப் பொறுத்தவரை ஒவ்வொரு வங்கியும் கடன் வழங்கக் கடமைப்பட்டுள்ளது. ஆனால், எவ்வளவு சதவீதம் என்பதில் வித்தியாசம் உண்டு. இந்த அடிப்படையிலும் லோன் கிடைக்காதபோது எங்களிடம் முறையிடலாம்’’ என்றார் அவர்.
வங்கிகள் சொல்வதே வேத வாக்கு என்று இனி நாம் கையைப் பிசைந்து கொண்டிருக்க வேண்டியதில்லை!
- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்
புகார்களைத் தெரிவிக்க தீர்ப்பாயம் வழங்கும் ஒரு படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். அந்தப் படிவத்தை அவர்களது இணையதளத்தில் பெற முடியும். பூர்த்தி செய்த புகார் படிவங்களை மின்னஞ்சல், ஃபேக்ஸ், தபால் மூலமாக அனுப்பலாம்.
இணையதளம் : www.rbi.org.in
மின்னஞ்சல் : bochennai@rbi.org.in
ஃபேக்ஸ் : 044-25395488
முகவரி : வங்கிக் குறை தீர்ப்பாளர், இந்திய ரிசர்வ் வங்கி, இரண்டாம் தளம், 16, கோட்டைச் சரிவு, ராஜாஜி சாலை, சென்னை-600001.

No comments:
Post a Comment